ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஆங்கிலப் புத்தாண்டு விருச்சிகம் ராசிக்கான பலன்கள் - தடைகள் இருந்தாலும் செல்வாக்கு உயரும்.!

2023 ஆங்கிலப் புத்தாண்டு விருச்சிகம் ராசிக்கான பலன்கள் - தடைகள் இருந்தாலும் செல்வாக்கு உயரும்.!

விருச்சிகம் ராசி

விருச்சிகம் ராசி

New Year 2023 Rasi Palan | விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 6 ஆம் இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். விருச்சிகம் ராசியினருக்கு நான்காம் இடத்தில் சனி பெயர்ச்சியாவது அம்மா, சொத்து, வாகனம் என்று ஒரு சில விஷயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதே போல, முதல் நான்கு மாதங்கள் குருவின் சஞ்சாரம் யோகமாக உள்ளது. அதற்கு அடுத்த குரு பெயர்ச்சியில், குரு ஆறில் மறைவது அவ்வளவு சிறந்த நிலை அல்ல. இருப்பினும், ராகு மற்றும் கேதுவின் அமைப்பு ஆண்டு முழுவதும் சாதகமாக உள்ளது.

விருச்சிகம் ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம்: சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே மகர ராசியில் இருந்து உங்களது ஐந்தாம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 4 என்பது சுக ஸ்தானத்தைக் குறிக்கும். இதில் அம்மா, வாகனம், வீடு, சொத்து, நிலம், வசதியான வாழ்க்கை ஆகியவை அடங்கும். இவை சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள், தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும்.

ராகுவும் கேதுவும் அக்டோபர் மாதம் வரை மட்டுமில்லாமல், அதற்கு அடுத்த சஞ்சாரமும் உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளது.

இப்போது விரைய ஸ்தானத்தில் இருக்கும் கேது, அக்டோபர் மாதத்துக்குப் பிறகு, லாப ஸ்தானத்துக்கு செல்கிறார். இதனால், உங்களுக்கு வர வேண்டியவை எந்தத் தடங்கலும் இல்லாமல் வந்து சேரும். அதே போல, தற்போது ஆறாம் இடத்தில் இருக்கும் ராகு, ஐந்தாம் இடத்துக்கு செல்கிறார். குழந்தைகள் வழியே நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

விருச்சிக ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்

ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரித்த குரு, ஆறாம் இடத்துக்கு செல்கிறார். இது உங்கள் ராசிக்கு, இரண்டாம் மற்றும் ஐந்தாம் வீட்டின் அதிபதி என்பதால், குடும்பம், குழந்தைகள் சார்ந்த சில சங்கடங்களை எதிர்கொள்ளலாம். இடமாற்றம், வீடு மாற்றம் ஆகியவை ஏற்படலாம். எந்த மாற்றம் வந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள்.

செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சேமிப்புகள் கரையும். சுப காரியங்களுக்கு தடைகள் ஏற்பட்டு, கொஞ்சம் தாமதமாக நடக்கும். சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தலைதூக்கும். அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வீடு, மனை வாங்குவதாக இருந்தால், ஆவணங்களை நன்றாக பார்த்து வாங்க வேண்டும்.

இவ்வளவு தடைகள் இருந்தாலும், செல்வாக்கு உயரும். இருக்கும் வசதியை விட உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகளை தவற விடாதீர்கள். குரு ஆறில் மறைவது அவ்வளவு உகந்தது இல்லை என்றாலும், எதிரிகள் மற்றும் வம்பு வழக்குகள் ஏற்படாது. வாகனங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யவும்.

விருச்சிகம் ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

விருச்சிக ராசியினரைப் பொறுத்தவரை வேலை, வணிகம், பார்ட்னர்ஷிப் என்று, பணி, வருமானம் சார்ந்த எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால், குடும்பம், வீடு, உறவுகள் ஆகிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சொத்து அல்லது வீடு சார்ந்த சிக்கல்கள் ஏற்படலாம். அம்மாவின் உடல்நிலையை கவனிக்க வேண்டும். வீண் பேச்சை தவிர்க்க வேண்டும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டும். சின்ன சின்ன வார்த்தைகள் கூட பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தலாம்.

யாரேனும் உங்களுக்கு தானாக முன்வந்து வழிகாட்டினால், அதை நன்றாக ஆலோசனை செய்து பின்பற்றுங்கள். நேரடியான பேச்சை பின்பற்றவேண்டும். பிறரின் பேச்சை கேட்டு முடிவு செய்தால், மிகப்பெரிய சிக்கல்களுக்கு ஆளாவீர்கள்.

மாணவர்கள் நட்புக்காக பெற்றவர்களை, பெரியோர்களை மதிக்காமல் இருக்கக் கூடாது.

கண், காது, மூக்கு, தொண்டை, பற்கள் சார்ந்த உபாதைகள் ஏற்படலாம்.

வழிபாடு: புதியதாக எதை செய்தாலும், குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். மலைக்கோயில் முருகனை தரிசித்து வந்தால், தடைகள் விலகும்.

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம்தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News