முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ராகு கேது பெயர்ச்சிக்கு சித்தர் வழிபாடு: எந்த ராசியினர் எந்த சித்தரை வழிபட்டால் நல்லது?

ராகு கேது பெயர்ச்சிக்கு சித்தர் வழிபாடு: எந்த ராசியினர் எந்த சித்தரை வழிபட்டால் நல்லது?

ராகு கேது

ராகு கேது

Siddhar Worship: 12 ராசிக்கும் உண்டான சித்தர் வழிபாடும் ஆலயங்களும் ராகு கேதுவினால் ஏற்படும் தொல்லை நீங்கவும் இங்கு சொல்லப்பட்டுள்ள ஊர்களுக்கு சென்று வழிபட்டால் நல்லதே நடக்கும் என பஞ்சாங்க பரிகார ஞானி திருவண்ணாமலை ஜோதிடர் ஆனந்த ஆழ்வார் கூறுகிறார்...

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

பஞ்சாங்க பரிகார ஞானி திருவண்ணாமலை ஜோதிடர் ஆனந்த ஆழ்வார் வழங்கும், 2022ஆம் ஆண்டுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்களும் அந்த பலன்களுக்கான சித்தத்தை சிவன்பால் வைத்த சித்தர்கள், ஜீவ சமாதி பெறும் கோவில்கள், சித்தர்கள் தவம் புரிந்த இடம் ஆகிய வழிபாடு முறைகளின் படி, ராகு கேது -வை எப்படி வென்று வெற்றியை பெறலாம் என கணித்துள்ளார். இந்த பதிவில் 12 ராசிகளுக்கான வழிபாடுகள் என்னென்ன எந்த சித்தர் எந்த ஊருக்கு சென்று வணாங்கினால் ராகு கேதுவை வெல்ல முடியும் என்பதை பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

மேஷம் :

மேஷ ராசி நேர்களே, செவ்வாய் வீடான தங்களுக்கு 1 என்கிற எண்ணில் ராகுவும் 7 ல் கேதுவும் வருகின்றனர். அதனால் நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் - பாம்பாட்டி சித்தர்,  ஊர் - கோவை மருதமலை.

மருதமலை முருகன் அருளாளும் பாம்பாட்டி சித்தர் அருளாளும் இந்த ராகு கேது பெயர்ச்சி நன்மையே அருளும் என்ற நம்பிக்கையுடன் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே சுக்கிரன் வீடான உங்களுக்கு 12ல் ராகுவும் 6ல் கேதுவும் வருகின்றனர். அதனால் நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் பதஞ்சலி, ஊர்- ராமேஸ்வரம்.

ராமநாதசுவாமி அருளாளும் ஆதிசாஷர் ரூபமாக உள்ள பதஞ்சலி சித்தர் அருளாளும் ராகு கேது பெயர்ச்சி நன்மையை தரும்.

மிதுனம்

மிதுன ராசி நேர்களே 11ல் ராகுவும் 5ல் கேதுவும் உள்ளனர். புதன் வீடு ஆன உங்களுக்கு ராகு கேதுவால் ஏற்படும் தோஷங்களை களைய  வழிபட வேண்டிய சித்தர்- அகத்தியர், ஊர் - திருவனந்தபுரம்.

பத்மநாப சுவாமி அருளாளும் அங்கு ஐக்கியம் ஆகி இருக்கும் அகத்தியர் அருளாளும் மிக நன்மையே நடக்கும்.

கடகம்:

கடக ராசி நேயர்களே சந்திரன் வீடு ஆன உங்களுக்கு 10ல் ராகுவும் 4ல் கேதுவும் வருகிறார்கள். அதனால் நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் - இடைக்காட்டார், ஊர் - திருவண்ணாமலை.

நினைத்தாலே முக்தி அருளும் அண்ணாமலையாரின் அருளாளும்  இடை காட்டார் அருளாளும் ராகு கேது அண்டாது அணுகாது.

திருவண்ணாமலை ஜோதிடர் ஆனந்த ஆழ்வார்

சிம்மம்:

சிம்மம் ராசி நேயர்களே சூரியன் வீடான உங்களுக்கு 9ல் ராகுவும் 3ல் கேதுவும் வருகின்றனர். நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் - கருவுரார், ஊர்- கரூர்.

பசுபதிநாதர் - கவுரார் அருளால் நல்ல காரியங்கள் கக்கூடும்.

கன்னி:

கன்னி ராசி நேயர்களே புதன் வீடான உங்களுக்கு 8ல் ராகுவும் 2ல் கேதுவும் வருகிறார்கள். நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் இராம் தேவர், ஊர் - மதுரை அழகர் மலை.

சோலைமாமலை சுந்தரராஜன் அருளாளும் இராம தேவர் அருளாளும் கெடுதல் நீங்கி மாறாக நன்மையே உண்டாக்கும்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே சுக்கிரன் வீடான உங்களுக்கு 7ல் ராகுவும் 1ல் கேதுவும்  வருகின்றனர். நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் - கொங்கணார், ஊர்- திருப்பதி.

ஏழுமலையான் தெய்வ அருளாளும் கொங்கணார் அருளாளும் ராகு கேது தள்ளியே நின்று தாராளமான வாழ்க்கை வசதிகளை கொடுக்ப்பார்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே செவ்வாய் வீடான உங்களுக்கு 6ல் ராகுவும் 12ல் கேதுவும் வருகிறார்கள். நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் - போகர், ஊர்- பழனி.

தண்டாயுதபானி சுவாமி அருளாளும் ராகு கேது பெயர்ச்சி நன்மையை பல மடங்கு உயர்த்தும்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களே குரு வீடான உங்களுக்கு 5ல் ராகுவும் 11ல் கேதுவும் வருகின்ரனர். நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் - திருமூலர், ஊர் - சிதம்பரம்.

ஆடல் அரசன் துணையுடனும், திருமூலர் அருளாளும் ராகு கேது நன்மையையும் எண்ணற்ற வெற்றியையும் அருளும்...

மகரம்:

மகரம் ராசி நேயர்களே , சனி பகவான் வீடு ஆன உங்களுக்கு 4ல் ராகுவும் 10ல் கேதுவும் வருகின்றனர். நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் - வால்மீகீ, ஊர்- எட்டுக்குடி (திருவாரூர் மாவட்டம்).

தனிமனித இராமாயணத்தை அருளிய வால்மீகீ அருளாளும் எண்கண் என்று அழைக்கப்படும் சனிக்கு உகந்த 8யை குறிக்கும் எட்டுக்குடி முருகன் மற்றும் பெருமாள் அருளாளும் ராகு கேதுவை வென்று வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே சனி பகவானின் மற்றொரு வீடான தங்களுக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் வருகின்றனர். நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் - மச்சமுனி, ஊர்- திருப்பரங்குன்றம்.

திருமண கோலத்து முருகன் அருளாளும் மச்சமுனி அருளாளும் மகத்தான வாழ்க்கையே அமையும்...

மீனம்:

மீன ராசி நேயர்களே 2ல் ராகுவும் 8ல் கேதுவும் வருகின்றனர். அதனால் நீங்கள் வழிபட வேண்டிய சித்தர் -  கோரக்கர், ஊர் - திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்)

ஸ்ரீ ஆதி கோரக்கநாதர் கோவிலுக்கு சென்றால் நல்லது.  இந்த கோவில் மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் சுமார் மதுரையில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் உள்ளது. இங்குதான் சிவலிங்கத்தில் விநாயகர் உள்ளார். இது கோரக்கர் ரூபமாக அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. கோரக்கர் மற்றும் சப்த கன்னி அருளாளும் தடங்கல்கள் நீங்கி வெற்றியே அருளும்.

12 ராசிக்கும் உண்டான சித்தர் வழிபாடும், ஆலயங்களும், ராகு கேதுவினால் ஏற்படும் தொல்லை நீங்கவும் இங்கு சொல்லப்பட்டுள்ள ஊர்களுக்கு சென்று வழிபட்டால் நல்லதே நடக்கும் என பஞ்சாங்க பரிகார ஞானி திருவண்ணாமலை ஜோதிடர் ஆனந்த ஆழ்வார் கூறுகிறார்.

First published:

Tags: Rahu Ketu Peyarchi