ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஆங்கிலப் புத்தாண்டு தனுசு ராசிக்கான பலன்கள் - ஆண்டின் தொடக்கம் முதலே பணவரவு அதிகரிக்கும்!

2023 ஆங்கிலப் புத்தாண்டு தனுசு ராசிக்கான பலன்கள் - ஆண்டின் தொடக்கம் முதலே பணவரவு அதிகரிக்கும்!

தனுசு ராசி

தனுசு ராசி

New Year 2023 Rasi Palan | தனுசு ராசிக்காரர்களுக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 5 ஆம் இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடந்த 8 ஆண்டுகளாக ஏழரை சனியின் பிடியில் இருந்த தனுசு ராசியினருக்கு ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விடும் காலம் வந்துவிட்டது.

அது மட்டுமில்லாமல், குருவும் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆகப்போகிறார். இந்த ஆண்டு அதிகபட்ச சாதகமான மற்றும் அதிர்ஷ்டமான பலன்களை பெறுவது தனசு ராசியாக தான் இருக்கும், அந்த அளவுக்கு கிரகங்களின் சஞ்சராம் சாதகமாக உள்ளது.

தனுசு ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம் : சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே மகர ராசியில் இருந்து உங்களது மூன்றாம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 3 என்பது தகவல் தொடர்பு, சகோதர ஸ்தானம், குறுகிய பயணம் ஆகியவற்றை குறிக்கும். இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இது நாள் வரை ஏழரை சனியாக சஞ்சரித்து வந்த சனி, இனி முழுவதுமாக நீங்கப் போகிறார். ஏழரை சனியின் முடிவு காலமே நல்ல மாற்றங்களை தரத் தொடங்கி இருக்கும். அது இனி அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல், குரு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சி ஆவது, மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது.

அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பதவி உயர்வு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு, வெளிநாட்டு படிப்பு, குடும்பத்தில் இருந்த சிக்கல்கள், என்று எல்லாம் விலகும். இருப்பினும், தற்போது ஏழரை சனியின் பிடியில் இருந்து விலகி இருப்பதால், கொஞ்சம் நிதானமாகவே செயல்படுங்கள். என்ன ஆசைகள், திட்டங்கள், எதிர்பார்ப்புகள் என்று எல்லாமே நடக்கும்.

தனுசு ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்

நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரித்த குரு, ஐந்தாம் இடத்துக்கு செல்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவின் ஓராண்டு சஞ்சாரம் மிகப்பெரிய மேன்மையைத் தரப் போகிறது.

வேலை தேடுபவர்களுக்கு, பணியில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை, முன்னேற்றம் கிடைக்கும். குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தம்பதிகளுக்கு, குரு பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். அதே போல, குழந்தைப்பேற்றை தள்ளி போடுவதும் நல்லதல்ல. பூர்வீக சொத்துகள் கைக்கு வந்து சேரும்.

சுப காரியத்தடைகள் அனைத்தும் விலகும். ஆண்டின் தொடக்கம் முதலே பண வரவு அதிகரிக்கும். அதே போல, கடன்கள் ஏதேனும் இருந்தால், அதை தீர்க்கவும்.

இரண்டாம் வீட்டில் இருந்த சனி மூன்றாம் வீட்டுக்கு செல்வதால், குடும்பத்தில், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு, சின்ன சின்ன சண்டைகள் ஆகியவை விலகி, நிம்மதி நிலவும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்.

தனுசு ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

பெரும்பாலான கிரகங்கள் மிகவும் சாதகமாக இருப்பதால், பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. அவரவரின் ஜாதகத்துக்கு ஏற்ப நன்மைகளும் மாறும். இருப்பினும், மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். திடீரென்று எல்லாம் நல்ல விதமாக மாறும் போது, தலைகனம் ஏறிக் கொள்ளாமல், தன்மையாக நடந்து கொள்ளவும். அதே போல, பேச்சிலும் கவனம் தேவை.

கல்வி சம்மந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும், அதை முயற்சி செய்யலாம்.

வழிபாடு: நவகிரக வழிபாடு செய்து வரவும்.

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | மகரம் | கும்பம் | மீனம்

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News