2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கன்னி ராசியினருக்கு ஆறாம் இடத்தில் சனி பெயர்ச்சியாவது மிகவும் சாதகமான பெயர்ச்சியாகும்.
கன்னி ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம்: சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே மகர ராசியில் இருந்து உங்களது ஆறாம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 6 என்பது கடன், எதிரி, நோய், ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். இயற்கையிலேயே பாவ கிரகம் என்று கூறப்படும் சனி, ஆறாம் வீட்டில் மறைவது என்பது
இருப்பினும் குரு பெயர்ச்சி கொஞ்சம் ஏற்ற இறக்கங்களைக் கொடுக்கலாம். ஏழாம் வீட்டில் சஞ்சரித்த குரு, உங்கள் ராசிக்கு அஷ்டம குருவாக பெயர்ச்சி ஆக இருக்கிறது. இதனால் அது மட்டுமில்லாமல், ஏற்கனவே இரண்டாம் வீட்டில் கேது மற்றும் எட்டாம் வீட்டில் ராகு இருப்பது பல விஷயங்களில் நெருக்கடியாக உணர வைத்திருக்கும்.
அலுவலகத்தில் சங்கடங்கள் நீங்கி சாதகங்கள் வரத்தொடங்கும். இந்த சமயத்தில் சலிப்பும், சோம்பலும் தவிர்த்தால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. உங்க தவறை யாராவது சுட்டிக்காட்டினால், அது உங்க வளர்ச்சிக்கான வழிகாட்டுதலாகத்தான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு வரலாம். இப்போதைக்கு அதை ஏற்றுக் கொள்வது நல்லது.
முழுமையான உழைப்பு இருந்தால், முடங்கிக் கிடந்த முதலீடுகள்கூட செயல்படத் தொடங்கி சீரான வளர்ச்சியும் ஆதாயமும் ஏற்படும். எதிர்பார்த்த அரசு அனுமதி, வங்கிக் கடன்கள் நிச்சயம் கிட்டும். அதை நேர்மையான வழியில பெறுவதுதான் நல்லது. அயல்நாட்டு வர்த்தகத்தில் இருந்த தடைகள் விலகி, வர்த்தகம் சீராகும். அதேசமயம்.
கன்னி ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்
குடும்பத்தில் குதூகலம் நிறையும். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து லாபம் தரும் உறவுகளோட பிரச்னையில் நீங்களாகச் சென்று மூக்கை நுழைக்க வேண்டாம் பழைய கடன்கள் சுலபமா பைசல் ஆகும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் வாழ்க்கையில் இருந்த சுபகாரியத் தடைகள் விலக முன்னோர் வழிபாடு முக்கியம். மனம்போல மணப்பேறு கிட்டும். குழந்தை பாக்கியத்துக்காக காத்திருந்தவர்கள் மனம் மகிழும்படி வாரிசு கிடைக்கும்.
கன்னி ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை
உறவுகளும் நட்புகளும் பாசத்துடன் வரும் சமயத்தில் சிலர் மறைமுகமாக பிரச்சனை ஏற்படுத்தி உறவுகளை சிதைக்கலாம். யாரையும் வார்த்தைகளால் காயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வயதில் முதியவர்கள், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்டகாலமா சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு உடல்நலத்தில் மேம்பாடு கிடைக்கும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை செய்துமுடித்தால், மேன்மை உண்டாகும்.
செய்யும் தொழில்ல உங்க நேரடி கவனத்துக்கும் நேர்மைக்கும் ஏற்ப வளர்ச்சி நிதானமும் அவசியம். மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம், கையெழுத்துப் போடும் சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
வீண் ரோஷமும், வெட்டிக் கோபமும் தவிர்க்க வேண்டும். எந்தச் சமயத்திலும் எல்லாம் தெரியும் என்ற நினைவும், ஏனோதானோ செயலும் கூடவே கூடாது. கோப்புகளில் கையெழுத்திடும்போதும், பணத்தைக் கையாளும் சமயத்திலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிறர் மனம் நோகும்படி பேசவேண்டாம்.
மாணவர்களுக்கு அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாது. பாடங்களை உடனடியாக படிக்கறவர்கள் அதிக மதிப்பெண் பெறலாம். மேற்படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர்கள் ஆலோசனையை கேட்பது நல்லது. அவசரமும், குறுக்கு வழியும் தவிர்த்தாலே அனைத்திலும் வெற்றி பெறலாம்
கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் கணிசமாக வரும். பழைய நட்புகளை உதாசீனப்படுத்தாமல் இருப்பது, புதியவர்களை நம்பி ரகசியங்களைப் பகிராமல் இருப்பதும் நல்லது.
கழிவு உறுப்புகள், முதுகு தண்டுவட உபாதைகளை உடனே கவனிக்க வேண்டும். அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, கண் பிரச்னைகள்ல அலட்சியம் வேண்டாம்.
வழிபாடு: முருகர் மற்றும் பெருமாள் வழிபாடு தடைகளை நீக்கும்.
2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News