ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 17, 2022) உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 17, 2022) உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

சற்று குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பல்வேறு எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். செய்ய வேண்டிய வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. பழைய நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் சற்று மன நிம்மதி ஏற்படும்.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – செப்பு பாத்திரம்

ரிஷபம்:

சமீபத்தில் நீங்கள் இழந்த ஒருவருக்காக, ஏதேனும் செய்ய வேண்டி இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுக்கு உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதே சமயத்தில் எதிர்பார்ப்புக்கு மாறாக உங்கள் செயல் திறன் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – உப்பு விளக்கு

மிதுனம்:

இந்த நாள் சற்று பயம் மற்றும் பதட்டங்கள் நிறைந்து ஆரம்பித்தாலும் நாளின் முடிவில் அவை அனைத்தையும் வெற்றி கொள்வீர்கள். புதிய திட்டங்கள் அல்லது பொறுப்புகள் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்படலாம். கடந்த காலத்தில் உங்கள் அன்புக்கு பாத்திரமாக இருந்த ஒருவர் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – நீல வண்ண பாட்டில்

கடகம்:

உங்கள் காதுக்கு வரும் அனைத்து செய்திகளையும் கண் மூடித் தனமாக நம்பாமல், ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. அதிக நம்பிக்கையுடன் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். இன்றைய நாளில் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. நீங்கள் விரும்பத் தகாத செய்தி ஒன்றை உங்கள் பழைய நண்பரிடம் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் உறவினரிடமிருந்தோ பெறலாம்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – வெள்ளைக் கொடி

சிம்மம் :

உங்கள் வளர்ச்சியை விரும்பும் ஒருவர் உங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டு வரலாம். கடந்த காலங்களில் உங்களுக்கு விருப்பமான விஷயங்கள் அல்லது பொழுதுபோக்குகள் மீது மீண்டும் ஆர்வம் ஏற்படலாம். வேலையில் சிறிது சிரமம் ஏற்பட்டு அதிகப்படியான நேரம் அலுவலகத்தில் செலவழிக்கும்படி நேரலாம்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – கைத்தடி

கன்னி:

சிறிய பயணங்கள் செய்வதின் மூலம் நல்ல செய்தி உங்களை வந்தடையும். அலுவலகத்தில் உடன் பணி புரியும் யாரேனும் ஒருவர் உங்கள் மீது அதிக அக்கறையை வெளிப்படுத்தலாம். அவசியமாக உதவி தேவைப்படும் ஒருவருக்கு நீங்கள் உதவி செய்ய மறுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - நீர் அல்லி

துலாம்:

கடந்த காலங்களில் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கான பலன் இன்று உங்களைத் தேடி வரும். உங்களின் சிறப்பான செயல் திறனுக்காக பாராட்டப்படுவீர்கள். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் நாள். உங்கள் மனதிற்கு பிடித்த ஒருவர் இருந்து நீங்களே எதிர்பார்க்காத வகையில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - வெள்ளி பாத்திரம்

விருச்சிகம்:

முக்கியமான சில வேலைகளை தள்ளி போட்டு விட்டு சற்று ரிலாக்ஸாக இருக்க விரும்புவீர்கள். பத்திரிக்கை அல்லது கடிதம் எழுதுவதின் மூலம் மனதில் உள்ள பாரங்கள் குறையும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வெள்ளை ரோஜா

தனுசு:

ஆரம்பத்தில் சுற்று குழப்பத்துடன் ஆரம்பிக்கும் இந்த நாள் நேரம் செல்ல செல்ல உங்களுக்கு சாதகமாக மாறும். நீங்கள் எதிர்பார்க்காத நண்பர் ஒருவர் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். இருவரும் சேர்ந்து திடீர் திட்டங்களை செயல்படுத்துவீர்கள். இன்றைய நாளில் முதலீடுகள் செய்வது லாபத்தை கொடுக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – பட்டு துணி

மகரம்:

உங்கள் உள்ளுணர்விற்கு மதிப்பு கொடுத்து அதன் வழிகாட்டுதலில் நடப்பது நன்மை கொடுக்கும். மற்றவர் உங்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதனை செய்வதே நல்லது. உங்கள் முடிவெடுக்கும் திறனுக்கு சவால் விடும் வகையில் இன்றைய நாள் அமையும். பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகளில் நீண்ட நேரம் செலவிடுவதை தவிர்ப்பது நல்லது

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – கொடி

கும்பம்:

உங்களுக்கு நன்மை கொடுக்கும் புதிய பழக்க வழக்கங்களை உண்டாக்கி கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். தினந்தோறும் வழக்கமாக செய்யும் செயல்களை விடுத்து, புதிய சவால்களை எதிர்கொள்ள நினைத்திருந்தால் அதனை செயல்படுத்த இன்று நல்ல நாள். நேரம் தவறாமையைப் கடைபிடிக்க வேண்டும்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – மீன் ஓவியம்

மீனம்:

உணர்ச்சிகளுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும். சில நல்ல மனிதர்களின் சகவாசம் ஏற்படலாம். பழைய நண்பர் ஒருவரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். நீங்கள் முன்னரே திட்டமிட்டு வைத்திருந்த சில பொழுதுபோக்குகளை தள்ளிப் போடும் நிலை ஏற்படலாம்.

உங்களது இஷ்டத்துக்கான குறியீடு - நாவல்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News