ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஆங்கிலப் புத்தாண்டு மகர ராசிக்கான பலன்கள் - ’இந்த’ விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.!

2023 ஆங்கிலப் புத்தாண்டு மகர ராசிக்கான பலன்கள் - ’இந்த’ விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.!

மகர ராசி

மகர ராசி

New Year 2023 Rasi Palan | மகர ராசிக்காரர்களுக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 4 ஆம் இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடந்த 6 ஆண்டுகளாக ஏழரை சனியின் பிடியில் இருந்த மகர ராசியினருக்கு கொஞ்சம் நிம்மதியாக உணரும் சூழல் வந்துவிடும். ஏழரைச் சனியின் மூன்றாவது பாதம். அதே போல, 3 இல் இருந்த குரு, உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பெயர்ச்சி ஆகப்போகிறார். ராசியிலேயே இருந்த சனியால் அதிகமான வேலை பளு, எதை எடுத்தாலும் தாமதம் என்று இருந்த நிலை மாறி, இப்போது சாதகமான சூழல் வரத் தொடங்கும்.

மகர ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம் : சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே மகர ராசியில் இருந்து உங்களது இரண்டாம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

இரண்டாம் வீடு என்பது தனம் வாக்கு குடும்பம் வருமானம் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். ராசிக்கு இரண்டாவது வீட்டில் சனிப் பெயர்ச்சி என்பது ஏழரை சனியின் காலத்தில் கடைசி இரண்டரை ஆண்டுகளை குறிக்கும். தற்போது இருக்கும் சூழலை விட வரப்போகும் பெயர்ச்சி மகர ராசியினருக்கு நிம்மதி பெருமூச்சு விடுவது போலத்தான் அமையும். அதுமட்டுமில்லாமல், உங்கள் தகுதிக்கேற்ப, உழைப்புக்கு இருக்க நல்ல ஆதாயங்களை இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள்.

இருப்பினும் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. யாரையும் தாழ்வாக பேசி விடாதீர்கள். ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு கொடுத்துவிட்டு செல்லும் என்பதற்கு ஏற்றவாறு இந்த இரண்டரை ஆண்டு கொஞ்சம் சோதனையாக இருந்தாலும், நீங்கள் விரும்பியது எல்லாம் அடைவீர்கள்.

பெரும்பாலும் மகர ராசியினருக்கு சனியால் கெடு பலன்கள் அதிகம் நேராது. இதற்கு அவர் ராசிநாதன் என்பதுதான். ஆனால் நேரடியாக எட்டாம் வீட்டை பார்ப்பதால் திடீர் செலவுகள், இழப்பு, நஷ்டம் ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் செயல்களில் நிதானமாகவும் நேர்மையாகவும் இருந்தால் பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். உங்கள் திறமை நிச்சயமாக வெளிப்படும். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை நீங்களே நேரடியாக நின்று கவனிக்க வேண்டும். உடன் பிறந்தவர், பெற்றோர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆலோசனையை கட்டாயமாக கேட்க வேண்டும்.

உயர் அதிகாரிகளிடம் பேசும்போது கொஞ்சம் விட்டுக்கொடுத்து, வளைந்து கொடுத்து செல்ல வேண்டும். பணியிடத்தில், வணிகத்தில் பிடிவாதமாக இருப்பது உங்களுக்கு நஷ்டத்தை கொடுக்கும்.

மகர ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்

சுய ஜாதகத்தில் சனி திருமணம் சம்பந்தப்பட்ட வீடுகளில் சஞ்சரித்தால், திருமண வயதில் இருக்கும் மகர ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கும். அதேபோல குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும். பொதுவாக சனி இரண்டாம் வீட்டில் வரும்பொழுது சுய ஜாதகத்தில் அது சம்பந்தப்பட்ட வீடுகளில் சனி இருந்தால் அந்த யோகம் கிடைக்கும்.

இரண்டு என்பது குடும்பம் என்பதால் திருமணம், குழந்தை என்று எல்லாமே ஒரு சிலருக்கு சனிப்பெயர்ச்சி கால கட்டத்தில் நடந்துவிடும். அதேபோல எதிர்காலத்திற்கான உழைப்பதற்காக ஒரு தூண்டுதலை இந்த சனிப்பெயர்ச்சி ஏற்படுத்தும். உறவுகளில் இருந்த பிரச்சனைகளும் விரிசல்களும் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். இருப்பினும் பெரிய மனிதர்களின் சந்திப்பு நல்ல மாற்றத்துக்கான அடிப்படையாக அமையும்.

மகர ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

செலவுகள் அதிகமாக ஏற்படலாம். தேவையில்லாமல் வீண் செலவுகளை, ஆடம்பரமான செலவுகளைத் தவிர்த்து சுப செலவுகளாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சட்டத்துக்கு புறம்பாக சின்ன விஷயம் கூட செய்யக் கூடாது. யாருடைய தூண்டுதலையும் முழுக்க முழுக்க தவிர்க்க வேண்டும். ஆசை காட்டி உங்களை தவறான வழிக்கு யாராது தூண்டி விடுவார்கள். ஆனால் நேர்மையாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம். உயர் பதவிகளில், அரசு, அரசாங்க பதவிகளில் இருப்பவர்கள் மிகவும் அமைதியாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். சூழல் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு சாதகமாக மாறி வரும் போது கூட மற்றவர்களை குற்றம்சாட்டவோ. மட்டம் தட்டி பேசவே வேண்டாம். பழி வாங்காமல் இருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. குறிப்பாக முதியவர்களின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

வழிபாடு: சனிக்கிழமைதோறும் ஒரு ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | கும்பம் | மீனம்

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News