ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஆங்கிலப் புத்தாண்டு துலாம் ராசிக்கான பலன்கள் - வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.!

2023 ஆங்கிலப் புத்தாண்டு துலாம் ராசிக்கான பலன்கள் - வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.!

துலாம் ராசி

துலாம் ராசி

New Year 2023 Rasi Palan | துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 7 ஆம் இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். துலாம் ராசியினருக்கு ஐந்தாம் இடத்தில் சனி பெயர்ச்சியாவது ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடும் பெயர்ச்சியாகும். ராசியிலேயே கேதுவும் ஏழாம் வீட்டில் ராகுவும் இத்தனை காலம் சஞ்சரித்து வந்த நிலையில், அக்டோபர் மாதத்திற்கு பிறகு இரண்டு கிரகங்களுமே உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் பனிரெண்டாம் இடங்களுக்கு மாறுவது மிகப்பெரிய நிம்மதியைக் கொடுக்கும்.

அதே நேரத்தில், ஆண்டின் தொடக்கத்திலேயே துலாம் ராசிக்கு ஐந்தாமிடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது என்பது ஒரு சில நெருக்கடிகளை உண்டாக்கலாம். இருப்பினும், குருவின் சாதகமான சஞ்சாரம் எதிர்மறையான தாக்கங்களைக் குறைக்கும்.

துலாம் ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம்

சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே மகர ராசியில் இருந்து உங்களது ஐந்தாம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 5 என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், குழந்தை பாக்கியம், தாய்மாமா உறவு ஆகியவற்றைக் குறிக்கும்.

துலாம் ராசி நேயர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். ஆனால் இவை தலைக்கனமாக மாறாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தொடர்ந்து நன்மைகலும், நீங்கள் விரும்பிய அனைத்தும் கிடைக்கக்கூடிய ஒரு ஆண்டாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலையில் ஆர்வம் காட்டினால் மட்டும் போதாது மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு நடந்து கொள்ளக்கூடிய பக்குவம் தேவைப்படும். அலுவலகத்தில் உங்கள் திறமையை பலரும் உணரும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

இடமாற்றம் விரும்புபவர்களுக்கு அதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் அது சாதகமாக அமையும். வீடு குடும்பம் உறவுகள் என்று எல்லாமே இனிமையாக இருக்கும். சகோதர சகோதரி உறவுகளில் இருந்து வந்த பிணக்குகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்

இது நாள் வரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்து வந்த குரு இப்பொழுது நேரெதிராக ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சியாவதால் வாழ்க்கைத் துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். சுபகாரியம் நடக்காமல் ஏற்பட்டிருந்த தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும். ஆடை, ஆபரணம், பொன், பொருள், வீடு, வாகனம் யோகம் ஏற்படும். பண வரவு சீராக இருக்கும். குறிப்பாக திருமண வயதில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குரு ராசிக்கு ஏழாம் வீட்டிலேயே வருவதால், நிச்சயமாக திருமணம் கைகூடும்.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, குரு மற்றும் ராகு இரண்டுமே உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மேஷ ராசியில் இணைவதால் கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாகும். இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்கும். குறிப்பாக வேறு இனம், மொழி அல்லது வேற்று மதத்தில் காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண யோகம் கிடைக்கும்.

துலாம் ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

உங்களுக்கு வேலை உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைத்தாலும், யாரையும் விளையாட்டாகக் கூட மட்டம் தட்டி பேசாதீர்கள், ஏனென்றால் அது உங்களையே மீண்டும் தாக்கலாம். மற்றவர்கள் எப்போதோ செய்த குற்றத்தை நீங்கள் எப்போது பெரிதுபடுத்தி பேசினால் அது உங்களுக்கு சில காலம் கழித்து பிரச்சனையாக மாறும். அவசரமாக எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும். எவ்வளவுதான் பண வரவு திருப்திகரமாகவும் இருந்தாலுமே தேவையில்லாத செலவுகளை தவிர்த்து விடுவது நல்லது. பணம் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

நரம்பு தலைவலி பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

வழிபாடு: வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் அல்லது மகாலட்சுமி தாயார் வழிபாடு செய்வது ஆண்டு முழுக்க நிம்மதியாக இருப்பதற்கு உதவும்.

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னிவிருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News