Rasi Palan : ரிஷபம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 25முதல் ஜுலை 31வரை)

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்): சொன்ன நேரத்தில் சொன்ன வாக்கைக் காப்பாற்றும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதர்கள், நண்பர்கள் ஆகியோருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். வாழ்க்கைத்துணையுடன் தேவையில்லாமல் கருத்து மோதல்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எந்த விஷயத்தில் ஆனாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது உங்களுக்கு நன்மையைத் தரும். தந்தையார், தந்தையார் வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் தீரும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேர வேண்டிய காலம் கணிந்து விட்டது என்று சொல்லலாம்.

    தொழிலதிபர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். உப தொழில் ஆரம்பிப்பதற்கான சூழிநிலை ஏற்படும்.  தேக்க நிலை அடியோடு மாறும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணியிடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்ல வேண்டி வரலாம்.

    மாணவர்களைப் பொறுத்த வரை இந்த காலகட்டத்தில் வெளிநாடு சென்று படிப்பதற்கான சூழ்நிலை காணப்படும். மேற்படிப்பு படிப்பதற்கான இருந்து வந்த தடைகள் நீங்கும்.

    பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து வலம் வரவும்.
    Published by:Vaijayanthi S
    First published: