Rasi Palan : சிம்மம் - இந்த வார ராசி பலன் (ஜூன் 27 முதல் ஜூலை 03 வரை)

சிம்மம்

சிம்மம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

    இந்த வாரம் உங்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் நிமித்தமாக  இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும்.

    உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். பு

    திய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் காணலாம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம். பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.

    அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடையலாம். அலைச்சல் இருக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

    பரிகாரம்: ஞாயிறுற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்று 3 முறை வலம் வரவும்.
    Published by:Vijay R
    First published: