2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 3 ஆம் இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி கும்பத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடந்த 2.5 ஆண்டுகளாக ஏழரை சனியின் ஆரம்பத்தில் இருந்த கும்ப ராசியினருக்கு கொஞ்சம் கூடுதலான நெருக்கடிகள் இருப்பது போலத் தோன்றும். ராசியிலேயே சனி சஞ்சரிக்க இருப்பதால், முயற்சிகள் கொஞ்சம் தாமதம் ஆகும். ஆனால் கட்டாயம் வெற்றிபெறும். அதே போல, 2 இல் இருந்த குரு, உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பெயர்ச்சி ஆகப்போகிறார்.
கும்ப ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம் : சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே கும்ப ராசியில் இருந்து உங்களது ராசியான வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
ராசியில் சனி சஞ்சரிக்கும். என்பது மிகவும் கடுமையாக காலமாக இருக்கும், அனைவருமே துன்பப்படுவார்கள் என்பது தவறான கருத்து. ஏழரை சனி என்பது அவரவருக்கு என்ன தேவையோ அதற்காக அவர்களை கடுமையாக உழைக்க வைக்கும், போராட வைக்கும். மாணவர்களாக இருந்தாலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், வணிகமாக இருந்தாலும், அதற்காக கடினமாக உழைப்பார்கள். இல்லத்தரசிகள் வீட்டை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூடுதலாக கவனம் செலுத்துவார்கள்.
சனி என்பது கடும் உழைப்பை குறிக்கும் கிரகம். எனவே ஓய்வெடுக்கக்கூட நேரமின்றி ஏதேனும் ஒரு நெருக்கடியான சூழலில் இருப்பது போலவே தோன்றும். ஆனால் சனிப்பெயர்ச்சி முடிந்து, இந்த காலகட்டம் முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்த்தால் சனிப்பெயர்ச்சியின் காலத்தில் நீங்கள் செய்த விஷயங்கள் தான் உங்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்திருக்கும். நேரடியாக நீங்கள் விரும்பும் விஷயத்தில் கவனம் செலுத்தி முழு முயற்சியுடன் செயல்பட்டால் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்.
வெளியூர் வெளிநாடு செய்யும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைத்தால் அதனை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நீங்கள் விரும்பும் அனைத்துமே உங்களுக்கு கிடைக்கும்.
இந்த காலக்கட்டத்தை முறையாக பயன்படுத்திக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமான விஷயமாகும்.
கும்ப ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்
குடும்பத்தைப் பொறுத்தவரை உங்களுக்காக நீங்கள் செய்து கொள்வதை விட குடும்பத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் பல விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். வீட்டில் இனிமையான சூழல் நிலவும். ஏழரை சனி காலத்தில் நல்ல விஷயங்கள் எதுவுமே நடக்காது, பிரச்சனைகள் தான் நடக்கும் என்பதை மறந்து என்பதை மறந்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த காலகட்டத்தில் பலருக்கும் வீடு மனை வாங்கும் யோகம், வீடு கட்டும் யோகம், சொத்து சேரும் அமைப்பு, பூர்வீக சொத்துக்கள் கைக்கு வருவது என்று பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. அதே போல ஏழரை சனி காலத்தில் திருமணமும் நடந்திருக்கிறது.
உயர் பதவிகள், அரசு, அரசியல் துறைகள், சனி சம்பந்தப்பட்ட தொழில் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்றமான காலம் இது.
அக்டோபர் மாதம் வரை மூன்று மட்டும் ஒன்பதாம் இடங்களில் சஞ்சரிக்கும் ராகு மற்றும் கேது அதற்கு பிறகு உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் எட்டாம் இடங்களில் சஞ்சரிக்க இருக்கிறார்கள். இந்த சஞ்சாரம் வேறு சில பிரச்சனைகளை கொண்டு வந்தாலும் இரண்டாம் வீடான மீன ராசியில் ராகு பெயர்ச்சி ஆகும்போது திருமண யோகமும் கைகூடும். வேற்று மொழி, வேற்று இனம் அல்லது மதம் சார்ந்த நபர்களை காதலித்து வருபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்ப ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை
பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அகலக்கால் வைக்காதீர்கள். பணியில் இருப்பவர்கள் வேலை மாற வேண்டும் என்று விரும்பினால், கவனமாக உங்களுக்கு பொருந்துமா என்று பார்த்துக் கொண்டு முடிவு செய்யுங்கள். உறவுகளை மதிக்க வேண்டும் யாரையும் யாருடனும் ஒப்பிட்டு தாழ்த்தி பேசாதீர்கள். புதிதாக எந்த விஷயம் தொடங்குவதாக இருந்தாலும் வீட்டில் அருகில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைத்துவிட்டு தொடங்கவும்.
செய்யும் தொழில் தொழில் மற்றும் பணியில் முடக்கம் ஏதாவது இருந்திருந்தால் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறும். ஆனால் அதிரடியான மாற்றத்தையும் பெரிய முன்னேற்றத்தையும் உடனடியாக எதிர்பார்க்காதீர்கள். இதுநாள் வரை இருந்த செலவுகள் கொஞ்சம் கட்டுக்குள் வரும். எனவே சேமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று பாருங்கள்.
பணத்தை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் அலட்சியம் கூடாது. சில நேரங்களில், ஒரு சிலருக்கு சனிப்பெயர்ச்சி காலத்தில் அதிரடியான உயர்வுகள் காணப்படும். இதை மற்றவர்கள் பொறாமையுடன் பார்ப்பார்கள். எனவே உங்களுக்கு எதிரான சதி வேலைகளில் நீங்கள் கவனமாக இருங்கள்.
கல்விக் கடனை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு இது சாதகமான காலகட்டம் ஆகும். ஆனால் நட்பு யாருடன் நட்பாக இருக்கிறீர்கள் என்பதில் கவனம் மிகவும் தேவை. அவசியம் இருந்தால் மட்டுமே தொலை தூர பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
வயிறு காது மூக்கு தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
வழிபாடு: குலதெய்வ வழிபாடு அவசியம். ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வாருங்கள். முடிந்த போதெல்லாம் விநாயகர் வழிபாடு செய்வது மேன்மையைத் தரும்.
2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | மீனம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News