ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 23, 2022) உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 23, 2022) உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

சில நியாயமான புகார்கள் உங்களிடம் முன்வைக்கப்படும். இன்றைய தினம் மிகுந்த ஆற்றலோடு உணர்வீர்கள். மற்ற நாட்களை காட்டிலும் நேர மேலாண்மையை கடைப்பிடிக்கவும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜா இதழ்.

ரிஷபம்:

உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு நிபந்தனையின்றி கிடைக்கும். உடல் நலன் சார்ந்த சிறிய பிரச்சனைகள் தோன்றலாம். பணியிடத்தில் குழப்பங்களை தவிர்க்கவும். வங்கி பணிகளை கவனமாக மேற்கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இலவங்கப்பட்டை.

மிதுனம்:

உங்கள் அச்சங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைக்கவும். இன்றைய நாள் வெற்றி பெறுவதற்கான நாளாகும். எதிர்காலத்திற்கு தேவையான திட்டமிடல்களை மேற்கொள்ளுங்கள். நெருங்கிய நண்பர் ஒருவர் பொறாமை கொள்வார். உங்கள் திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மிளகாய்.

கடகம்:

உங்கள் யோசனைகளை முன்னிறுத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள ஒருவர் உங்கள் முயற்சிகளை அங்கீகரித்து பாராட்டுவார். சிலரை ஆச்சரியப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலன் அளிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வட்டமான டிஸ்க்.

சிம்மம்:

இயற்கையை பார்வையிடுவது அல்லது புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக உங்களை நீங்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். பணிகள் குறைவாக இருந்தாலும் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். நிலுவையில் உள்ள பணிகளையும் நிறைவு செய்ய முடியும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க அஸ்திரம்.

கன்னி:

இன்றைய நாள் சிக்கலுக்கு உரியதாக இருந்தாலும், சாதகமான செய்திகள் தேடி வரும். உங்களிடம் இருந்து ஆரோக்கியமான வாதங்களை உங்கள் குழுவினர் எதிர்நோக்குகின்றனர். வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்க வாழ்க்கை துணை உதவியாக இருப்பார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய குறியீடு.

துலாம்:

உங்கள் திட்டங்கள் தோல்வியடைந்தால் அது குறித்து கவலை அடைய வேண்டாம். அடுத்த சில வாரங்களில் மீண்டும் வெற்றி பெறுவீர்கள். நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவு செய்யவும். உங்களிடம் இருந்து பிரிந்து சென்ற ஒருவர் தற்போது உங்களை தேடி வரக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்க கல்.

விருச்சிகம்:

சிலருக்கு உதவி செய்த பிறகு நீங்கள் அமைதி அடைய கூடும். சின்ன விவாதங்களை பெரியதாக இழுத்து செல்ல வேண்டாம். மாணவர்களுக்கு எதார்த்த வாழ்வின் மூலமாக கற்றலுக்கான அனுபவம் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மைல்கல்.

தனுசு:

உங்களை சுற்றி உள்ள மக்கள் உங்களை உணர்ந்து கொள்ள தொடங்கியுள்ளனர். தொழில்துறையில் இருப்பவர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும் மற்றும் புதிய வாய்ப்பு கிடைக்கும். எளிமையான அணுகுமுறை போதுமானது. மருத்துவர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காலனி.

மகரம்:

ஏதோ ஒரு முக்கிய விஷயம் குறித்து உங்கள் ஆழ்மனம் உங்களை வழிநடத்துகிறது. அது குறித்து கவனமாக இருக்க வேண்டும். நண்பர் ஒருவர் உங்களை அழைத்து மனப்பூர்வமாக பேசுவார். அக்கம் பக்கத்தில் உள்ளவர் மூலமாக ஆச்சரியமிகுந்த செய்தி வந்து சேரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தைலம் மரம்.

கும்பம்:

தவறான புரிதல் காரணமாக எதிர்காலத்தில் சிக்கல்கள் உருவாகக்கூடும். ஆகவே, எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளவும். பார்ட்னர் ஒருவர் உங்கள் மீது பொறாமை கொண்டிருக்கிறார். சீனியர் ஒருவருக்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மேல்சட்டை.

மீனம்:

தவறான புரிதல்களை தவிர்க்க வேண்டும். நீங்கள் உணர்வுப்பூர்வமான நபராக இருப்பது தான் கவலைக்கு காரணமாக அமையும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்லலாம். உங்கள் பெற்றோருடன் பயணங்களை மேற்கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ பை.

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News