மேஷம்:
கடந்த கால நிலுவைகளை செலுத்தி, ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு உகந்த நாளாகும். லேசான உடல் நல பாதிப்புகள் அல்லது தொற்றுகள் குறித்து கவனம் தேவை. வாதம் எழுகின்ற சூழலில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்
விருச்சிகம்:
இன்றைய தினத்தின் ஆற்றல்கள் கலந்த உணர்வுகளை கொண்டதாக இருக்கும். இதனால் நீங்கள் கொஞ்சம் குழப்பம் அடையலாம். யாரேனும் கடன் கேட்டால், அமைதியாக அதை மறுத்து விடுங்கள். நிறைய நடைபயிற்சி செய்யவும். அது உங்கள் உடல்நலனுக்கு நல்லது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகுகள்
மிதுனம்:
உங்கள் மனம் வலுவானதாக இருந்தாலும் கூட, பிறர் இன்று உங்களை உணர்ச்சி ரீதியாக தூண்டிவிடுவார்கள். சீரான நிலையில் இருக்க சில பேச்சுவார்த்தைகள் தேவைப்படலாம். சக ஊழியர் ஒருவர் உங்களிடம் நிதி உதவி கேட்கலாம். அது நியாயமானதாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூலாங்கல்
கடகம்:
பழைய நண்பர்களை சந்திப்பீர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பருவ சூழ்நிலை உங்கள் திட்டங்களுக்கு எதிரானதாக அமையலாம். ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் பணி செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கைத்தயாரிப்பு பேப்பர்
சிம்மம்:
முன் அறிவிப்பு இல்லாமல் விருந்தினர்கள் வரக் கூடும். இன்றைய தினம் கொண்டாட்டம் மிகுந்ததாக இருக்கும். தடைபட்ட நிதிப்பலன்கள் வந்து சேரும். சக ஊழியர் ஏதேனும் குறைகளை முன்வைப்பார். அதை தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்து
கன்னி:
பணியிடத்தில் உங்களுக்கான வேலை சுமூகமாக நடைபெறும். அலுவலகத்திலும், வீட்டிலும் ஆவண நடவடிக்கைகளை சரியாக கையாளவும். தூக்கமின்மை பிரச்சினையால் நீங்கள் அவதி அடையும் நிலையில், ஆழ்ந்த உறக்கம் உறங்க முயற்சிக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வாசற்படி
துலாம்:
கவனமாக இருப்பதால் நீங்கள் பலவீனமாக உள்ளீர்கள் என்று அர்த்தம் அல்ல. வலுவான கருத்துக்களை முன்வைக்கவும். புதிய உணவை முயற்சி செய்வதற்கான நாளாகும். உங்கள் உடல் நலன் மீது மிகுந்த கவனம் செலுத்தவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு தலைப்பாகை
விருச்சிகம்:
உங்கள் ஆழ்மனதில் அச்சம் அல்லது கெட்ட கனவுகள் தென்படக் கூடும். அவற்றை தீவிரமானதாக கருத வேண்டாம். வீட்டிற்கு வருகின்ற நபர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். தினசரி திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளையும் முன்னெடுத்துச் செல்லவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செங்கல் சுவர்
தனுசு:
யாரோ ஒருவர் உங்களை தவற விடுகிறார். உங்கள் குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்கவும். மாலையில் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டால் சந்தேகங்கள் தீரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய அடையாளம்
மகரம்:
பழைய நினைவுகள் உங்கள் மனதில் இன்றைக்கு தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். உங்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கும் பெற்றோரின் கருத்துக்களை கேட்டறியவும். புதிய அணுகுமுறையுடன் பழைய திட்டத்தை கடைப்பிடிக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் பாட்டில்
கும்பம்:
உங்கள் அச்சம் இப்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது. சமீப காலங்களில் உங்களுக்கு கிடைத்த விஷயங்கள் குறித்து பெருமை கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்களுக்கான பொறுப்புகள் விரைவில் அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆழமரம்
மீனம்:
குடும்பத்திற்கு உணர்வுப்பூர்வமான ஆதரவு உங்களிடம் இருந்து கிடைக்கிறது. புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக வாய்ப்பு இருக்கிறது. மனை வணிகம் தொடர்புடைய நபர்கள் பிஸியாக வலம் வருவீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவைகள் கூட்டம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News