ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (நவம்பர் 20, 2022) புதிய தொழில் துவங்க வாய்ப்புகள் அமையும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (நவம்பர் 20, 2022) புதிய தொழில் துவங்க வாய்ப்புகள் அமையும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நீங்கள் தற்போது செய்து வரும் வேலையில் ஏற்படும் அழுத்தம் மற்றும் மன உளைச்சலினால், ஏற்கனவே செய்ய விரும்பிய ஒரு விஷயத்தையே மீண்டும் செய்ய முற்படுவீர்கள். உங்கள் வாழ்வின் ஏதேனும் ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டு உள்ளதை போல உணர்ந்தால் விரைவில் அதனை சரி செய்து மீண்டு வர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த வாரத்தில் சரியாகும். மன நிம்மதிக்காக செல்லப்பிராணிகளை வளர்க்கலாம் என்ற எண்ணம் உண்டாகும். புதிய உறவுகளின் மீது நாட்டம் இல்லாமல், ஏற்கனவே தொடர்பில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை கழிக்க நாட்டம் ஏற்படும்

உங்கள அதிர்ஷ்டத்திற்கான குறியீடு: திறந்த கதவு

ரிஷபம்:

நீண்ட நாட்களாக உங்கள் மனதை நெருடி கொண்டிருந்த ஒரு விஷயத்தை, என்னவென்று ஆராய்ந்து சரி செய்வது நல்லது. நீங்கள் எதிர்பாராத புதிய வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை உதாசினப்படுத்துவதோ அல்லது அதை பற்றி உடனடியாக முடிவெடுக்கவில்லை எனில் உங்கள் வாய்ப்பை வேறொருவர் தட்டி பறிக்கலாம். அடிக்கடி கோபப்படுவதையும் எரிச்சல் அடைவதையும் தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவு நேர்மறையான எண்ணங்களுடன் நடந்து கொள்ள முயற்சி செய்வது அனுகூலம் தரும்.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு: செராமிக் டின்னர் செட்

மிதுனம்:

இயற்கையாகவே விவாதங்களின் போதும் வாக்குவாதங்களின் போதும் அமைதியாக இருக்கு விரும்பும் நபராக இருப்பீர்கள். ஆனால் இன்று அப்படி எதாவது விவாதத்திலோ அல்லது கலந்துரையாடல்களிலோ பங்கு பெற நேர்ந்தால் உங்கள் தரப்பு கருத்தை வெளிப்படையாக சொல்வது பல வழிகளில் நன்மையை கொடுக்கும். முன்னால் காதலர் மீண்டும் உங்கள் வாழ்வில் நுழைந்து உங்களுடன் உறவை புதுப்பித்துக் கொள்ள முயற்சி செய்யலாம். நீண்ட நாட்களாக நீங்கள் சரி செய்ய முயற்சித்த அலுவலகம் சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகளை அதிகமாக யோசிக்காமல் அப்படியே விட்டு விடுவது நல்லது. அவற்றை பற்றி தற்போது அக்கறை கொள்ள தேவையில்லை. இன்னும் சில நாட்களில் அந்த பிரச்சினை தானாகவே முடிவுக்கு வரும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு: அமெத்திஸ்ட்

கடகம்:

தொலைதூர பயணங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். நீண்ட நாட்களாக நீங்கள் செய்து வந்த வேலைக்கான வெகுமதி இன்று உங்களை வந்தடையும். இனிவரும் காலங்களில் வேலைக்காக புதிய நேர அட்டவணைகளை உருவாக்கி வேலை நேரங்களை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உண்டாகலாம். அதிகளவு உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வீட்டில் சிறிது மாற்றங்களை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். தொழில் செய்பவருக்கு வடக்கு திசை மிகவும் அற்புதமான அனுகூலன்களை கொடுக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு : மின்னும் ஓவியம்

சிம்மம்:

நீண்ட காலமாக செய்ய நினைத்த வேலை ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவரோ அல்லது நீண்ட கால நண்பருடனோ உள்ள உறவு இன்னும் பலப்படும். கடந்த காலத்தில் அதிக உணர்ச்சிவசப்படுபவராக இருந்த நீங்கள் தற்போது உணர்வுகளை சரியாக கையாண்டு வெற்றிகளை குவிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கவழக்கங்களை கைவிடுவது நல்லது.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு: உட்புற பனை

கன்னி:

பல நாட்கள் தடைப்பட்டு செய்து முடிக்காமல் இருந்த காரியம் ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் துவங்க வாய்ப்புகள் அமையலாம். அதன் மூலம் உடனடி வருமானம் உண்டாகும். தனிப்பட்ட வாழ்விற்கும் வேலை நேரத்திற்கும் இடையே அல்லல்படும் நிலை உண்டாகலாம். இப்போது நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு அடுத்த சில மாதங்களுக்கு உங்கள் வாழ்வை தீர்மானிக்கும். அலுவலக ரீதியாக புதிய பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். அதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு: உங்களுக்கு பிடித்த பழைய கைக்கடிகாரம்

துலாம்:

புதிய முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலம் நல்ல அனுகூலன்களை பெறலாம். உங்களுக்கென்று சில புதிய வரைமுறைகளையும் கொள்கைகளையும் உண்டாக்கிக் கொண்டு வாழ்வை இன்னும் வளமாக்க முயற்சி செய்வீர்கள். அடுத்த சில நாட்களுக்கு பெரிதாக மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. சில நேரங்களில் வெறுமையாக உணரலாம். உங்களை விட இளையவர் ஒருவரிடம் இருந்து சில வாழ்க்கை பாடங்களை கற்பீர்கள். சிறிது கடினமான காலகட்டமாக இருந்தாலும், அவை அனைத்தும் தற்காலிகமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீண்ட காலமாக செய்து வந்து அதே பழைய விஷயங்களை புதிய முறையில் செய்து பார்ப்பது மனதிற்கு புத்துணர்ச்சி தரும்.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு: செப்பு டம்ளர்

விருச்சிகம்:

உங்களுக்கு பிடித்த, நீண்ட கால கனவாகவே இருந்து வந்த விஷயங்களில் கவனத்தை செலுத்தி அதை நனவாக்குவதில் முயற்சி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக செய்ய நினைத்துக் கொண்டிருந்த சில காரியங்கள் தற்போது நடந்தேறும். காதல் வாழ்க்கையில் உறவு இன்னும் பலப்படும். பொருளாதார நிலையை பற்றி திட்டங்கள் வகுப்பதற்கும் ஏற்ற நாள். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயணங்களின் போது அதிக கவனம் தேவை.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - உடைந்த கண்ணாடி

தனுசு:

குடும்பம் அலுவலகம் சம்பந்தமாக பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முயற்சிப்பீர்கள். மனதளவில் அந்த வேலைகளை செய்து முடிக்க முடியும் என்று நீங்கள் நம்பிக்கையோடு இருந்தாலும் சில குறைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்தந்த வேலைக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, முழு கவனத்துடன் செய்வது சிறந்த தேர்வாக அமையும். அலுவலகத்தில் உடல் வேலை பார்ப்போரிடம் யூகத்தின் அடிப்படையில் எதையும் தீர்மானம் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் அவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவது நல்லது. உயர் அதிகாரி ஒருவர் உங்களுடன் நேரடியாக பேச முயற்சிக்கலாம். புதிய பார்ட்னர் ஒருவரை தேர்வு செய்ய நினைத்திருந்தால் அதற்கு இது ஏற்ற நேரம். உங்கள் தனிப்பட்ட பொழுது போக்கிற்காக சிறிது நேரம் ஒதுக்கி கொள்வது புத்துணர்ச்சியை கொடுக்கும்.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு: இரட்டைக் குருவிகள்

மகரம்:

கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கடன் வாங்கினால் அதன் மூலம் பல்வேறு சிரமங்கள் உண்டாகக்கூடும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாழ்வில் முன்னேறுவதற்கு துடிப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த கோப்புகள் சம்பந்தப்பட்ட வேலைகள் முடிவடையும். தாய்வழியில் சில தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் தாய் உங்களுக்கு பக்க பலமாக நிற்க, உங்கள் நம்பிக்கை அதிகம் ஆகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு: வெளிர் திரை

கும்பம்:

உங்களை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியோடு வைத்திருப்பது மூலம், உங்கள் தொடர்புகள் பலப்படும். புதிய மனிதர்களின் தொடர்புகள் உண்டாகும். பலர் உங்களுடன் நட்புடன் பழக விரும்புவார்கள். ஆன்மீக வழியில் மனதை செலுத்துவதற்கு ஏற்ற நாள். மூலாதாரத்தில் மனதை நிலை நிறுத்தி செயல்படுவது பல்வேறு வெற்றிகளை குவிக்கும். சமுதாயத்தில் மதிப்பு மிக்க சில மனிதர்களின் தொடர்புகள் உண்டாகும். சமையல் செய்வதில் அதிக ஆர்வம் உண்டாகும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு: தனித்துவமான கதவு மணி

மீனம்:

மனதளவில் திருப்தியாக இருப்பீர்கள். உடலளவில் சில பிரச்சினைகள் உண்டாகலாம். ஆனால் அவற்றினால் மிக பெரிய பாதிப்புகள் எதுவும் உண்டாகாது. குழந்தைகள் உங்களிடமிருந்து அன்பையும் அதிக அக்கறையும் எதிர்பார்ப்பார்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டுமென்று விரும்புவார்கள். வழக்கத்தை விட அதிக நேரத்தை ஆன்லைனில் செலவழிக்க விரும்புவீர்கள். பழைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உங்கள் ஆழ்மனதில் மறைந்துள்ள சில எண்ணங்கள் கனவுகள் மூலம் வெளிப்படலாம். அவற்றை பற்றி அதிக அக்கறை கொள்ள தேவையில்லை. உங்களை மகிழ்வாக வைத்துக் கொள்ள சில புதிய பழக்கவழக்கங்களை உண்டாக்கி கொள்வதில் தவறில்லை.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு: மஞ்சள் இலைகள்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News