மேஷம்
உங்கள் தற்போதைய மனநிலையைப் பற்றி மறுபரிசீலனை செய்ய இந்த நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்று பல சாதனைகளை செய்ய வாய்ப்பு உள்ளது, ஆனால் இதற்கு ஒரு மாற்றம் தேவை. ஒரு இனிமையான செயல்பாடு உங்களது வேலை தொனியை எளிதாக்கக்கூடும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சின்னங்கள்
ரிஷபம்
முன் திட்டமிடல் உங்களுக்கு ஒரு மென்மையான நாளை உருவாக்கும். உங்கள் நம்பிக்கையை மற்றவர்கள் மீது வைப்பது கொஞ்சம் கடினமாகத் தோன்றலாம். உங்கள் குழுவுடன் மிகவும் திறம்பட தொடர்பு கொள்ள ஒரு புதிய யோசனையைப் பெறுவீர்கள். இது ஒருவித அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும். சிறப்பான ஆலோசனைகளை வழங்கி மேம்பட தொடங்குங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு விண்டேஜ் கடிகாரம்
மிதுனம்
நீங்கள் உங்கள் முடிவுகளை எளிதாக எடுக்கும் காலம் இது. உங்களின் நேரம் உங்களுக்கு சாதகமானதாக மாறி வருகிறது. வேலை செய்யும் இடத்தில் மாற்றுவதற்கான திட்டமிடலை இப்போதே தொடங்கலாம். எதிலும் விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு விண்மீன்
கடகம்
உங்கள் பழைய பழக்கவழக்கங்களில் சிலவற்றை மாற்றுவதை நீங்கள் பரிசீலிக்கலாம். உங்களின் பழைய பாதிப்புகள் இன்று சிறிய இடையூறுகளை உருவாக்கக்கூடும். மற்றவரின் மனநிலையையும் நீங்கள் சில நேரங்களில் புரிந்து செயல்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள். நல்லதே நடக்கும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தங்க நாணயம்
சிம்மம்
நிதி பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்யுங்கள். இன்று உங்களின் சீரற்ற செலவினங்களையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம். விரைவில் சில வருமான வழிகள் திறக்கப்படலாம். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் அதிக கவனம் தேவை.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கருப்பு கல்
கன்னி
உங்கள் இதயம் அமைதியற்ற தன்மையைக் கடந்து செல்லும் நேரம் வந்துவிட்டது. எனவே, உங்களுக்காக நீங்கள் சிறிது நேரம் ஒதுக்குவதை மறவாதீர்கள். நீங்கள் விரைவில் செய்ய நினைக்கும் காரியங்கள் கைகூடும். ஒரு நிலையான சுகாதார பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்துவது வேகத்தை அதிகரிக்க உதவும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அலாரம் கடிகாரம்
துலாம்
நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், முன்னர் கவனிக்கப்படாமல் இருந்த சில சட்ட பிரச்சனைகளை தற்போது சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் கையாளும் முறையை சீராக வைக்க கற்று கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு உதவ கூடிய செல்வாக்கு மிக்க நபரை நீங்கள் சந்திக்கலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பழங்கள்
விருச்சிகம்
அதிக வேலை பளு இருப்பதால் உங்களுக்கன இடைவெளியை எடுத்து கொண்டு திறம்பட செயல்படுங்கள். மூல தகவல்களுக்கு மட்டுமே யாராவது உங்களுடன் நெருங்க முயற்சிக்கக்கூடும். அவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்காதீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய கார்
தனுசு
இன்றைய நாள் மெதுவாகத் தொடங்கலாம், ஆனால் மாலைக்குள் வேகம் எடுக்கும். உங்கள் குழுவில் உள்ள நண்பர்களுடன் மீண்டும் இணைய இது ஒரு நல்ல நாள். நீங்கள் வங்கித் துறையில் இருந்தால், பணிச்சுமை அதிகரிக்கத் தொடங்கலாம். நேரத்தை கையாள கற்று கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புதிய நாவல்
மகரம்
உங்களின் பழைய நண்பர்கள் குழு உங்களை சந்திக்க காத்திருக்கிறார்கள். அவர்களுடன் மீண்டும் இணைந்து கொண்டு செயல்படுங்கள். பெற்றோர்கள் தங்கள் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்ட சில விஷயங்கள் உள்ளன, இன்று அவற்றை நீங்கள் சிந்திக்கலாம். நாள் முழுவதும் நீங்கள் சோம்பேறியாக உணர வாய்ப்புள்ளது. உங்களுக்கன வேலைகளை நீங்களே முடிக்க பாருங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சாலை
கும்பம்
நீங்கள் காத்திருக்கும் ஒன்று உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. உங்கள் பணியை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் ஆர்வம் அவ்வப்போது குறையலாம். இருப்பினும், உங்களை நீங்களே ஊக்குவிக்க முயற்சியுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - எண்கள்
மீனம்
காலை நேரங்களில், சோம்பலாக இருக்கும் என்பதால் நீங்கள் வேலை செய்யும் மனநிலையை உடனே உருவாக்கி கொள்ளுங்கள். மேலும் பிற்பகலுக்குள் நீங்கள் சுறுசுறுப்பாக மாறலாம். உங்களின் பழைய நிலைக்கு திரும்புவதைப் பற்றி நீங்கள் யோசியுங்கள். அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மோதிரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News