ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஆங்கிலப் புத்தாண்டு கடக ராசிக்கான பலன்கள் - எதிலும் நிதானம் தேவை.!

2023 ஆங்கிலப் புத்தாண்டு கடக ராசிக்கான பலன்கள் - எதிலும் நிதானம் தேவை.!

கடக ராசி

கடக ராசி

New Year 2023 Rasi Palan | கடக ராசிக்காரர்களுக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள் இதோ...

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 10 ஆம் இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடக ராசியினருக்கு எட்டாம் இடமான மறைவு ஸ்தானத்தில் அஷ்டம சனி பெயர்ச்சியாவது நெருக்கடியாக இருக்கும். ஆனால், குரு மற்றும் ராகுவின் பெயர்ச்சி சாதகமாக இருக்கிறது.

கடக ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம்

சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே மகர ராசியில் இருந்து உங்களது எட்டாம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 8 என்பது ஆயுள், மறைவு ஸ்தானம், திடீர் இழப்பு, திடீர் அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம்.

அஷ்டம சனி என்று சொல்லும் போதே கொஞ்சம் அச்சம் ஏற்படக்கூடிய சூழல்தான்! அஷ்டம சனியில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் தெரியுமா என்று பலர் கூற கேட்டிருப்பீர்கள்.

அந்த வகையில் கடக ராசிக்கு 2023 ஆம் ஆண்டு அஷ்டம சனியாக தொடங்குகிறது. இருப்பினும் குரு பெயர்ச்சியும் அடுத்தடுத்து வரும் ராகு கேது பெயர்ச்சியும், அவ்வப்போது மாத கோள்களின் சாதகமான சஞ்சரிப்பும் அஷ்டம சனியின் தாக்கத்தை ஓரளவுக்கு குறைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் எல்லா முயற்சிகளையும் தன்னம்பிக்கையோடும் மனம் தளராமல் செயல்படுத்த வேண்டும்.

 • பொறுமையும் நிதானமும் அவசியம்
 • எதிலும் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம்
 • வார்த்தைகளில் கவனம் தேவை
 • மாற்றங்களை நீங்களாக செய்ய வேண்டாம்
 • திடீர் செலவுகள் ஏற்படலாம்
 • வேலையில் இருக்கும் சிக்கல்கள் தீரும்
 • உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை
 • பயணங்களில் கவனமாக இருக்கவும்

கடக ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்

உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் எட்டாம் ஸ்தானமான மகரம் மற்றும் கும்பம் என்று இரு வீடுகளுமே சனி அதிபதியாகி அஷ்டம சனியாக வருவதால் ஏழாம் இடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் அவ்வப்போது சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு சின்ன சின்ன சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள், வணிகத்தில் தடை, பிரச்சனை என்று ஏதாவது அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கும்.

வளர்ச்சி காண வேண்டுமென்றால் அதற்கான முயற்சி தேவை. அஷ்டம சனி அனைவருக்குமே தீய பலன்களை அல்லது முழுவதுமாக கெடு பலன்களை தராது ஆட்சியாக சனி அமர்ந்திருப்பதால் அதற்குரிய நல்ல விஷயங்களும் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சில துறைகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் திடீரென்று அதிர்ஷ்டமும் சனியால் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு பெயர்ச்சியாவதால் வேலையில் சீரான முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் சனிப்பெயர்ச்சியின் தாக்கத்தை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

இந்த ஆண்டு முழுவதுமாக வேலை மற்றும் தொழில் சார்ந்த முன்னேற்றத்துக்கு யோகமான காலமாக இருப்பதால், அதில் கவனம் செலுத்தலாம்.

கடக ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

துணிவாக இருப்பதைவிட பணிவாக இருப்பது மிகவும் நல்லது. உங்கள் பொறுப்புகளை நீங்களே முன்னின்று செய்ய வேண்டும். யாரையும் நம்பி முக்கியமான வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வேலைப் பளுவும் அதிகரிக்கும். ஆனால் நீங்கள் கடினமாக உழைப்பது அடுத்தடுத்த காலங்களில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கு ஒரு பாலமாக அமையும்.

இப்பொழுது நீங்கள் எந்த வேலையில்/வணிகத்தில் அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அதை மாற்ற வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள், வணிகர்கள் மட்டும் அல்லாமல் மாணவர்கள் இல்லத்தரசிகள் என்று அனைவருக்குமே புதிய மாற்றங்களை எதுவும் முயற்சி செய்ய வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். அவ்வாறு சூழ்நிலை ஏற்பட்டால் பல முறை ஆய்வு செய்த பிறகு முடிவு செய்யுங்கள். உடல் நல பாதிப்புகள், வீட்டில் செலவுகள், தேவையில்லாத விரயங்கள் ஆகியவை அதிகரிக்கும்.

பண வரவும் செலவும் சரியாக இருந்தாலும் ஆடம்பரம் மற்றும் தேவையில்லாத விஷயங்களில் செலவு செய்வதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். வெட்டியாக செலவு செய்வது மற்றவர்களுக்கு போக்குக் காட்டுவதற்காக முன்னிலைப்படுத்துவது ஆகியவை பிரச்சனையாகத்தான் மாறும்.

பயணம் செய்யும் போது பத்திரமாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள், வாகனங்கள் என்று ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை உடனே சரி பார்க்க வேண்டும். தேவையில்லாத பயணத்தை தவிருங்கள். எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

எலும்பு சம்பந்தப்பட்ட நோய், தூக்கமின்மை, தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

வழிபாடு: இஷ்ட தெய்வ வழிபாடு சாந்தமான அம்மன் வழிபாடு மற்றும் கால பைரவர் வழிபாடு ஆகியவை தடைகளை நீக்கி நிம்மதியை தரும்

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News