முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Rasi Palan : சிம்மம் ராசிக்கான இந்த வார ராசிபலன் | மே 17 முதல் மே 23 வரை

Rasi Palan : சிம்மம் ராசிக்கான இந்த வார ராசிபலன் | மே 17 முதல் மே 23 வரை

சிம்மம்

சிம்மம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Last Updated :

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள்.

வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதங்கள் அகலும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். சுபச்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். கலைத்துறையினருக்கு காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

பரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Horoscope 2021, Rasi Palan