ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஆங்கிலப் புத்தாண்டு மீன ராசிக்கான பலன்கள் - பொறுப்புகள் அதிகரிக்கும்.!

2023 ஆங்கிலப் புத்தாண்டு மீன ராசிக்கான பலன்கள் - பொறுப்புகள் அதிகரிக்கும்.!

மீன ராசி

மீன ராசி

New Year 2023 Rasi Palan | மீன ராசிக்காரர்களுக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 2 ஆம் இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மீனத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மீன ராசிக்கு வரும் சனி பெயர்ச்சி ஏழரைச் சனியின் தொடக்க காலமாக இருக்கிறது. கும்பராசி, 12 ஆம் வீட்டில் விரைய சனியாக, சஞ்சரிக்க இருக்கிறார். அதே போல, இதுநாள் வரை ராசியிலேயே, ஜென்ம குருவாக அமர்ந்து வந்துள்ளார்.

மீன ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம்

சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே மீன ராசியில் இருந்து உங்களது ராசியான வீடான மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சியாவது யோகமான காலம் ஆகும். ஆறு மாதங்கள் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருந்தாலும் அக்டோபர் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சியின் போது ராகுவும் கேதுவும் மீன ராசிக்கும் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவது என்பது இதுநாள் வரை குடும்பம் வருமானம் ஆகியவற்றில் நீங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து மிகப்பெரிய விடுதலையைத் தரும்.

பொறுப்புகள் அதிகரிக்கும். எனவே எதிலும் அலட்சியம் காட்டாமல், இது வேண்டாம் என்று நீங்களாகவே முடிவு எடுக்காமல் உங்கள் கடமையை முழுவதுமாக செய்ய வேண்டும். ஏழரை சனி ஆழத்தின் தொடக்கம் என்பது அச்சத்தை ஏற்படுத்தும் காலமாக பலரும் நினைக்கலாம். ஆனால் இது விரைய சனி. அதுமட்டுமில்லாமல் கும்ப ராசியில் ஆட்சியாக சனி இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது.

தற்பெருமை இல்லாமல், வரட்டு கவுரவம் பார்க்காமல் ஒரு சில இடங்களில் வளைந்து கொடுத்து செல்வது நல்ல வாய்ப்புகளை உங்களுக்கு பெற்றுத்தரும்.

முறையாக குறுக்குவழிகள் எதுவும் இல்லாமல் முறையாக வெளிநாட்டு கல்வி அல்லது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இது சாதகமான காலகட்டம்தான்.

மீன ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்

உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு பெயர்ச்சி ஆகும்போது, குழந்தை பேறு கிடைக்கும். அதேபோல அக்டோபர் மாதம் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு திருமண யோகம் கை கூடுகிறது.

கணக்கு வழக்குகள், வருமானம் செலவு என்று எல்லாவற்றிலும் நீங்கள் திட்டவட்டமாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கிறது என்றாலே அதற்கு ஏற்றார் போல உங்களுக்கு வருமானம் வரும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வருமானம் வருகிறது என்று செலவுகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். கடன் ஏதாவது இருந்தால் இந்த காலகட்டத்தில் அதனை அடைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மீன ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

இரண்டு விஷயங்களில் மீன ராசிக்காரர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முதல் விஷயம் ஆரோக்கியம் மற்றும் இரண்டாவது செலவுகள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது முறையாக ஏழரை சனி தொடங்கும் போது, வயதானவர்கள் தங்களுடைய உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய முதலீடுகளை தொடக்கத்திலேயே தவிர்த்துவிடலாம். வெளிநாடு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் வெளிநாடு சம்பந்தப்பட்ட அல்லது வெளி மாநிலம் சம்பந்தப்பட்ட தொழில், கல்வி, வேலை என்று எதுவாக இருந்தாலும் ஆவணங்களை முறையாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.

கேமிங், போட்டி, யூக சம்பந்தமான வணிகங்கள், பந்தயம் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி இருக்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவுக்கு நஷ்டத்தை சந்திப்பீர்கள்.

வழக்குகள், வீடு மனை சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக யோசித்து சிந்தித்து செயல்படுங்கள். அதற்கு உரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். இல்லையென்றால் நீங்கள் அலைச்சலுக்கும் அலைஅழிப்புக்கும் உள்ளாவீர்கள்.

கடன், வழக்கு ஏதாவது இருந்தால் அவசரமாக தடாலடியாக முடிவெடுக்க வேண்டாம். தெரியாமல் யாராவது கூறுகிறார்கள் என்று பெரிய தொகையை செலவழிக்க வேண்டாம்.

உங்களுக்கு பண விரையம் ஏற்படக்கூடிய நிலை இருக்கிறது. எனவே பணம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலுமே கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு: கண்கள், சுவாச உறுப்பு, ஹார்மோன் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி மற்றும் குருபகவான் வழிபாடு மற்றும் அம்பாள் வழிபாடு ஆகியவை மேன்மையைத் தரும்.

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் 

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News