• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : ரிஷபம் - இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07வரை)

Rasi Palan : ரிஷபம் - இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07வரை)

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்): இந்த வாரம் மனதில் நிம்மதி உண்டாகும். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் சுபச்செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும்.

    பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்கள் காரிய வெற்றி அடைவார்கள்.

    கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

    பரிகாரம்:  மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: