Rasi Palan : சிம்மம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 04 முதல் ஜுலை 10 வரை)

சிம்மம்

சிம்ம ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

    சொல்லே உயிர் என்பதற்கேற்ப சொல்லும் சொற்களை வெல்லும் சொற்களாக காட்டி உண்மையும் உழைப்பும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டும் சிம்ம ராசி அன்பர்களே,

    நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்பப்படும். ஆன்மீக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத்தரும். வீடு மனை வாகன வகைகள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தம் செய்யவும் நல்வாய்ப்புகள் வந்து சேரும்.

    உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியின் பொருட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வர நேரலாம். மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார வரவுகள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் வகையில் பலன்கள் நடக்கும். உங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட தயக்கம் காட்டிய ஊழியர்கள் கூட உங்கள் சொல்லை மதித்து நடக்கும் நிலைகள் உண்டாகும்.

    வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.  லாபவிகிதங்களை கணக்கில் கொண்டு புதிய மூலதன்ததை தொழிலில் போடுவார்கள். சொகுசான ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து மேன்மை பெறுவார்கள்.

    பெண்கள் நிர்வாகத்திடமிருந்து தேவையான கலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் தங்கள் உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதால் உறவினர்களின் பாசப்பிணைப்பு குடும்ப மேன்மைக்கு உதவிக்காரமான இருக்கும்.

    மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும். நண்பர்களுடன் உரையாடுவதால் புதிய ஞானம் பிறக்கும். தெய்வ நம்பிக்கை பெருகுவதால் மனம் அமைதியாக இருக்கும.

    பரிகாரம்: ஞாயிற்றுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு நெய் மற்றும் தேன் கொடுக்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
    Published by:Karthick S
    First published: