ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஆங்கிலப் புத்தாண்டு சிம்ம ராசிக்கான பலன்கள் - திருமணம் கைகூடும்.!

2023 ஆங்கிலப் புத்தாண்டு சிம்ம ராசிக்கான பலன்கள் - திருமணம் கைகூடும்.!

சிம்ம ராசி

சிம்ம ராசி

New Year 2023 Rasi Palan | சிம்ம ராசிக்காரர்களுக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 9 ஆம் இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சிம்ம ராசியினருக்கு நேர் எதிர், ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சனி பெயர்ச்சியாவது பல விதமான மாற்றங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வைக்கும். மிகப்பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லையென்றாலும், எதிலும் நிதானத்தை மட்டும் கடைபிடித்தால் போதும்.

சிம்ம ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம்

சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே மகர ராசியில் இருந்து உங்களது ஏழாம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 7 என்பது கணவன்/மனைவி, வாழ்க்கைத்துணை, திருமணம், பார்ட்னர்ஷிப், ஆகியவற்றைக் குறிக்கும் இடம். 7 ஆம் வீட்டில் சனி என்பது கண்டக சனி என்று கூறப்படுகிறது.

இது நாள் வரை சிம்மத்துக்கு ஆறாம் வீடான மறைவு ஸ்தானத்தில் சாதகமான பலன்களைக் அளித்த சனி, ஏழாம் வீடான கண்டக சனியாக சஞ்சரிக்க இருக்கிறது.

இருப்பினும் குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கிறது. மேஷத்துக்கு பெயர்ச்சியாகும் குரு, பாக்ய ஸ்தானத்தில், மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கப் போகிறது. குருவின் சாதகமான சஞ்சரிப்பும் கண்டக சனியின் தாக்கத்தை பெரிதளவுக்கு குறைக்கும். கணவன் மனைவி உறவு, பார்ட்னர்ஷிப் தொழில், கூட்டுத் தொழில் ஆகியவற்றில் கவனமாக, நிதாமனாக இருக்க வேண்டும்.

பணியிடத்தில் உங்களது பணித்திறன் அனைவராலும் பாராட்டப்பட்டு பதவி உயர்வு கிடைக்கும். தகுதிக்கு ஏற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். ஆனால், அதே நேரத்தில் உடனிருப்போருடன் நீங்கள் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

வணிகம், கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு அதிகமான பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். நீங்கள் திறமையாக செயல்பட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஏற்றங்கள் காணப்படும். ஒரு சிலருக்கு வேலை நிமித்தமாக அல்லது வணிகம் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். அதை மறுக்காமல், தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுடைய குறைகளை பெரிதாக பேசக்கூடாது.

* நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பது மிகவும் அவசியம்.

* அவ்வளவு எளிதில் யாரையும் நம்பவேண்டாம்

* குழந்தைகளால் உங்களுக்கு பெருமை உண்டாகும்

* தொழிலில் நல்ல வளர்ச்சி காணப்படும்

* கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்

* வீட்டில் பல விஷங்கள் நடக்கும்

* திருமணம் கைகூடும்

சிம்ம ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்

கண்டக சனி என்பதால் கணவன் மனைவி உறவுக்குள் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. சின்ன விஷயம் கூட பெரிதாக வெடிக்கலாம். எனவே இனிமையாக பேசுவது, தேவையில்லாமல் சண்டைகள் போடுவது என்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் அவசியன். ஒரு பக்கம் கணவன் மனைவி உறவை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்பது அவசியம் என்றாலும். மற்றொரு பக்கம் இல்லங்களில் விசேஷங்கள் தொடர்ந்து நடைபெறும்.

ஏழில் சனி சஞ்சரிக்கும் பொழுது பலருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. எனவே திருமண வயதில் இருப்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி திருமண யோகத்தைக் கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், இதற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் வரும் குருப்பெயர்ச்சியும் உங்கள் ராசியை நேரடியாக பார்த்ததால் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் காத்திருக்கும் சிம்ம ராசிக்கு திருமண யோகம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குரு பெயர்ச்சியாவதால் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, இறுக்கமான சூழல் மாறும். அதுமட்டுமல்லாமல் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் சனிப்பெயர்ச்சியின் தாக்கத்தை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

சிம்ம ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

வீடு மனை வாங்கும் பொழுது, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது, என்று நிலம் சொத்து சம்பந்தமான எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்பட்டால் அதை தாமதப்படுத்துங்கள் அல்லது விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சிக்கலாக இருக்கும் சொத்து உங்களுக்கு பாதிப்பைத்தான் உண்டாகும்.

எந்த உறவாக இருந்தாலும், குறிப்பாக கணவன் மனைவிக்குள் மூன்றாம் நபர் தலையீட்டை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். ஆடம்பரமான செலவுகள் பக்கம் செல்லவே கூடாது. தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் வேண்டாம்.

கூட்டு வணிகத்தில் இருப்பவர்கள் கணக்கு வழக்குகளை நேர்மையாக வெளிப்படையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சட்டத்துக்கு புறம்பாக அல்லது முறைகேடாக எதையும் செய்ய வேண்டாம், தேவையில்லாமல் சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

அரசு சார்ந்த பணிகள், அதிகாரப் பதவிகள், அரசியலில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். அலட்சியமாக இருக்காதீர்கள்.

மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். நிச்சயமாக இதுவரை இருந்ததைவிட நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள். இருப்பினும் தகுதிக்கு மீறிய அல்லது பொருந்தாத உயர் கல்வி ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டாம். பொதுவாக என்ன முயற்சி செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போலத்தான் பலன் கிடைக்கும்.

மூட்டு, நரம்பு, கண்கள் ஆகிய ஆகியவை சார்ந்த பிரச்சனை ஏற்படலாம்.

வழிபாடு: ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையில் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் துர்க்கையம்மன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள்

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News