Rasi Palan : ரிஷபம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

ரிஷபம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    ரிஷபம்

    இந்த வாரம் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் இருக்கிறது. வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

    தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற  வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் கவனம் தேவை. பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும்.

    அரசியல்வாதிகளுக்கு வரவு நன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். விளையாட்டு போட்டிகளின் போது உடல் நலத்தின் மீது அதிக கவனம் அவசியம்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி

    பரிகாரம்:  திருப்பாவை சொல்லி தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

    மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: