முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று ( 04-09-2022) காய்கறிகளை தானமாக வழங்குங்கள்

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று ( 04-09-2022) காய்கறிகளை தானமாக வழங்குங்கள்

எண் கணித பலன்கள் - செப்டம்பர் 4, 2022 

எண் கணித பலன்கள் - செப்டம்பர் 4, 2022 

Numerology | செப்டம்பர் 4-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1: (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

அலுவலகத்தில் டீம் லீடர் என விலகி நிற்காமல், அனைவரும் இணைந்து குழுவாக பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். வீட்டை புதுப்பித்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் முதலீடுகள் இயந்திரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்ற சொத்துக்களை வாங்குவது அதிக வருமானம் தரக்கூடும். சட்ட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். விளையாட்டு துறை சார்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது. இயந்திரங்கள், உற்பத்தி, அழகுசாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கட்டுமானம், விவசாயப் புத்தகங்கள், மருந்துகள் மற்றும் நிதி தொடர்பான தொழில்களில் ஈடுபடுவோருக்கு வளர்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: நீலம் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான தினங்கள்: வெள்ளி மற்றும் ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடை: கோவிலுக்கு சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

# எண் 2: (நீங்கள் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. முக்கியமான மற்றும் ரகசியமான விஷயங்கள் பற்றி மெயில் அனுப்பும் போது சக ஊழியர்களிடம் கவனத்துடன் இருங்கள். பெண்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் சுமூகமான உறவை பின்பற்ற வேண்டும். வீட்டு பிரச்சனைகளை தீர்க்கவும், அரசாங்க ஒப்பந்தங்களை பெறவும் விரும்பினால், மனம் சொல்வதை கேட்டு நடங்கள். ஏற்றுமதி இறக்குமதி, ரசாயனம்,  கட்டடம் கட்டுபவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: ஸ்கை ப்ளூ மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: பறவைகள் அல்லது கால்நடைகள் பருக தண்ணீர் வையுங்கள்.

# எண் 3: (நீங்கள் 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் குழப்பமாக இருந்தாலும், எடுத்த முடிவில் கடைசி வரை உறுதியாக இருங்கள். அரசு வேலை அல்லது ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பிக்க அதிர்ஷ்டமான நாள். அரசியல்வாதிகள் தங்களது திறமை, அறிவு ஆகியவற்றைக் வெளிக்காட்ட சிறப்பான நாள், பேச்சாற்றல் மக்களிடம் கவனம் பெறும். அரசியல்வாதிகள், இசைக்கலைஞர்கள், மின்னணு ஊடகங்கள், ஆட்டோமொபைல் தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் எடுக்கும் முக்கிய முடிவுகள் சாதகமாக அமையும். இன்று முதலீடுகளை மேற்கொண்டால் லாபம் ஈட்ட வழியுண்டு. மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த சிறந்த நாள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமானதாக அமையும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: நீலம் மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: வேலைக்கார பெண்ணுக்கு குங்குமப்பூ தானம் செய்யுங்கள்

# எண் 4: (நீங்கள் 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விவசாயம், உற்பத்தி, கைவினைப்பொருட்கள், பயிற்சி, விளையாட்டு பொருட்கள், வங்கி மற்றும் சூரிய ஆற்றல் போன்ற துறைகளில் முதலீடு செய்துள்ளோருக்கு பண வரவு உண்டு. அரசியல் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இருப்பவர்களுக்கு இன்றைய தினம் பரபரப்பாக இருக்கும். மாணவர்கள் குழு ஆய்வு அல்லது உயர் கல்வி தொடர்பான பயிற்சிக்காக குரூப் ஸ்டேடி செய்ய திட்டமிடலாம். இன்று கட்டாயம் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, உணவில் பச்சை நிற காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: வீட்டு வேலை செய்பவருக்கு துடைப்பத்தை தானமாக வழங்குங்கள்.

# எண் 5: (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று புதிய வாய்ப்புகளை பெற உங்களிடம் உள்ள திறமைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். இன்று நீங்கள் பேசும் வார்த்தைகள் பிறர் மனதைக் காயப்படுத்தக்கூடும் என்பதால் கவனத்துடன் செயல்படுங்கள். உதவி தேவைப்படும் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு முழு மனதோடு உதவி செய்ய வேண்டும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களின் வளர்ச்சியில் வேகமான முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பார்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

தானம்: பச்சைக் காய்கறிகளை தானமாக வழங்கவும்.

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

லெதர் வாட்சுக்குப் பதிலாக வெள்ளி முலாம் பூசப்பட்ட உலோக வாட்சை அணியுங்கள். ஒரு விஷயத்தை முன்மொழிவதற்கும், அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கும், ஆடம்பரத்தை அனுபவிப்பதற்கும், செழிப்பை அடைவதற்கும், பயணம் செல்வதற்கும், பிரசன்டேஷன்களை வழங்குவதற்கும், வெகுஜன ஊடகங்களை எதிர்கொள்வதற்கும், வெற்றியைக் கொண்டாடுவதற்கும் சிறந்த நாள். வெளிநாடு செல்ல விசாவிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நடிகர்கள் மற்றும் ஊடகம் சார்ந்த நபர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நிறம்: டீல்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: ஏழைகளுக்கு வெள்ளை இனிப்பு தானம்

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விளையாட்டு வீரர்களுக்கு இன்று புதிய சலுகைகள் கிடைக்கும். விளையாட்டு, சட்ட வழக்குகள், வணிக ஒப்பந்தங்கள், நேர்காணல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் அதிக வெற்றி உங்கள் பெரியோர்கள் மற்றும் முன்னோர்களின் ஆசியுடன் மட்டுமே சாத்தியமாகும். இன்று மென்மையான மற்றும் கனிவான வார்த்தைகளை பயன்படுத்துவது மேன்மை தரும். புகையிலை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானோர் அதனைக் கைவிட்டு, நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 8: (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அடுத்தடுத்து பணிச்சுமை அதிகரிக்கக்கூடும் என்பதால், கைவசம் இருக்கும் வேலைகளை கடைசி நேரத்திற்கு முன்பே முடிக்க வேண்டும். வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் பிராண்டின் உதவி மற்றும் நல்லெண்ணம் நாள் முடிவில் உங்களுக்கு வெகுமதியாக அமையும். சேவைக்காக மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். நன்கொடைகள் மற்றும் உடற்பயிற்சிகளில் நேரத்தை செலவிடுங்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: ஸ்கை புளூ

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள். உங்கள் திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரத்தை பார்த்து பிறர் பொறாமைப்படக்கூடும், ஆனால் அதனை புறக்கணிப்பது நல்லது. மருத்துவர்கள், பொதுப் பேச்சாளர்கள், சமையல்காரர்கள், ஊடகத் தோழர்கள், நடிகர்கள், ஆடிட்டர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 9

நன்கொடைகள்: பணிப்பெண்ணுக்கு சிவப்பு வளையல்களை நன்கொடையாக கொடுங்கள்

top videos

    செப்டம்பர் 4ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: தாதாபாய் நரோஜி, ரிஷி கபூர், கிருஷ்ணா பால் குர்ஜார், சுஷில் குமார் ஷிண்டே ஆனந்த் நாக், ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா

    First published:

    Tags: Numerology, Rasi Palan