Home /News /spiritual /

தெய்வ வாக்கு: இந்த ராசிகாரர்கள் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்... தினசரி ராசி பலன் – 8 ஜனவரி 2022

தெய்வ வாக்கு: இந்த ராசிகாரர்கள் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்... தினசரி ராசி பலன் – 8 ஜனவரி 2022

தினசரி ராசிபலன் மற்றும் உங்கள் அதிர்ஷ்ட அறிகுறிகள்

தினசரி ராசிபலன் மற்றும் உங்கள் அதிர்ஷ்ட அறிகுறிகள்

தினசரி ராசிபலன் மற்றும் உங்கள் அதிர்ஷ்ட அறிகுறிகள்

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 19)

இன்று உங்களுக்கு மிகவும் பிசியான நாளாக இருக்கும். ஒரு சில வேலைகளை முடிக்க வேண்டும் என்று அதிக நேரம் செலவாகி விடும். செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். உங்களுக்கு நண்பர்களும், சுற்றுப்புரத்தாரும் இன்று உதவி செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உள்ளரங்கு விளையாட்டு

ரிஷபம் (ஏப்ரல் 20 – மே 20)

இன்று உங்கள் காலை நேரம் நெருக்கடியாகவும், மதியத்துக்குப் பின்பு ரிலாக்சாகவும் இருக்கும். ஒரு நெருங்கிய நண்பரிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதையெல்லாம் தள்ளிப்போட்டுக் கொண்டு வருகிறீர்களோ, அதை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய நாள் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வாசனை திரவியம்

மிதுனம் (மே 21 – ஜூன் 21)

இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் லாபம் ஈட்டக்கூடும். பங்குச் சந்தை, பழையக் கடன்கள் வசூல் அல்லது நீங்கள் செய்திருந்த இன்வெஸ்ட்மென்ட் போன்றவற்றிலிருந்து உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் குழந்தையுடன் நேரம் செலவிட நல்ல நபர் தேவை என்பதன் மீது அதிக கவனம் செலுத்துங்கள். வழக்கமான வேலையிலிருந்து ஒரு இடைவெளி எடுத்து செயல்படுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒன்றோடொன்று இணைந்த செடிகள்

கடகம் (ஜூன் 22 – ஜூலை 22)

உங்கள் உரிமையைப் பெற நீங்கள் திட்டமிட வேண்டிய நாள் இது. ஒரு தலை காதல் அல்லது ஒரு பக்க உறவுகள் அர்த்தம் இல்லாமல் போகலாம். உணர்வு ரீதியான ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். அதிலிருந்து வெளியே வர வேண்டிய நாள் இது. சமையல் நிபுணர்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் இருப்பவர்களுக்கு மிகச்சிறப்பான நாள் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உடைந்த துணிக் கம்பி

சிம்மம் (ஜூலை 23 – ஆகஸ்ட் 22)

உங்களுடைய தனிப்பட்ட கருத்து மிகவும் முக்கியமானது. வேலையில் அது மற்றவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும். நிலுவையில் இருக்கும் வேலையை முடிக்க வேண்டிய நாள் இது. உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். வயுறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அழகான நினைவு

கன்னி (ஆகஸ்ட் 23 – செப்டம்பர் 22)

நீங்கள் மற்றவர்களுக்கு எப்படி விளக்கமாகக் காண்பிக்கிறீர்கள் என்பது பற்றி உறுதியாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி தெரியாமல் பலரும் தவறாக கருதலாம். தனித்துவமான ஆளுமைக் கொண்ட நபரை நீங்கள் ஈர்க்கலாம். திட்டமிடப்படாத பயணம் செல்ல வேண்டாம். உடல் நலம் மீது கவனம் செலுத்தி உடற்பயிற்சி செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு நீல கிரிஸ்டல்

துலாம் (செப்டம்பர் 23 – அக்டோபர் 23)

நீண்ட நாட்களுக்கு இன்று தான் உங்களுக்கு மிகச் சிறந்த நாளாக இருக்கிறது என்ற உணர்வை பலரும் பெறுவீர்கள். நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ, அதையே சீராகப் பின்பற்றவும். உங்களுக்காக ஒரு உறுதியான அஸ்திவாரத்தை பிரபஞ்சம் உருவாக்க்கிக் கொடுக்கிறது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒரு ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – முத்துச்சரம்

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 21)

புதிதாக நீங்கள் விரும்பத் தொடங்கிய சுவையில் புதிய உணவைத் தேடியோ அல்லது புதிய இடத்துக்கோ செல்வீர்கள். உங்களிடம் சமீபத்தில் நட்பான ஒரு நபரை நீங்கள் நம்பலாம். உங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தேவையில்லாத முன்முடிவுகளை எடுக்க வைக்கலாம். உங்கள் கோபத்தையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு புதிய உணவகம்

தனுசு (நவம்பர் 22 – டிசம்பர் 21)

முதிர்ச்சி இல்லாத உரையாடல் பிரச்சனையை ஏற்படுத்தலாம். உங்களுக்கு சாதகமாக எல்லாம் மாறும் வரை கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். உங்கள் நோக்கம் சிறந்ததாக இருந்தாலும், நீங்கள் உங்களைக் வெளிப்படுத்திக் கொள்வதில், பேசுவதில் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் சீனியர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு விர்ச்சுவல் அட்டவணை

மகரம் (டிசம்பர் 22 – ஜனவரி 19)

சுய-ஒழுங்கு தான் இப்போது உங்களுடைய அதிகபட்ச தேவை. இதற்கு முன்பு நீங்கள் உறுதியளித்த எதுவும் கால மாற்றத்தால் நிலைக்காமல் போனது. உங்கள் மனம் சொல்வதை வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை அதிகமாக, நெருக்கடியாக இருக்கலாம். நீங்கள் செய்ய வேண்டிய பணிகளை கவனமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். முந்தைய கமிட்மென்ட்ஸ் அல்லது நிலுவையில் உள்ள பணிகள் ஆகியவற்றில் குழப்பம் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மயிலறகு

கும்பம் (ஜனவரி 20 – பிப்ரவரி 18)

உடல் ஆரோக்கியத்தை விட, மன அமைத்திக்கு தான் இன்று முக்கியத்துவம் பெறுகிறது. தேவையில்லாத வேளைகளில் இருந்தும், பொறுப்புகளிலும் இருந்தும் நீங்கள் கொஞ்ச நேரம் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் அம்மாவின் உடல் நலம் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் பொருளாதார நிலை மீது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பனி படர்ந்த காலை

மீனம் (பிப்ரவரி 19 – மார்ச் 20)

இந்த நாளை நிம்மதியாக செலவழிக்க இயற்கைக் காற்றும், பசுமையான வெளிப்புறத்தில் கொஞ்ச நேரம் செலவழித்தால் போதும். நீங்கள் யாருடனாவது விவாதத்தில் ஈடுபடும் முன்பு அதை எழுதி வைத்துக் கொள்வது நல்லது. சில நாட்களாக தடைபட்டு வந்த சந்திப்பு இன்று நிகழும். உடல் அசௌகரியம் அல்லது தலைவலி உங்கள் திட்டங்களை மாற்றலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிவப்புப் பூக்கள்
Published by:Murugesh M
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி