• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : சிம்மம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை)

Rasi Palan : சிம்மம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை)

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்): இந்த வாரம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

    தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

    குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.

    மேலும் படிக்க.. நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: