ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு நண்பர்களின் ஆதரவு இன்றைய (அக்டோபர் 31, 2022) நாளை இனிமையானதாக மாற்றும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு நண்பர்களின் ஆதரவு இன்றைய (அக்டோபர் 31, 2022) நாளை இனிமையானதாக மாற்றும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

புதிய விஷயம் ஒன்றின் மீது உங்களுக்கு திடீரென பிறக்கும் ஆர்வம் காரணமாக மற்ற உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படலாம். சரியான சந்தர்ப்பம் அமைந்துள்ளதால் புதிய தொழில் அல்லது வணிகம் சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்ள நீங்கள் வேகம் காட்டலாம். உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஒருவர் நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் கண்காணித்துக் கொண்டிருப்பார்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சூரியகாந்தி

ரிஷபம்:

இன்று புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வர வாய்ப்புள்ளது. இன்றைய தினம் பெரும்பாலான நேரத்தை அமைதியான முறையில் செலவிட விரும்புவீர்கள். புதிய நிதி திட்டங்களில் முதலீடு செய்யும் எண்ணம் தோன்றலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் நிற மெழுகுவர்த்தி

மிதுனம்:

இன்று உங்கள் நண்பர் அல்லது பழைய கூட்டாளி ஒருவர் முன்னறிவிப்பு இல்லாமல் வீட்டிற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்க வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருப்பதால், இன்று அலுவலகத்தில் கவனச்சிதறல் ஏற்படும். நெருங்கிய நண்பர் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புத்தர் சிலை

கடகம்:

இன்று நீங்கள் வழக்கத்தை விட கூடுதல் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடு செய்த பணம் மூலம் இப்போது வருமானம் கிடைக்கத் தொடங்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கிட்டார்

சிம்மம்:

முன்பெல்லாம் கடினமான வேலைகள் ஒதுக்கப்படும் போது அதுபற்றிய எதிர்ப்பை முகத்திலேயே காண்பித்து வந்த நீங்கள், இப்போது உங்கள் உடல்மொழியில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம். நண்பர்களின் ஆதரவு உங்கள் நாளை இனிமையானதாக மாற்றும். வயது முதிர்ச்சி மற்றும் அனுபவத்தின் வாயிலாக சரியான முடிவை நீங்கள் எடுக்கக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கொடி

கன்னி:

தொழில் அல்லது வேலை சம்பந்தமான விஷயங்களில் சுயமாக முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் சில கவலை அளிக்கக்கூடிய விஷயங்களை காண நேரிடலாம். பயணத்திட்டங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கீசெயின்

துலாம்:

ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் குறித்த விவாதம் முன்கூட்டியே ஆரம்பித்திருக்கலாம். அதில் குடும்ப உறுப்பினர்கள் சொல்லும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளையும் காது கொடுத்து கேட்க தயாராக இருப்பீர்கள். சிறிது காலத்திற்கு பண வரவு மந்தமாக இருக்கக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சுவர் ஓவியம்

விருச்சிகம்:

எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு என்பது இருக்க முடியாது. எனவே அடுத்தவருடைய தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கும் முன்பு, வார்த்தைகளை நிதானமாக கையாளுங்கள். இன்றைய தினம் பதற்றமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது போல் நீங்கள் உணரலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கருப்பு டைரி

தனுசு:

சொத்தைக் காட்டிக்காப்பதிலும், நிதி விஷயங்களை கையாள்வதிலும் சில இடையூறுகளை சந்திக்கக்கூடும். பிள்ளைகளுக்கு உங்களிடம் இருந்து உணர்வுப்பூர்வமான சப்போர்ட் தேவைப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நீல நிற படிகம்

மகரம்:

இன்றைய பரபரப்பான நாளில் நேரமே இல்லாதது போல் தோன்றினாலும், நீங்கள் பொழுதுபோக்கிற்காக வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கலாம். மனதை அமைதிப்படுத்த தியானம் அல்லது இசை சம்பந்தமான பயிற்சிகளை முயற்சிக்கலாம். நகர வாழ்க்கை அல்லது பரபரப்பான வேலை காரணமாக மனதளவில் உங்களை நீங்களே தொலைத்துவிட்டது போல் உணரலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - டீ கப்

கும்பம்:

என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வுடன் இன்றைய நாளை கிக்ஸ்டார்ட் செய்வீர்கள். வேலை அல்லது தொழில் சம்பந்தமாக உங்களுக்கு ஏற்ற வாய்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கக்கூடும். இன்றைய தினம் உங்களுக்கு தேவையானவற்றை வாங்க ஷாப்பிங் செல்லவும் வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செஸ் போர்டு

மீனம்:

உங்களுடனான வாக்குவாதத்தில் இறுதியாக பெற்றோரே வெல்வார்கள், அவர்களுடைய கருத்து தான் இறுதி செய்யப்படும். நீங்கள் நெருக்கமாக இருந்ததாக கருதிய நபர், இப்போது உங்களை புறக்கணிக்கலாம். முக்கியமான விஷயத்தில் நீங்கள் எடுக்கும் கடைசி நேர முடிவு சிறப்பானதாக அமையலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - லிமிடெட் எடிஷன் கட்டுரை

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks