ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசி அலுவலக ஊழியர்களுக்கு இன்று (நவம்பர் 16, 2022) பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.!

தெய்வீக வாக்கு: இந்த ராசி அலுவலக ஊழியர்களுக்கு இன்று (நவம்பர் 16, 2022) பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய தினம் உங்களுக்கான புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவை சிறப்பாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணி ஒன்று நிறைவு பெற இருக்கிறது. நீண்ட பயணத்திற்கு வழிவகை செய்யும் யோசனை ஒன்று உதிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில் இறகு.

ரிஷபம்:

நிலுவையில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தற்போது தீர்வு ஏற்பட இருக்கிறது. உங்கள் குழுவில் இணையும் புதிய நபரால் புத்துணர்ச்சி கிடைக்கும். வார இறுதியில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சோஃபா.

மிதுனம்:

உங்கள் ஆழ் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கான தருணம் இது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒருவர், தான் ஏமாற்றப்பட்டதாக உணரக்கூடும். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலரும் பூ.

கடகம்:

உங்களை சுற்றியுள்ள ஒத்த கருத்துடைய மக்களுடன் ஒன்றிணைவதற்கான நாளாகும். உறவினர்கள் சிலர் உங்களை சந்திப்பதற்கு திட்டமிட்டு வருகின்றனர். அக்கம்பக்கத்தில் இருந்து வரும் தொந்தரவுகளுக்கு செவி மடுக்க வேண்டாம். அது உங்கள் நேரத்திற்கும், ஆற்றலுக்கும் வீண் விரயமாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலிக்கான்.

சிம்மம்:

நீங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பு ஒன்றுக்கு, இன்னும் கூடுதலான கவனம் தேவை. உங்களுடைய அடுத்தடுத்த வெற்றிகளை கண்டு பழைய சக ஊழியர் ஒருவர் பொறாமை கொள்ள கூடும். சின்ன, சின்ன திருட்டு குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கலை நியமிக்க சுவர்.

கன்னி:

பழைய மற்றும் நிலுவையில் உள்ள விஷயங்கள் குறித்து புதிய புரிதல் ஏற்படும். உங்கள் அறிவுரையை கேட்கும் நண்பர் ஒருவர் அதனை உண்மையில் பயன்படுத்துவதில்லை. கடனை அடைப்பது எளிமையாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரிஸ்டல்.

துலாம்:

நீங்கள் உயரத்தை தொட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு ஏற்றபடி கடுமையாக உழைப்பதுடன், இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையலாம் - தேக்கு மரம்.

விருச்சிகம்:

புதிய நட்புகள் உருவாகுவதற்கான தருணம் இது. கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த இருக்கிறீர்கள். உங்கள் வங்கி மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நிலம் தொடர்பான ஆவணம் கையெழுத்தாக இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்டம் அடையாளம் - முத்து.

தனுசு:

அக்கம் பக்கத்தில் இருக்கக்கூடிய ஒருவர் உங்களுக்கு உண்மையாகவே உதவியாக இருப்பார். உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க தயாராக இல்லை என்றாலும், இந்த எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும். திடீர் பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவார்ட்ஸ்.

மகரம்:

சில சமயம் உங்களை நீங்கள் ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். அதுதான் நன்மை பயக்கும். உங்களைவிட வேகமாக பயணிக்கும் மக்களுக்கு உங்களின் உதவி தேவைப்படாது. பணிச்சூழலை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு புள்ளி.

கும்பம்:

அனைத்து சமயங்களிலும் எதார்த்தமாக இருப்பதினால் உங்களுக்கு எரிச்சல் உணர்வு ஏற்படக் கூடும். ஏதோ ஒன்றை நீங்கள் முக்கியமானதாக கருதுகிறீர்கள். ஆனால் அதை புறம்தள்ள வேண்டும். முதலீடுகள் சாதுர்யமாக அமைய வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு.

மீனம்:

நீங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பு ஒன்றை முடிப்பதற்கு இன்னும் நிறைய முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கும். பொது சேவை சார்ந்த விஷயங்களில் நீங்கள் உள்ளீர்கள் என்றால் இன்றைய நாள் சிரமம் மிகுந்ததாக இருக்கும். நீண்ட பயணங்களை தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு.

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News