Today Rasi Palan: இன்றைய ராசிபலன் (ஏப்ரல் 26, 2021)

Today Rasi Palan: இன்றைய ராசிபலன்  (ஏப்ரல் 26, 2021)

இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (ஏப்ரல் 26, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்

    இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    ரிஷபம்

    இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். தொழில் தொடர்பாக அலய வேண்டி இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

    மிதுனம்

    இன்று யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    கடகம்

    இன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், தாமதமாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    சிம்மம்

    இன்று குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும். சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும்  புகழும் உண்டாகும். மாணவர்கள் சகமாணவர்களை  அனுசரித்து செல்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

    அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    கன்னி

    இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

    துலாம்

    இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    விருச்சிகம்

    இன்று சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள்.தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    தனுசு

    இன்று மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள்  விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

    மகரம்

    இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    கும்பம்

    இன்று எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்ப்பீர்கள். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

    மீனம்

    இன்று வயிறு தொடர்பான  நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும்.  பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: