ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 2, 2022) வேலையில் புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 2, 2022) வேலையில் புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய தினம் சில சிக்கலான வேலைகளை முடிக்க டீம் வொர்க் தேவைப்படலாம், எனவே சக ஊழியர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்வது நல்லது. ஒருவேலை நீங்கள் திருமணமான நபருடன் உறவில் இருந்தால், உங்களைப் பற்றி சுற்றி இருப்பவர்கள் தேவையில்லாத யுகங்களை செய்யக்கூடும், இருப்பினும் நீங்கள் அதை எல்லாம் புறக்கணித்து விட்டு உங்கள் நலனில் அக்கறை செலுத்த ஏற்ற நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஜோடி சூட்கேஸ்கள்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு நட்சத்திர பலன்கள் அனுகூலமாக இருப்பதால், இன்று நீங்கள் யார் என்பதை நிரூபிப்பதற்கான அதிர்ஷ்டமும், வெற்றி வாய்ப்பும் கிடைக்கும். எளிமையாக இருப்பதற்காக பாராட்டுக்களையும், வெகுமதிகளையும் பெறக்கூடிய நாள். பண விஷயத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பூக்கடை

மிதுனம்:

இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் வேலையை முடிப்பது பெரும் சவாலாக அமையக்கூடும். உங்கள் மனநிலையை சமநிலைப்படுத்த ஜர்னல் எழுதுவது அல்லது அதிகாலையில் எழுந்து தியானம் செய்வது போன்ற விஷயங்களை பின்பற்றலாம். இன்றைய தினம் ஏற்கனவே பிரச்சனையில் இருக்கும் ஒருநபரை கிண்டல் செய்வதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சூரிய அஸ்தமனம்

கடகம்:

நம்பிக்கை தான் வாழ்வின் முக்கியமான ஆதாரமாக இருந்து வருகிறது. எனவே உங்களை சுற்றியிருப்பவர்களை மெல்ல, மெல்ல நம்பத் தொடங்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை காண்பீர்கள். இன்று மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் நன்கொடை வழங்க வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய நாற்காலி

சிம்மம்:

உங்களைப் பற்றிய வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பீர்கள், மேலும் அதன் மூலமாக சுற்றியிருப்பவர்கள் குறித்த யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. செய்யும் வேலையை எப்போதும் போல் நம்பிக்கையுடன் திறம்பட செய்வது, பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வழிவகுக்கும். இன்று வழக்கத்தை விட பரபரப்பான நாளாக இருந்தாலும் சில விஷயங்களை தள்ளிப்போடாமல் உடனே செய்து முடிக்க திட்டமிடுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரப்பர் ஆலை

கன்னி:

நன்கு பரிட்சியமான ஒருவருக்கு உங்களிடம் இருந்து எமோஷனல் சப்போர்ட் தேவைப்படலாம். சம்பாதிக்கும் பணத்தை சரியான முறையில் சேமிக்க உங்களுக்கு கூடுதல் ஊக்கம் தேவைப்படக்கூடும். கடந்த சில நாட்களாகவே நீடித்து வரும் உடல் நல பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வெள்ளி ஸ்பூன்

துலாம்:

இன்றைய தினம் உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. இன்று நீங்கள் சந்திக்கப்போகும் முக்கியமான நபர், உங்கள் எதிர்காலத்தையே மாற்றக்கூடியவராக இருக்கலாம். வழக்கத்திற்கு மாறாக நன்கொடை அல்லது சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நீல நிற ஸ்போர்ட்ஸ் பேக்

விருச்சிகம்:

இன்றைய தினம் காலை நேரம் கடினமாக இருந்தாலும், மாலையில் நீங்கள் நினைப்பது போல் இயல்பாக நாள் நகரக்கூடும். எதைப் பற்றியும் தவறாக புரிந்து கொள்வதை தவிர்க்க, உங்களுடைய தகவல் தொடர்புகளை சரியாக வைத்திருக்க வேண்டும். இன்று உங்களுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு தேவைப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வண்ணக் கண்ணாடி

தனுசு:

இன்று உங்களுக்கு பிடித்தமான முறையில் நாளை ஆரம்பிக்க ஏற்ற நாள். இன்றைய தினம் புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று சிறிய அளவில் திருட்டு நடப்பதற்கான வாய்ப்புள்ளதால் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய பால் பண்ணை

மகரம்:

நெருங்கிய நண்பர்களைக் கூட நம்பாமல் விலகி இருக்கிறீர்கள், இனி அதற்கான தேவை இல்லை. வீட்டில் உள்ளவர்களை மகிழ்விக்க ஏற்ற நாள். இன்று ஒப்பந்தம், கையொப்பமிடல், சொத்து வாங்குவது, விற்பது என எந்த விஷயமாக இருந்தாலும், ஆவணங்களை நன்றாக ஆராய வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிவப்பு செங்கல் சுவர்

கும்பம்:

இன்றைய தினம் மனதிற்கு நெருக்கமான அல்லது அன்புக்குரியவர்களிடம் மனம் விட்டு பேச ஏற்ற நாள். உங்களுக்கு எதிராக சதி செய்யக்கூடிய நபரிடம் இருந்து சற்றே விலகி இருப்பது நல்லது. இன்றைய தினம் பகிர்வு மற்றும் பிணைப்பின் ஆற்றலைக் கொண்டுள்ளதால், நீங்கள் பழைய நண்பர்கள் அல்லது உறவுகளுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பிரகாசமான இன்டீரியர் டிசைன்

மீனம்:

புதிய நடைமுறை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும், நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். இன்று புதிய முதலீடுகள் மூலமாக தேவையில்லாமல் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். பழைய நண்பர்களுடன் திடீர் சந்திப்பு அல்லது போனில் பேசும் வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தங்க நட்சத்திரம்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks