ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) பணியிடங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) பணியிடங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

அதிக வேலைப்பளு அல்லது முடிக்கப்படாத சில கடைமைகள் தரும் சுமை காரணமாக நீங்கள் இன்று கொஞ்சம் சோர்வாக இருப்பதை போல உணரலாம். நேர்மறையான அணுகுமுறை இன்று விஷயங்களை நீங்கள் சிறப்பாக நிர்வகிக்க உதவும். விரைவில் நடைபெற இருக்கும் ஈவென்ட்டிற்கு தயாராகுங்கள். ஏனென்றால் நீங்கள் தான் பிரதானமாக இருப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டர்க்கைஸ் ஸ்டோன்

ரிஷபம்:

ஒரு விஷயம் நிகழும் முன் உங்களால் நிலைமையை முழுமையாக மதிப்பிட முடியாமல் போகலாம். ஒரே நேரத்தில் அதிக வேலை இன்று உங்களுக்கு குவிய கூடும் என்பதால் மனக்குழப்பம் ஏற்படலாம். எனினும் பணிகளை தவிர்க்க முடியாது என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் கூடவே கவனம் செலுத்துங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் பவுல்

மிதுனம்:

உங்களுக்கான புதிய கமிட்மென்ட் இன்று உருவாக்க கூடும். அதை சரியாக செய்து முடிக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள். உங்களது எனர்ஜி லெவல் சாதனைகளை நோக்கி இட்டு செல்லும். உங்கள் பணியிடத்திலில் நடக்கும் நேர்மறையான விஷயங்கள் உங்கள் மனநிலையை உற்சாகமாக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மோனோகிராம் பேக்

கடகம்:

உங்கள் தனிப்பட்ட உறவு இன்று மேலும் வலுப்பெறலாம், ஆனால் கவனம் தேவைப்படலாம். உதாரணமாக வாக்குவாதம் உங்கள் உறவில் இடையூறுகளை உருவாக்கலாம். எனவே பேச்சில் கவனம் தேவை. நீங்கள் விரைவில் ஒரு சட்ட நிபுணரிடம் ஆலோசனை பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிஃப்ட்

சிம்மம்:

இன்று உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழிக்கும் தருணங்கள் கிடைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சில நிதி விவகாரங்களுக்கு இன்று எளிதில் தீர்வு கிடைக்க கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டெக்கரேட் செய்யப்பட்ட ஒரு ரூம்

கன்னி:

பணியிடங்களில் ஏற்படும் திடீர் முன்னேற்றம் உங்களது இன்றைய நாளை பிரகாசமாக்கும். வேலை ஒருபக்கம் இருந்தாலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிலும் வேகமாக செயல்பட நினைக்கும் நீங்கள் இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமை காட்டுவது நல்லது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய லேம்ப்

துலாம்:

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேச நினைப்பதை நீங்கள் இத்தனை நாள் தள்ளிபோட்டு கொண்டே வந்திருந்தால் அதனை வெளிப்படுத்த இன்று சரியான நாள். இன்றைய நாள் முடியும் போது நீங்கள் மிகவும் நிதானமாகவும், ரிலாக்ஸாக இருப்பதை போல் உணர்வீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிந்த வானம்

விருச்சிகம்:

இன்று நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். எனினும் உங்களுக்கு தெரிந்த சிலரே உங்களை பற்றி பின்னால் கிசுகிசு பேசுவார்கள். அதனை நீங்கள் மனதில் ஏற்றி கொள்ளாதீர்கள். உங்களது நீண்ட நாள் குடும்ப நண்பர் ஒருவர் மூலம் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அம்பர் ஸ்டோன்

தனுசு:

சில நிதி விஷயங்கள் இன்று உங்களுக்கு நம்பிக்கை அளிக்க கூடியதாக இருக்கும். தெளிவான மனநிலை நீங்கள் பல நாளாக சிக்கலாக கருதி வரும் விஷயங்களை எளிதாக கையாள தீர்க்க உதவும். இன்று நீங்கள் ஒரு அவசர செய்தியைப் பெற கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரகத கல்

மகரம்:

சில சிக்கலான விஷயங்களில் உங்கள் அணுகுமுறையை எளிதாக்குங்கள். தீர்க்கப்படாத விஷயங்களை மறுபரிசீலனை செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை முன்னெடுத்து செல்லும் சக்தியை பெறுவீர்கள். நாள் சிறப்பாக செல்ல காலை எழுத்தவுடம் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏரி

கும்பம்:

உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் இன்று நாளை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். அவுட்டிங், ஷாப்பிங் என இந்த நாள் நீங்கள் என்ஜாய் செய்ய கூடிய நாளாக இருக்கும். வெளியே சென்றால் எந்த உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் வெளிப்படையாக நடந்து கொள்ள முயற்சியுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சைன் போர்டு

மீனம்:

ஒரு புதிய உறவை ஏற்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற இன்னும் நாள் எடுக்கலாம். எனவே இது சார்ந்த விஷயங்களில் இன்று பொறுமை முக்கியம். புதிய தகவல் தொடர்புகளை தொடங்கவும் கூட இன்று நல்ல நாள். உங்களால் சரியாக கையாள முடியாது என்று தோன்றினால் அந்த விஷயங்களில் ஈடுபாடு காட்டாமல் விலகி விடுவது நல்லது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர் வயர்

First published:

Tags: Oracle Speaks, Tamil News