உங்கள் கடின உழைப்பு மற்றும் கர்மாவின் அடிப்படையில் பலன்களைத் தரும், சவால்களை ஏற்படுத்தும், கடினமான காலங்களை எதிர்கொள்ள வைக்கும் கிரகங்களில் முதன்மையானது சனி. இந்த ஆண்டில் கும்பம் மற்றும் மகரம் என்று இரண்டு சொந்த ராசிகளிலும் சஞ்சரிக்கும் சனி, தற்போது கும்ப ராசியில் வக்கிரமாகிறார். ஜூன் 5, 2022 முதல் வக்கிரமாகும் சனி, ஒவ்வொரு ராசிக்கும் அசாதாரண மாற்றங்களைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.
ஒரு கிரகம் வக்கிரமடைகிறது என்பது பின்னோக்கி சுழல்வதைக் குறிக்கிறது. வேத ஜோதிடத்தில் நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு, ஆகியவற்றின் காரகங்களாகக் கருதப்படும் சனி, வக்கிரமாகும் போது அது நம் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ஒவ்வொரு ராசிக்கும் எத்தகைய பலன்களைத் தரும் என்று பார்க்கலாம்.
மேஷ ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: உடல் நலத்தில் கவனம் தேவை
கும்பத்தில் சனியின் வக்கிர காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு சவாலாக இருக்கும்.உங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.நிதியைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் பிரச்சனைகள் ஏற்படாது. வணிகம் மற்றும் சொந்தமாக தொழில் செய்பவர்கள் ஒரு சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.
ரிஷப ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்
டாஸ்க் மாஸ்டர் என்று கூறப்படும் சனி உங்களிடம் இருந்து சிறந்தவற்றை வெளிபடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும். அதனால் பணிச்சுமை அதிகரிக்கலாம், நீங்கள் கொஞ்சம் சோர்வாக உணரலாம்.வாழ்க்கைத்துணை அல்லது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், தேவையற்ற சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது.பண ரீதியாக நீங்கள் சரியாக திட்டமிட்டு நிர்வகித்தால், எந்த பிரச்சனையும் ஏற்படாது. சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் தொழில்முனைவோர் வேளைகளில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும்.
மிதுன ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: புதிய திட்டங்களைத் தவிர்க்க வேண்டும்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்கிர காலத்தில் எந்த வகையான பெரிய முதலீடுகளையும். புதிய திட்டங்களையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வணிகர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் புதிய திட்டங்களைத் தொடங்கக்கூடாது. ஏற்கனவே எப்படி இருக்கிறதோ, இன்னும் சில மாதங்களுக்கு ஏற்கனவே உள்ள வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.அது மட்டுமின்றி, உங்கள் குடும்பத்துக்காக மற்றும் திருமண உறவு ஆகியவற்றில் ஒற்றுமையையும் பராமரிக்க நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.
கடக ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: அமைதி, பொறுமை தேவை
கடக ராசிக்காரர்களுக்கு, இந்த சனியின் வக்கிர காலம் உணர்வுபூர்வமான சில கவலைகளை ஏற்படுத்தலாம்.மன சஞ்சலம் அதிகரிக்கும் காலம் இது. தேவையில்லாமல் சிந்தித்து உங்கள் மன அமைதியை கெடுத்துக் கொள்ள வேண்டாம். வீடு, வேலை, வணிகம் என்று எந்த இடத்திலும் சிறிய அசௌகரியம் கூட உங்களை பெரிதாக பாதிக்கலாம். ஆனால், இந்த காலகட்டத்தில் பொறுமையும் அமைதியும் அவசியம். இல்லையென்றால் தேவையில்லாத மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தீவிரமான பாதிப்பை ஏற்படலாம்.
சிம்ம ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து விடுங்கள்
சிம்ம ராசிக்காரர்கள் வக்கிர சனி காலம் முழுவதும் கொஞ்சம் படபடப்பாக, பதற்றமாக உணரலாம்.எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை உடனடியாக தீர்த்து விடுவது அவசியம். அதுவாக சரியாகிவிடும் என்றும் அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தாமதிக்க வேண்டாம். திருமணமான தம்பதிகள், காதலிப்பவர்களின் உறவுகள் மேம்படும். அதற்கு ஒருவருக்கொருவரின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
கன்னி ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: எதிரிகள், கடன் மற்றும் உடல்நலத்தில் கூடுதல் கவனம்
சனியின் வக்கிர காலத்தில், கன்னி ராசிக்காரர்களின் உறவுகளில், உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.கடன் வாங்கும் முயற்சிகளை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். தற்போது கடன் வாங்குவது அல்லது வசதிக்கு மீறி செலவு செய்வது பெரிய பிரச்சனைகளில் சிக்க வைக்கும். அதே போல மறைமுக எதிரிகள் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஊழியர்கள் மற்றும் வணிகர்களுக்கு சக ஊழியர்களால் சவால்கள் ஏற்படலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rasi Palan, Sani Peyarchi