Rasi Palan : சிம்மம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 18முதல் ஜுலை 24வரை)

சிம்மம்

சிம்மம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்): கம்பீரமான தோற்றத்தை உடைய சிம்ம ராசியினரே, நீங்கள் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் பெற்று இருப்பீர்கள். இந்த வாரம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும்.

    புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்கு வரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார் கள். பணவரத்தும் இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மை யாக பேசி பழகுவது நல்லது. தகப்பனா ருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளு டன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்க ளது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.

    பெண்களுக்கு மனதில் இருந்த குழப் பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளி வான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
    Published by:Vaijayanthi S
    First published: