ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 13, 2022) புதிய சொத்து வாங்கும் சூழல் உருவாகும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 13, 2022) புதிய சொத்து வாங்கும் சூழல் உருவாகும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம் :

நீங்கள் சுய மதிப்பீடு செய்வதை விட உங்களுக்கு திறமை அதிகம் என்பதை இன்று தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்தினரை இன்று அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் ஒரு அழகான இடத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி

ரிஷபம் :

நீங்கள் பயிற்சி செய்து வரும் விஷயங்கள் இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் முன்னேற்றம் அடையவும், மனதில் தெளிவு பெறவும் இந்த பயிற்சி முக்கிய பங்காற்றும். முக்கிய விஷயங்களில் முடிவெடுப்பதை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கலாம். ஒரு நல்ல சலுகை உங்கள் நாளை மாற்றலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி

மிதுனம் :

நீங்கள் ஒருவருடன் நட்பாக விரும்பினால் இன்று நல்ல நாளாக இருக்கிறது. உங்கள் திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. மனஅழுத்தம் குறைய வெளியே சென்று வருவது பலன் அளிக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரத்தினம்

கடகம் :

உங்கள் மறைக்கப்பட்ட உணர்வுகள் இப்போது உடன் இருக்கும் ஒருவருக்குத் தெரியக்கூடும். நீங்கள் உணர்ச்சி ரீதியாக வேறொருவரை சார்ந்து இருக்கலாம். ஆனால் நீங்கள் அவரை பிரிந்து சுதந்திரமாக செல்ல வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் கல்

சிம்மம் :

ஆடம்பர விஷயங்களில் ஈடுபடுவது போல் நீங்கள் உணரலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பணிகளை இன்று முடிப்பீர்கள். உங்களில் சிலர் விரைவில் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு செல்ல திட்டமிடலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி

கன்னி :

இன்று நெருங்கிய நபர் ஒருவரை பிரியும் சூழல் உருவாகலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். நீங்கள் அதிகளவு பணத்தை கையாளுபவர் என்றால் அதை இழக்காமல் இருக்க கவனமாக இருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தர் சிலை

துலாம் :

உங்களின் தலைமைப் பண்பு அதிகரித்து வருவதை உணர்வீர்கள். அலுவலகத்தில் இன்று உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். இன்று மகிழ்ச்சியான நாள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடல் அலை

விருச்சிகம் :

இன்று உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் உங்களை தவறாக புரிந்து கொண்டதாக எண்ணி வருத்தப்படுவீர்கள். உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் இன்று வரும். நீங்கள் விரைவில் ஒரு புதிய சொத்து ஒன்றை வாங்கும் சூழல் உருவாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அறை

தனுசு :

இன்று அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். நீங்கள் ஒரு புதிய வணிக யோசனையை நினைத்தால், அது உங்களுக்கு சாதகமாக விரைவில் செயல்படும். உங்கள் கூட்டாளியை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏணி

மகரம் :

எந்த ஒரு சவாலையும் கையாள்வதில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் மிகவும் நெருக்கமாக நம்பும் ஒருவர் உங்களுக்கு உதவியாக இருப்பார். சாலைப் பயணத்தின் போது கவனம் தேவை.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி

கும்பம் :

இன்று உங்கள் வேலையை முடிக்க விரிவான திட்டங்களை செய்து கொள்வீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் மேலும் தள்ளிப் போகலாம் என்பதால் கவனம் தேவை. அதேநேரத்தில் போதிய ஓய்வும் அவசியம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். குடும்பம் அல்லது மனைவியிடமிருந்து வரும் ஆலோசனையை கேட்பது நல்லது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கேன்வாஸ்

மீனம் :

உங்கள் கடந்தகால செயல்கள் குறித்து நீங்கள் நிறைய குற்ற உணர்ச்சிகளை அனுபவிக்கலாம். உங்களுடன் கூட்டாளியாக இருந்த ஒருவரும் அதையே உங்களுக்கு நினைவூட்டுவார். காலம் விரைவில் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கும் என்பதால் அமைதியாக இருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு இறகுகள்

First published:

Tags: Oracle Speaks, Tamil News