Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசிகாரர்கள் ரகசியத்தை உங்களிடமே வைத்துக்கொள்வது நல்லது.. இன்றைய ராசிபலன்

தெய்வீக வாக்கு: இந்த ராசிகாரர்கள் ரகசியத்தை உங்களிடமே வைத்துக்கொள்வது நல்லது.. இன்றைய ராசிபலன்

மேஷம் :
உங்களில் சிலர் உங்கள் உணர்வுகளை உங்கள் அன்புக்குரியவர்களிடம் இறுதியாக வெளிப்படுத்தக் காத்திருக்கலாம். இப்போது அதை செய்ய நேரம். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். புதிய வழக்கத்தைத் தொடங்க இது ஒரு தெளிவான நாள். ஆற்றல்கள் உங்கள் நோக்கத்தை ஆதரிக்கின்றன. சேவைத் துறையில் உள்ளவர்கள் வளர்ச்சி பெறுவார்கள்,  மருத்துவ நிபுணர்கள் முத்திரை பதிப்பார்கள் & டிஜிட்டல் ஸ்பேஸில் பணிபுரிபவர்கள் வேலை மாறலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மூங்கில் செடி

ரிஷபம்:
தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் அல்லது நீங்கள் உதவிக்காக எதிர்பார்க்கும் ஒருவர்  உங்களுக்கு உதவிட  வரலாம். திருமண வாழ்க்கையில் விஷயங்கள் மேலும் சிக்கலாகலாம். உரையாடல் உதவலாம். உங்கள் எண்ணங்களை தெளிவாக வைத்து அவற்றையும் வெளிப்படுத்துங்கள். சில சமயங்களில் மற்றவர் உங்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். ஒரு சிறிய பயணத்திற்கு வாய்ப்பு ஏற்படும். இந்த பயணம் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். முன்னறிவிப்பின்றி நெருங்கிய நண்பரின் வருகை உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்லு குவளை

மிதுனம்  :
உங்கள் கடந்த காலத்தின் சில நினைவுகள் இப்போது உங்களை சஞ்சலப்படுத்தலாம். உங்கள் நெருங்கிய நண்பர்களை நம்புங்கள், ஒரு புதிய ஆரோக்கிய நடைமுறையைத் தொடங்குவதற்கான நேரம் இது.  உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய  உள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். சுய சந்தேகம் தீங்கு விளைவிக்கும். இனிப்பு உண்பத்தை கட்டுப்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - படிகம்

தியானத்துடன் நாளைத் தொடங்குங்கள். நீங்கள் சமீபமாக ஒரு மன குழப்பத்தை அனுபவித்து வருகிறீர்கள்,  இந்த மன குழப்பத்திலிருந்து நீங்கள் தெளிவைபெற தியானம் உதவும்.  வீட்டில் பணியிடத்துக்கு என சிறு இடத்தை உருவாக்குங்கள். இது புதிய ஆற்றல்களை வரவேற்க உதவும். நீங்கள் விரைவில் ஒரு வேலை பயணத்தை முடிவு செய்ய வாய்ப்புள்ளது, அது பலனளிக்கும்.
உங்கள் தந்தையின் அறிவுரைகளை அதிகம் கேளுங்கள், அவர் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மழுங்கிய கத்தி

சிம்மம் :
பணியில் இருந்து நல்ல செய்தி வரும். நீங்கள் ஒரு சிறப்பு பணிக்கு செல்வீர்கள். குடும்ப வாழ்க்கை வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கும்.  உங்களை சஞ்சலப்படுத்தும் விஷயங்கள் சில காலம் உங்களை எதுவும் செய்யாது. அடுத்த 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். உறவினர்கள் உங்களிடம் உதவிக்கு கை ஏந்துவார்கள்.திருமணத்திற்காக கடந்த ஆண்டில் இருந்து கஷ்டப்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும் வாய்ப்பு இருக்கிறது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய நோட்புக்

கன்னி :
நீங்கள் நீண்ட காலமாக உங்கள் மனதில் யாரையாவது நினைத்துகொண்டிருக்கலாம். அந்த நபரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வரக்கூடும். நீங்கள் மறுக்க முடியாத இடத்தில் உடனடியாக உங்கள் சேவைகள் தேவைப்படலாம். உங்கள்  ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் கூடுதலாக ஏற்படக்கூடும். உங்கள் ரகசியங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மைல்கல்

துலாம்:
முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே இன்றைய  நாள் சிறப்பாக இருக்கும். இல்லையெனில், அது மந்தமான மற்றும் சலிப்பான ஒன்றாக இருக்க முடியும். படைப்பாற்றல் இயற்கையாகவே உங்களிடம் உள்ளது; செல்வாக்கு மிக்க ஒருவருடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு விரைவில் உங்களுக்குக் கிடைக்கும். அலுவலகம் இப்போது பரபரப்பாக மாற வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் பணியாற்ற உங்களை தயார்படுத்துங்கள்.  ஏதேனும் பயணத்திற்கு நீங்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், அப்பயணம் தள்ளி போக வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட அடையாளம் - பலூன்களின் கொத்து

விருச்சிகம்:
நீங்கள் உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என உங்களுக்குள் ஆழமாக புதைந்துள்ளதை  கண்டறிய வேண்டிய நேரம் இது. குழப்பத்தை முடித்துவிட்டு ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வாருங்கள். பிரபஞ்சம் சமீபத்தில் உங்களுக்கு பல அறிகுறிகளைக் கொடுத்துள்ளது.முன்னாள் காதலன்/ காதலி  மீண்டும் உங்கள் முன் தோன்றலாம் மற்றும் நீங்கள் சங்கடமாக உணரலாம். இது தற்காலிகமானது. பெற்றோர்களுக்கு நேரத்தை செலவிடுங்கள். அவர்களால் உங்களுடன் நன்றாக தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள் சில உள் தடைகளை உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் முதலாளி உங்களைப் பற்றி ஒரு நேர்மறையான அபிப்ராயத்தைக் கொண்டிருக்கிறார், அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  செலவுகள் ஏற்படக்கூடும்

அதிர்ஷ்ட அடையாளம் - இனிப்புப் பெட்டி

தனுசு:

ஒரு குறுகிய பயணம் வருகிறது. இது ஆன்மீக ரீதியில்  உங்களை மேம்படுத்தும்.   நீங்கள் சில காலமாகப் புறக்கணித்து வந்த உடல்நலப் பரிசோதனையை இப்போது செய்ய வேண்டும். புதிதாக ஒன்றைத் தொடங்க நினைப்பது - ஒரு வழக்கமான, திட்டம் அல்லது வணிகம், முன் வேலையைச் செய்ய இது ஒரு நல்ல நேரம். குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் உங்கள் மனதில் இடம் பிடிக்கலாம். எனவே, அனைவருடனும் தொடர்பில் இருப்பது சிறப்பு. ஒட்டுமொத்தமாக இது நல்ல ஆற்றல்களின் காலம், முன்னேற இந்த நேரத்தை பயன்படுத்தவும். ஒரு லேசான உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும், எனினும் அதனை சரி செய்துவிடலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சுத்தியல்

மகரம் :
புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்காக உள்ளன. யோசனைகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். இழந்த நேரத்தை ஈடுசெய்து தொடங்கவும். கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள். அது உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்லாது. தேவையற்ற வாக்குவாதங்களை ஈர்க்கும் குணம் உங்களிடம் உள்ளது. எனவே தேவையற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தாதீர்கள்.  முடங்கியிருந்த பண விவகாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்களுக்கான புதிய இலக்குகளை அமைத்துக்கொள்ளவும். நெருங்கிய நண்பர் தற்செயலாக உங்கள் ரகசியங்களை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல குவளை

கும்பம் :
சண்டை சச்சரவு ஏற்பட்டாலும், உங்கள் துணையுடன் விரைவில் இணைவீர்கள். சில மேம்பட்ட படிப்பு அல்லது படிப்புகளுக்கு உங்களை தயார்படுத்துங்கள்.
உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மனதளவில் எச்சரிக்கையாக இருங்கள்.  முக்கியமான ஒன்றை நீங்கள் இழக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஒரு சட்ட விவகாரம் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம்.  உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உங்கள் வழக்கங்களில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் . நீங்கள் முடிக்க உறுதியளித்த வேலையை முடிக்கவும்.  மன்னிக்கும் விஷயத்தில் பாகுபாடு காட்டதீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - நிறுத்தப்பட்ட இரண்டு சைக்கிள்கள்

மீனம் :
பழைய பாக்கிகள் தீரும், பண விவகாரங்கள் அதிகரிக்கும். ஆவணங்கள் இன்னும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். வீட்டுப் பிரச்சினைகள் உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். முதலீடுகள் மற்றும் புதிய பணிகளின் அடிப்படையில் வரும் ஆண்டிற்கு இப்போதே திட்டமிடுங்கள்.திடீர் பயணம் ஏற்படக்கூடும். குழந்தைகள் உங்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு அமைத்துகொடுங்கள்.   உங்கள் தாயாரிடமிருந்து உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். மருந்தை உட்கொள்ளும் விவகாரத்தில் கால தாமதம் கூடாது.  வேலையில் கூட்டாண்மை கருதினால், அது பொருத்தமானதாக இருக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய ஆலமரம்
Published by:Murugesh M
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி