ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஆங்கிலப் புத்தாண்டு மேஷ ராசிக்கான பலன்கள் - சாதகமான மாற்றங்கள் மற்றும் ஏற்றமான காலம்.!

2023 ஆங்கிலப் புத்தாண்டு மேஷ ராசிக்கான பலன்கள் - சாதகமான மாற்றங்கள் மற்றும் ஏற்றமான காலம்.!

மேஷ ராசி

மேஷ ராசி

New Year 2023 Rasi Palan | மேஷம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு மேஷ ராசியில் பிறக்கிறது என்பது இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு அனுகூலமான காலமாகத் தொடங்குகிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் சனி பெயர்ச்சியாவது மிக மிக பொன்னான காலமாக இருக்கும்.

அதற்கு அடுத்து நான்கு மாதங்கள் மேஷத்துக்கு 12 வது இடமான மீனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே மாதம் ராசியிலேயே சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத மாற்றங்கள் மற்றும் அதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும். அக்டோபர் மாதத்தில் ராகுவும் கேதுவும் ராசி மற்றும் ஏழாம் இடத்தில் இருந்து பின்னோக்கி செல்ல இருகிறார்கள். அதிகமான காலம் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கிரகங்களான இந்த நான்கு கோள்கலுமே மிக மிக சாதகமான இடத்தில் சஞ்சரிக்கிறார்கள்.

மேஷ ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம்

கும்பராசியில் லாப ஸ்தானத்தில் சனி ஆட்சியாக அமர இருக்கிறார். எனவே மேஷ ராசியைப் பொறுத்தவரை வேலை, வருமானம், தொழில், வணிகம் என்று பணி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுமே மிக மிக சாதகமானதாக இருக்கிறது. இதுவரை தொழில் செய்தவர்கள், மந்தமாக இருந்திருக்கிறது; தொழில் முன்னேற்றம் அடையவில்லை; எந்த தொழில் தொடங்கினாலும் ஏதாவது முடக்கம் வந்து விடுகிறது அல்லது வேலை சரியாக இல்லை, பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று பணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த ஆண்டு தீர்வுகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பதவி உயர்வுகள் தேடி வரும். வணிகத்தை முன்னேற்றுவதற்கு பலவிதமான வாய்ப்புகள் கிடைக்கும்.

* புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம்

* உங்கள் திறமைகள் பாராட்டப்படும்

* பெற்றோர் அன்பும், ஆசியும், ஆதரவும் கிடைக்கும்

* வீடு, மனை, வாகனம் அமையும்

* நல்ல மாற்றங்கள் காத்திருக்கின்றன

* முன்னேற்றமான காலமாக அமையும்

* அரசு அனுமதி, கடன் எளிதில் கிடைக்கும்

* பதவி, கௌரவம், விருதுகள் கிடைக்கும்

மேஷ ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்

உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் அதிபதியான குரு, 12 ஆம் வீட்டில் மறைந்திருப்பதால் முதல் 3 முதல் 4 மாதங்களுக்கு விரைய செலவு காணப்படும். உங்கள் ராசியிலேயே குரு பெயர்ச்சி ஆன பிறகு ஜன்ம குருவாகி வேலைப்பளு அதிகரிக்கும். இருப்பினும் குருவின் பார்வை முக்கியமான வீடுகளில் படுவதால் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும், நீண்ட காலம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும். குரு 2,5, 7, 9 என்று குடும்ப ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானம் உள்ளிட்ட நான்கு வீடுகளை பார்க்கிறார். இந்த நான்குமே இந்த ஆண்டு மேஷ ராசிக்கு குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் அதிக பலன்களை கொடுக்கும். எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அடுத்ததாக திருமணம் ஆகாமல் இருக்கும் அல்லது திருமணம் ஆக காத்ஹ்டிருக்கும் மேஷ ராசியினர் இந்த ஆண்டு சுக்கிரன் சாதகமாக இருக்கும் மாதங்களில் திருமண ஏற்பாடுகளை செய்யலாம். உதாரணமாக சுக்கிரன் ரிஷபத்தில், துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகும் பொழுது அல்லது மேஷ ராசியிலேயே சுக்கிரன் சஞ்சரிக்கும் ஆகும் போது திருமண பேச்சை தொடங்கினால் விரைவாகவும் சுமூகமாகவும் முடியும். காதலித்து கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமண கைகூடி விடும். கலப்பு திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மேஷ ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத மற்றவர்கள் விஷயத்தில் நீங்கள் நேரடியாக தலையிட வேண்டாம். அதே போல, குடும்பம், உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விஷயங்களில் தலையிடக் கூடாது. பெற்றோர், வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.

தேவையில்லாமல், அவசரமாக பேசி விடாதீர்கள். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் உழைக்கத் தயாராக இருந்தால், வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்து நீங்கள் வளர ஆதரவாக இருக்கும். எல்லா இடங்களும் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், நீங்கள் எதிலும் தேவையில்லாமல் தலையிடக் கூடாது.

வெளிநாடு செல்ல முயற்சி செய்திருபவர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்குப் பின்னர், அக்டோபர் மாதம் முயற்சிக்கலாம். எங்கு இருந்தாலும், சட்டம், விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

மாணவர்கள் திட்டமிட்டு படிக்க வேண்டும். முயற்சிகள் எல்லாமே வெற்றியைத் தரும். மனதை ஒரு நிலைப்படுத்த, உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றை செய்யலாம்.

வழிபாடு: இந்த ஆண்டில், இயன்றபோது, பழனி முருகனின் ராஜ அலங்காரத்தை தரிசனம் செய்யுங்கள். முருகர் வழிபாடு ஏற்றம் தரும்.

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News