Home /News /spiritual /

Rasi Palan : சிம்மம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

Rasi Palan : சிம்மம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

சிம்மம்

சிம்மம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிம்மம்

    இந்த வாரம் வீடு, மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள்  செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் சுபச்செலவு உண்டாகும். பெண்களுக்கு மனதில் ஒருவித கவலை இருக்கும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

    சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக  படித்து முடிப்பீர்கள். பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

    பரிகாரம்:  முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

    மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி