ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஜோதிடப்படி காதலிப்பவர்கள் பொதுவாகத் தோற்பதில்லையாம்...

ஜோதிடப்படி காதலிப்பவர்கள் பொதுவாகத் தோற்பதில்லையாம்...

காதலுக்கான ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும். துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம்.

காதலுக்கான ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும். துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம்.

காதலுக்கான ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும். துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  உலகில் காதலிக்காத உயிர்களே இல்லை. சிலருக்கு காதல் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும். சிலரோ காதலை ஜஸ்ட் லைக் தட் ஆக நினைப்பார்கள். சிலர் காதலோடு கசிந்து உருகுபவர்கள். சில ராசிகாரர்களுக்கு காதல் ஒத்து வரும். சில ராசிகாரர்களுக்கு காதல் எல்லாம் செட்டே ஆகாது. காதலித்து செட் ஆகவில்லை என்றால் சிலர் சமத்தாக வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொள்வார்கள். எந்த ராசிக்காரர்கள் காதலில் கசிந்து உருகுவார்கள் யாருக்கு காதல் ஒத்து வரும் யாருடைய காதல் சக்சஸ் ஆகும் என்று நீங்கள் காதலிக்கும் நபரின் ராசியை வைத்து... உங்கள் இருவருக்கும் நல்ல உறவு கடைசி வரையில் நீடிக்குமா?... இல்லை நீடிக்காதா?... என்பதை அறிந்து கொள்ளலாம். இது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க...

  ஜோதிடத்தில் சில ராசிகளை வசிய ராசிகள் என்று சொல்வோம். உங்களுக்குப் புரியும் படியாகச் சொல்ல வேண்டும் எனில்... காரணமே இல்லாமல் சிலரை சிலருக்கு ரொம்பப் பிடிக்கும். இதற்கு அவர்களின் இரு ராசிகளும் வசியத்தன்மை பெற்று இருப்பதே காரணம்.

  உதாரணமாக, மேஷம் - சிம்மம் - விருச்சிகம் இந்த மூன்று ராசிகளும் ஒன்றுக்கு ஒன்று வசியத் தன்மை வாய்ந்தது. இதே வகையில்...

  ரிஷபம் - கடகம் - துலாம்

  மிதுனம் - கன்னி

  கடகம் - விருச்சிகம் - தனுசு

  சிம்மம் - மகரம்

  கன்னி - ரிஷபம் - மீனம்

  துலாம் - மகரம்

  விருச்சிகம் - கடகம் - கன்னி

  தனுசு - மீனம்

  மகரம் - கும்பம்

  மீனம் - மகரம்

  காதல்

  ஆகிய இவை அனைத்துமே வசியத் தன்மை கொண்ட ராசிகள் தான். இந்த ராசிகளைக் கொண்ட காதலர்களுக்கு பிரச்சனைகள் வந்தாலும் கூட அவற்றை காலப் போக்கில் பேசித் தீர்த்துக் கொண்டு மீண்டும் இணக்கமாக இணைந்து விடுவார்கள். இதை தவிர...

  1. உங்கள் காதலரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில்... உங்கள் சுய ஜாதகத்தில் சூரியன் நின்று விட்டால் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்.

  2. உங்கள் காதலியின் ஜாதகத்தில் குரு வீற்று இருக்கும் இடத்தில் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வீற்று இருந்தாலும் உங்கள் காதல் வெல்லும்.

  மேலும் படிக்க... புரட்டாசியில் பிறந்தவர்களுக்கான பலன்!

  3. உங்கள் காதலரின் ஜாதகத்தில் காணப்படும் லக்கினம், காதலியின் ஜாதகத்தில் 7 ஆம் இடமாக அமைந்து விட்டால் கடைசி வரையில் காதலர்கள் இருவரும் ஒத்துமையாக இருப்பார்கள். இப்படியாக ஜோதிட அடிப்படையில் காதல் செய்தீர்கள் என்றால் உங்கள் காதல் இனிக்கும்.

  4. காதலுக்கான ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும். துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம்.

  5.உங்கள் ஜாதகத்தில் உள்ள 5ம் வீட்டு அதிபதி உங்கள் ஜாதகத்தில் 7ம் இடத்தில் இருந்தாலோ, 7ம் வீட்டு அதிபதி உங்கள் ஜாதகத்தில் 5ம் இடத்தில் இருந்தாலோ, அல்லது இருவரும் சேர்ந்து 7ம் வீட்டில் இருப்பதாலும் காதல் அமைப்பு இருக்கும்.

  மேலும் படிக்க... பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் உமா மகேஸ்வர விரதம்...

  திருமணம் கைகூட தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Love