மேஷம்:
இன்று நீங்கள் கணக்கிட்டதை விட செலவுகள் அதிகரிக்கலாம். எனவே இன்றைய நாளில் உங்கள் செலவுகளை புத்திசாலித்தனமாக திட்டமிடுங்கள், ஏனெனில் வரவிருக்கும் செலவுகளை சமாளிக்க உங்களுக்கு கையிருப்பு தேவைப்படலாம். இன்று லேசான உடல்நல அசௌகரியம் ஏற்பட கூடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் நிற சஃபையர்
ரிஷபம்:
இன்று உங்களது வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலுமே ஒரு பரபரப்பு காணப்படும். இன்று நீங்கள் வெளியில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதையோ அல்லது ஆர்டர் செய்வதையோ தவிர்க்கலாம். நாளின் இரண்டாம் பாதி உங்களுக்கு அமைதியாக செல்ல கூடிய வாய்ப்பு உண்டு.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நினைவுப் பொருள்
மிதுனம்:
இன்று உறவுகள் உங்களிடம் வைத்திருக்கும் பல எதிர்பார்ப்புகள் உங்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்தலாம். எனவே உங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப அவர்கள் செயல்படவில்லை என்பதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். நீங்கள் நெருக்கமாக இருக்கும் ஒரு நபரைப் பற்றி புதிதாக ஒன்றை தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிளாக் அப்சிடியன்
கடகம்:
நிலுவையில் உள்ள உத்தியோகபூர்வ விஷயங்களில் இன்று நீங்கள் கவனம் செலுத்த சிறந்த நாள். பணியிடத்தில் நிலவும் பிரச்சனைக்கு நீங்கள் கூறும் ஒரு தீர்வு உங்களது இமேஜை உயர்த்தும். உங்களிடம் கொடுக்கப்படும் வேலைகளை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஒயிட் சிட்ரைன்
சிம்மம்:
புதிய வேலைகளை தொடங்கவும், நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதற்கும் இன்று சாதகமான நாள். உங்களுக்கு நன்கு தெரிந்த ஒருவர் உங்களுக்கு இன்று புதிய வாய்ப்பை வழங்கலாம். உங்களை நேசிப்பவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற இன்று வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பைரைட்
கன்னி:
ஒரு கதவு மூடினால் வேறு ஒரு கதவு திறக்கும் என்பதற்கு ஏற்ப இந்து உங்களுக்கான வாய்ப்புகள் அமையும். உங்களின் நீண்ட நாள் பழக்கங்களை இன்று நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும். இன்று நீங்கள் ஒரு பயனுள்ள பயணத்தை திட்டமிடலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளியர் குவார்ட்ஸ்
துலாம்:
நீண்ட காலமாக நீங்கள் சந்திக்காத நண்பர்களை தொடர்பு கொள்ள இன்று நல்ல நாள். உங்கள் பெஸ்டியுடன் இன்று நீங்கள் தரமான நேரத்தை செலவிடலாம். இன்று உங்களது எனர்ஜி பிஸியான அட்டவணையை எளிதாக எதிர்கொள்ள உதவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ட்ரீம்கேட்ச்சர்
விருச்சிகம்:
உங்களது தனிப்பட்ட வேலைகளை முடிக்க இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்று நீங்கள் முடிவெடுக்கும் மாற்றங்கள் உங்களுக்கு நீண்ட கால பலனை தரும். பணியிடத்தில் நீங்கள் உருவாக்கும் ஒரு புதிய மெக்கானிஸம் உள்விமர்சனத்தை சந்திக்கலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஸ் குவார்ட்ஸ்
தனுசு:
இன்று உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் அல்லது பழைய புகைப்படங்கள் உங்களது பழைய மலரும் நினைவுகளை தூண்டி ஏக்கத்தை ஏற்படுத்த கூடும். இன்று நீங்கள் மனரீதியாக சோர்வடையலாம். எனினும் நீங்கள் உங்கள் ஆற்றலை தக்க வைக்க வேண்டும் அப்போது தான் நாள் அமைதியாக செல்லும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ப்ளூ டூர்மலைன்
மகரம்:
இன்று நீங்கள் எதிர்பாராவிதமாக ஒரு குறுகிய பயணத்திற்கு திட்டமிடும் சூழல் ஏற்படலாம். இந்த பயணம் உங்கள் குடும்பத்துடன் கூட இருக்கலாம். எனவே நீங்கள் இல்லாத போதும் கூட உங்களது சில வேலைகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செழிப்பான தோட்டம்
கும்பம்:
ஒத்திகைகள் அல்லது பிராக்டிஸ் செஷன்ஸ் இன்று உங்களது நேரத்தை வீணடிக்கக்கூடும். மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கு இன்றைய நாள் வழக்கமான நாளை விட பரபரப்பாக இருக்கலாம். ஊழியர்கள் வேலையில் இன்று சாதகமான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஸ் கோல்ட் ரிங்
மீனம்:
சமீப நாட்களாக நீங்கள் சந்தித்து வந்த நெருக்கடி இறுதியாக இன்று தீர்க்கப்படலாம். நீங்கள் புதிய வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால் இன்று சிறந்த நாள். பார்ட்னர்ஷிப் விவகாரங்கள் இன்று பலனளிக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில் இறகு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News