• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடி என தெரிந்து கொள்வது எப்படி? உங்களுக்கு எந்த ராசிகள் பொருத்தமாக இருக்கும்

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடி என தெரிந்து கொள்வது எப்படி? உங்களுக்கு எந்த ராசிகள் பொருத்தமாக இருக்கும்

மாதிரி படம்

மாதிரி படம்

உங்களின் காதல் உங்களுடைய காதலர் அல்லது காதலிக்கு வெறும் விளையாட்டா அல்லது நிஜமான காதலா என்ற தவிப்பு உள்ளதா? உங்கள் ராசியைத் தேர்வு செய்து, காதல் ஜாதகத்தை இங்கே பெற்றுக்கொள்ளவும்.

  • Share this:
ஒவ்வொரு திருமணமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனக்கான இணை, வாழ்நாள் முழுவதும் உடன் வரக்கூடிய அந்த ஸ்பெஷல் நபர் எங்கேயோ இருக்கிறார் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்ததுண்டு. அதே நேரத்தில், உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், உங்கள் ஆத்மார்த்தமான துணையை நீங்கள் சந்திக்கும் போது, இந்த உலகமே மிகவும் அழகான, மகிழ்ச்சியான மற்றும் மேன்மையான இடமாக மாறும். கனவில் தோன்றுவது போல, சுற்றியிருப்பவை அனைத்தும் வண்ணங்கள் தீண்டியதைப் போல உணர்வைத் தரும்.

பலரும், அத்தகையை ஆத்மார்த்தமான துணையை சந்தித்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலருக்கு, பொருத்தமான வாழ்க்கைத் துணை கிடைக்காமல், சரியான துணையை தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் நீங்களும் இருக்கிறீர்களா?

சரியான துணையை எப்படித் தேர்வு செய்வது? சுவையான உணவுக்கு தேவையான பொருட்கள் இருப்பது போல், அழகான வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான துணை வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? அதனை நீங்கள் உணர்ந்து விட்டால், நீங்கள் நேசத்திற்கான கச்சிதமான செயல்முறையைக் கண்டறிந்து விட்டீர்கள்!

மிகவும் ஆழமாக, ஆர்வத்துடன், உண்மையாக, காதலிப்பவர்களுக்கு ஏற்றவாறு துணை கிடைப்பது போல அற்புதம் வேறு எதுவும் இல்லை. உங்களுக்கு மிகவும் ஏற்றவாறு இருக்கும் ஒருவர், நீங்கள் மிகவும் இணக்கமாக இருக்கும் ஒருவர், தினசரி கோபமும், சண்டையும், விவாதங்களும் இருக்கும் போதிலும், வாழ்நாள் முழுவதும் செலவழிக்கத் தயாராக இருக்கும் ஒருவர். இவற்றையெல்லாம் நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? இவை எல்லாமே, இவருக்கு இவர் தான் பொருத்தம் என்று கிரகங்களால் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதல்லவா?

உங்களின் காதல் உங்களுடைய காதலர் அல்லது காதலிக்கு வெறும் விளையாட்டா அல்லது நிஜமான காதலா என்ற தவிப்பு உள்ளதா? உங்கள் ராசியைத் தேர்வு செய்து, காதல் ஜாதகத்தை இங்கே பெற்றுக்கொள்ளவும்.

ஜோதிடத்தின் படி, உங்கள் ராசியின் அடிப்படையில், உங்களுக்கு மிகவும் பொருத்தமான ராசிகள் எவை என்று கணித்து, உங்களுக்கு மிகவும் இணக்கமான காதல் ராசியை கூற முடியும். சிண்ட்ரல்லாவின் காலில் கச்சிதமாக பொருந்திய அழகான கண்ணாடி செருப்பைப் போல, குறிப்பிட்ட ராசியினர் இணக்கமான ஜோடியாக சேர்ந்தால், ஒருவர் மற்றவரின் தனிப்பட்ட ஆளுமைப் பண்பை ஏற்று நடப்பார்கள்.

இன்னும் ஏன் தாமதம்? இப்போதே உங்கள் ராசிக்கு ஏற்ற, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ராசிக்கான சிறந்த ஜோடியைத் தேடுங்கள்.

மேஷம்: நெருப்போடு விளையாடு

ஜாதகக் கட்டத்தின் முதல் ராசி மேஷம். இந்த ராசிகாரர்கள், அதிகப்படியான உற்சாகம், எல்லையில்லா ஆற்றல் மற்றும் சிறந்தவற்றில் சிறந்ததாக இருக்க ஆசைப்படுபவர்கள். இதயம் பலகீனமானவர்களுக்கு, இந்த ராசியினவரைக் காதலிப்பது பொருந்தாது. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் நெருப்பை போல இயல்பு கொண்டவர்கள்.

இணக்கமான ராசிகள்: மேஷ ராசியின் டைனமிக் ஆளுமைத்தன்மை, காற்று ராசிகளான மிதுனம் மற்றும் கும்ப ராசியைச் சேர்ந்தவர்களுடன், அவர்களின் கண்டறியும் திறன் மற்றும் வெளிப்படையான தன்மையுடன் அழகாக பொருந்துகிறது. இவர்களின் பரபரப்பான உற்சாகத்துடன், மற்ற இரு நெருப்பு ராசிகளை சேர்ந்த சிம்மம் மற்றும் தனுசு ராசியினர் பொருத்தமாக இருப்பார்கள்.

ரிஷபம்: உங்களுக்காக ஒட்டுமொத்த காதலையும் வழங்கும் ராசி

ரிஷப ராசியினர், நில ராசியைச் சேந்தவர்கள், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நடைமுறை அணுகுமுறையைக் கொண்டவர்கள். கடமை உணர்வு மிக்கவர்கள், தன்மையான மனோபாவம் உடையவர்கள் மற்றும் உறுதியான, முறையான நடத்தைக் கொண்டவர்கள்.

இணக்கமான ராசிகள்: நீச்சல் கற்றவர்களுக்கு தண்ணீரில் நீந்துவது எவ்வளவு எளிமையானதோ, அதே போல, இந்த எளிமையான ரிஷப ராசியினருக்கு நீர் ராசிகளான கடகம் மற்றும் மீன ராசியினர் மிகவும் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள். (நிலத்தை நீர் வளப்படுத்துகிறது). வாழ்வின் மேம்பட்ட விஷயங்களுக்காக ஒருவரையொருவர் பாராட்டி, மேம்படுத்துவதால், மற்ற நில ராசிகளைச் சேர்ந்தவர்களும் பொருத்தமாக இருப்பார்கள்.

மிதுனம்: இரண்டு முகங்களைக் கையாள வேண்டும்

இரட்டையர்களைக் சின்னமாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களைக் காதலிப்பது என்பது, ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போல இருக்கும். இருந்தாலும், அதுவும் ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும். மிதுன ராசியினர் சாகசத்தையும், அனைவரிடமும் நன்றாகப் பழகுவதையும் விரும்புவார்கள். நெட்வொர்க்கிங், மற்றவர்களோடு உரையாடுதல், தகவல் தொடர்பு அனைத்துமே அவர்களின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது.

இணக்கமான ராசிகள்: மற்ற காற்று ராசிகளான – துலாம் மற்றும் கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள், மிதுன ராசியினரைப் போலவே, ஒரே மாதிரியான சிந்தனைகளைக் கொண்டவர்கள். மேலும், இவர்களின் புத்திசாலித்தனையும் பாராட்டுவார்கள். ஆனால், மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் எதிர்மாறானவர்களிடம் தான் ஈர்ப்பை உணர்வார்கள். எனவே, தங்கள் ராசிக்கு எதிர்மாறாக இருக்கும், ஆற்றல் மிகுந்த தனுசு ராசியினரிடம் தான் தங்களுக்கான காதலை மிதுன ராசியினர் உணர்வார்கள்.

Also Read : 12 ராசிக்காரர்களும் காதலில் செய்யும் தவறுகள் - உங்கள் ராசி எப்படி?

கடகம்: உணர்ச்சிபூர்வமான காதல்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி, இரக்க உணர்வு, சென்சிடிவிட்டி, ரொமான்ஸ், நெருக்கம் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டுள்ளனர். இவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பதால், தங்கள் உலகில் மற்றவர்களை அனுமதிக்கும் முன்பு, ராசியினருக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் மிகவும் உருவாக்குவது முக்கியம்.

இணக்கமான ராசிகள்: விருச்சிகம் மற்றும் மீன ராசியினரும் நீர் ராசியைச் சேர்ந்தவர்கள். எனவே, இந்த இரண்டு ராசிகளும் கடகத்துக்கு பொருத்தமாக இருக்கும். ஆனால், (உங்கள்குக்கு தெரியும், எப்போதும் அங்கேயொரு ஆனால் என்பது இருக்கிறது), நில ராசியான மகரம், கடகத்தின் பாதுகாக்கும் இயல்பை மதிப்பார்கள். அது அவர்களை சிறந்த ஜோடியாக ஆக்குகிறது.

சிம்மம்: இவர்கள் கர்ஜிக்கக் கூடும்

சிங்கம் தான் காட்டின் ராஜா. அதே போல, சிம்ம ராசி, சூரியனை ஆளும், சூரியன் ஆட்சியாக இருக்கும் ராசி. எனவே, வெளிப்படையான தன்மையும், தன்னைச் சார்ந்திருக்கும் குணங்களும் இவர்களைப் பற்றி தெரிவிக்கும். கவன ஈர்ப்பை இவர்கள் விரும்புகிறார்கள். மேலும், சிம்ம ராசியினர் சாகசப் பிரியர்கள் மற்றும் சட்டென்று ஏதேனும் பெரிதாக செய்வதை விரும்புவர்கள்.

இணக்கமான ராசிகள்: சிம்ம ராசியினர் அனைத்து ராசியினருடனும் நன்றாகப் பழகும் தன்மைக் கொண்டவர். மேலும், அனைவராலும் விரும்பப்படுபவர். சாகசம், திரில்லான அனுபவத்தை விரும்புவதால், இவர்கள் நில ராசிகளுடன் மிகவும் இணக்கமாகப் பொருந்துவார்கள், இவர்கள் ஜோடி நீடித்து நிலைக்கும். தீவிர நெருப்பு ராசியான சிம்மத்திற்கு, எதிர்மாறான காற்று இசையைச் சேர்ந்த கும்ப ராசி நல்ல பொருத்தமாக இருக்கும். கும்ப ராசி, மக்களைக் குறிக்கும். அதே நேரத்தில், சந்தேகமே இல்லாமல், சிம்ம ராசியினர் தான் அங்கே ராஜாக்களாக, ராணிகளாக இருப்பார்கள்.

கன்னி: கச்சிதமான ஒருவரை கையாள வேண்டும்

கன்னி ராசியினர் புத்திசாலித்தனத்தின் உச்சமாக கருதப்படுபவர். இவர்கள் நம்ப முடியாத அளவுக்கு தர்க்கரீதியானவர்கள், மற்றும் தன்னிகரில்லாத பகுப்பாய்வுத் திறனும், நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படும் திறமைகளையும் கொண்டுள்ளனர். தன்னுடைய ஆரோக்கியத்தில் எந்த அளவுக்கு விவேகமாக அக்கறையாக இருக்கிறார்களோ, அதே போல, மற்றவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கன்னி ராசியினர் அக்கறைக் கொண்டுள்ளனர்.

இணக்கமான ராசிகள்: இந்த தன்மையான ராசி, நீர் ராசியுடன் இணக்கமாக பொருந்தும். இந்த ராசிகள் இணைவது, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும். அதே நேரத்தில், தன்னுடைய சக நில ராசிகளுடனும் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள்.

துலாம்: உங்களுக்கு பாஸ்!

துலாம் ராசியினர் பெரிய நண்பர்கள் வட்டத்தைக் கொண்டிருப்பவர்கள், அனைவரோடும் நன்றாகப் பழகுபவர்கள். மேலும், இவர்கள் தலைமை தாங்குவதை விரும்பும் தந்திரமானவர்கள். இந்த ராசியின் சின்னம், நியாயத் தராசு. எனவே, இவர்கள் அமைதிக்கு தங்களை அர்பணித்துக் கொள்பவர்கள். எனவே, நீங்களும் அமைதியைத் தேடுபவராக இருந்தால், துலாம் ராசியோடு இணக்கமாகிவிடுவீர்கள்.

இணக்கமான ராசிகள்: அதிரும் கொண்டாட்டம் மற்றும் சாமர்த்தியத்தை கொண்டு வரும், நெருப்பு ராசிகளை, துலாம் ராசியினர் மிகவும் விரும்புவார்கள். அதே நேரத்தில், துலாம் ராசியினர், தங்களின் மற்ற காற்று ராசிகளுடனும், இணக்கமாக, அமைதியான, அழகான உறவில் இணையலாம்.

விருச்சிகம்: இவர்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்கள்

விருச்சிக ராசியைப் போல துணிச்சல் கொண்டவர்கள் இல்லை. வாழ்க்கைக் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளை அடைய தங்களின் உள்ளுணர்வுத் திறன்களை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்களோ, அதே அளவு உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளார்கள்.

இணக்கமான ராசிகள்: கடகம் மற்றும் மீனம், விருச்சிகத்திற்கு மிகவும் பொருத்தமான ராசிகள். ஏனென்றால், விருச்சிகத்தின் தீவிரமான ஆற்றலுக்கு, இந்த இரண்டு ராசிகளும் மிகவும் இணக்கமாக இருப்பார்கள். ஸ்திரமான தன்மைக் கொண்ட நில ராசிகளும், துள்ளும் விருச்சிக ராசியை கொஞ்சம் நிதானப்படுத்த உதவி செய்வார்கள். ராசிச் சக்கரத்திலேயே மிகவும் சென்ஷுவல் ராசியான ரிஷபம், விருச்சிகத்துடன் இணைந்தால், சிறந்த எராடிக் ஜோடியாக விளங்குவார்கள்.

Also Read : உங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது? தெரிந்து கொள்ளுங்கள்

தனுசு: நீங்கள் நிறைய ஆராய வேண்டும்

காற்று ராசியான தனுசு ராசி, வில்லம்பு வைத்திருக்கும் சின்னத்தை குறிக்கிறது. இது, இதயபூர்வமாக, ஒரு சாகசக்காரரைக் குறிக்கிறது. குறைந்த பட்சமாக கூற, இந்த ராசியினரின் நகைச்சுவை உணர்வும், எதையும் முன் தயாரிப்பு இல்லாமல் இவர்கள் விவரிப்பதும், அனைவரையும் எளிதாக கவர்ந்துவிடும். தனுசு ராசியினர் காட்டுத்தீயைப் போன்றவர்கள். எந்த சூழ்நிலையையும், மந்தமாக இருக்கவே விடமாட்டார்கள்.

இணக்கமான ராசிகள்: மேஷம் மற்றும் சிம்ம ராசிகள் இவருக்கு பொருத்தமான ராசியினராக இருப்பார்கள். ஏனென்றால், தீ போன்று ஒளிரும் தனுசுக்கு தேவையான எரிபொருளாய், இந்த ராசியினர், ஒரு திர்ல்லிங்கான உறவை வழங்க முடியும். மிதுன ராசியைச் சேர்ந்தவர், தனுசு ராசியைத் திருமணம் செய்தால், அங்கே ஒரு மேஜிக் உருவாகும். இந்த இரண்டு ராசிகளும், தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்து வாழ்பவர்கள். மேலும். ஒருவருக்கொருவர், தன்னிகரில்லாத, நிபந்தனைகள் இல்லாத ஆதரவு வழங்கி, சாகசமான வாழ்க்கைப்பயணத்தில் உறுதுணையாக இருக்கிறார்கள்.

மகரம்: பாதுகாப்பு உணர்வு எப்போதும் இங்கே இருக்கும்

மகர ராசியினர் மிகவும் லட்சியவாதிகள். மேலும், பாதுகாப்பான எதிர்காலத்துக்காக, மிகவும் கடினமாக உழைப்பவர்கள். மகர ராசியினர், நில ராசியைச் சேர்ந்தவர்கள். தங்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும், வேலை, தொழில், உறவுகள் மற்றும் குடும்பம் உட்பட, ஒரு உறுதியான அடித்தளத்தை உருவாக்குகிறார்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், நிலைத்தன்மையோடு இருப்பது இவர்களின் அற்புதமான பலம் ஆகும்.

இணக்கமான ராசிகள்: சக நில ராசிகளான, ரிஷபம் மற்றும் கன்னி இவர்களைப் போன்ற குறிக்கோளுடன் வாழ்பவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். பல விதங்களில் எதிர்மாறாயாக இருந்தாலும், காதல் மற்றும் வாழ்க்கை மீது இவர்களுக்கு இருக்கும் பாரம்பரியமான கண்ணோட்டம், கடகம் மற்றும் மகர ராசியினரை இணக்கமான ஜோடியாக மாற்றுகிறது.

கும்பம்: கண்ணாடி மாளிகையில் வாழ்க்கை

இந்த காற்று ராசி, அற்புதமான அறிவாற்றல் திறன்களைக் கொண்டுள்ளது. தன்னுடைய சமுதாயமும், மக்களும் மேம்பட உதவி செய்து ஊக்குவிக்கிறது. இந்த ராசியினர், தங்களின் மனிதாபிமான செயல்களுக்காக பெரிதும் அறியப்படுகிறார்கள்.

இணக்கமான ராசிகள்: வாழ்வின் மீது தனித்துவமான கண்ணோட்டம் கொண்ட கும்ப ராசியினருக்கு, மிதுனம் மற்றும் துலாம் ராசியினர் நல்ல வாழ்க்க்கைத்துணையாக இருப்பார்கள். ஏனென்றால், இவர்கள் ஆபத்தை எதிர்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இருந்தாலும், நேர்மையாகச் சொல்லவேண்டுமென்றால், இணக்கம் மற்றும் பொருத்தம் என்று வரும் போது, மழையை ஏற்றுக்கொள்ளும் பூமியைப் போல, குறையில்லாத ஜோடியாக, சிம்மம் மிகவும் பொருத்தமாக ராசியாக அமைந்துள்ளது.

மீனம்: அதீத ஒழுங்குமுறை

நீர் ராசியான மீனம் ராசியில் பிறந்தவர்கள், தங்கள் கலை ரீதியான உள்ளுணர்வு மற்றும் இரக்க குணத்திற்கு மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள் இதயபூர்வமாக காதலிப்பவர்கள். ஆனால், நடைமுறையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் மூளையுடன் போராடுகிறார்கள். இவர்களுக்கு, வாழ்வில் ஒரு ஒழுங்குமுறை தேவை.

இணக்கமான ராசிகள்: ஒரு நீர் ராசியாக, மீன ராசி, சக நீர் ராசிகளான கடகம் மற்றும் விருச்சிகத்துடன் மிகவும் பொருந்தும். இருந்தாலும், இவர்களின் மிகவும் தன்னடக்கமான குணம், இணக்கத்தைப் பொறுத்தவரை மற்றவர்களை விட கூடுதல் நன்மையாக இருக்கிறது. மீனமும், கன்னியும், தங்கள் உதவும் குணத்தால், தாராள மனப்பான்மையால், அற்புதமான பொருத்தத்தைக் கொண்டுள்ள ராசிகள்.

என்ன செய்யலாம்:

காதல் என்பது மிகவும் கடினமான, சில நேரங்களில் விரும்பத்தகாத தலைப்பு. புதிய உறவின் தொடக்கத்தில், நாம் அனைவருமே கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்டதைப் போலவே உணர்வோம். உங்களுடைய காதல் துல்லியமானது, வாழ்நாளுக்குமானது என்பதை குறிக்கும் சமிக்ஞைகளை தேடிக் கொண்டே இருப்போம். நாம் சரியான ஜோடி தானா என்ற கேள்வி இருக்கும், அதை உறுதி செய்ய முனைப்புகளும் இருக்கும். ஜோதிடம், உங்களின் கேள்விகளுக்கு, உங்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் கருவி. நீங்கள், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட சிறந்த ஜோடிதானா என்பதை கணிக்க ஜோதிடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: