ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைக்கு (டிசம்பர் 06, 2022) வெற்றி கிடைக்கும் நாளாக அமையும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைக்கு (டிசம்பர் 06, 2022) வெற்றி கிடைக்கும் நாளாக அமையும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு வெகுமதியை நீங்கள் பெறக்கூடும். சில விளையாட்டு வீரர்களின் உணர்வைப் புரிந்துக் கொண்டு அவர்களின் துன்பத்தில் நீங்கள் உதவ நேரிடும். சக ஊழியர்களுடன் சிறு சிறு பயணத்தை மேற்கொள்ளவும். வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணும் நாள் இன்று.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான வானம்

ரிஷபம்:

இன்றைக்கு உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படவும். உடலில் ஏற்படும் சுகாதாரப் பிரச்சனைகளை ஒரு போதும் புறக்கணிக்கக்கூடாது. உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போராடுங்கள். பணிக்கான நேர்காணலுக்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆர்க்கிட்

மிதுனம்:

காலையிலேயே சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல் நலக்குறைபாடு ஏற்படக்கூடும். உங்களின் பங்களிப்பு சமூக முன்னேற்றத்திற்காக அமையும். உங்களுடன் யாராவது போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பகடை

கடகம்:

இன்றைக்கு பணியிடத்தில் சில சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடும். பழைய நண்பர்களிடமிருந்து எதிர்பாராத செய்திகளை நீங்கள் பெறக்கூடும். பணியிடத்தில் ஏற்படும் கடுமையான வாக்குவாதம் உங்களை வருத்தமடையச் செய்யும். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் உங்களது பணி அமையக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல பேருந்து.

சிம்மம்:

பொது இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பொது இடங்களில் மோசமான நபராகக் காணப்படுவீர்கள். மற்றவர்களின் பொறாமைக்குணம் உங்களின் மன அமைதியைப் பாதிக்கும். எனவே எதையும் மனதில் கொள்ள வேண்டாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கூடைப்பந்து

கன்னி:

இன்றைக்கு உங்களது ஆன்மீக பயணம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும் நாள் இன்று. விடாமுயற்சியுடன் வாழ்க்கையில் போராட வேண்டும். உங்களது நெருங்கிய நண்பர்களில் சிலர் தாழ்வாக உங்களை நினைக்கக்கூடும். எனவே எப்போதும் நிதானத்தை கைவிடாதீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காபி குவளை

துலாம்:

இன்றைக்கு வெற்றி கிடைக்கும் நாளாக அமையும். எல்லாவற்றிலும் முழுமையான அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டாம். எதிலும் கோபம் கொள்ள வேண்டும். நிதானம் முக்கியம். பிறர் சொல்வதைக் கேட்க முயலுங்கள். நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் உங்களது மதிய உணவு சிறப்பாக அமையும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி கிண்ணம்

விருச்சிகம்:

புதிய வாழ்க்கைக்கான தொடக்கமான இந்த நாள் அமையும். உங்களது மனதில் ஏற்படும் அச்சங்களை விட்டு புதிதாக பல வேலைகளைத் தொடங்க வேண்டிய நேரம் இன்று. குடும்பத்தினரிடம் உறுதியான ஆதரவைப் பெறுவீர்கள். விரைவில் பணியில் பலரின் ஒத்துழைப்போடு முன்னேறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மிட்டாய் கடை

தனுசு:

இன்றைக்கு எதிர்பாராதவிதமாக பல வியத்தகு மாற்றங்கள் ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களின் பங்களிப்பிற்கான கிரெடிட்டைப் பெற முடியும். உங்களது உடல் நலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். காலையில் சில சர்ச்சைகள் நிலவினாலும் மாலையில் நிம்மதியான மனநிலையைப் பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல நிற துணி

மகரம்:

இன்றைக்கு உங்களின் பணித்திட்டங்களில் ஏற்படும் திடீர் மாற்றம் குழப்பத்திற்கு வழிவகுக்கும். ஒரே நேரத்தில் பல விஷயங்களில் உங்களுக்கு கவனம் சிதறும் என்பதால் நிதானம் தேவை. பிடித்த நபர் உங்களது அருகில் இருப்பது நிம்மதியான மனநிலையைக் கொடுக்கும். மாலையில் ஒய்வு எடுப்பது சிறந்தது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்குப் பிடித்த இனிப்பு

கும்பம்:

இன்றைக்கு சற்று நிதானமாக இருக்க வேண்டிய நாள் உங்களுக்கு. நீங்கள் செல்லும் இடம் உங்களின் எதிர்ப்பார்ப்பின் படி இல்லாமல் இருக்கலாம். இருந்தப்போதும் அதை ஏற்றுக்கொள்வது நல்லது. எப்போதாவது நீங்கள் எடுத்த முடிவைப் பற்றி பரிசீலனை செய்யக்கூடும். உங்களது பணியில் விரைவில் ஓய்வு பெறுவதோடு நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டிய நாள் இன்று.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு மொபைல் கவர்

மீனம்:

இன்றைக்கு தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிரமத்தைச் சந்திக்கும் நாளாக அமையும். எதிர்பாராத முடிவுகளால் நீங்கள் விரைவில் ஆச்சரியப்படக்கூடும். உங்களிடம் உள்ள தனித்துவமான திறமையால் உங்களின் வாழ்க்கை மேம்படையக்கூடும். நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும். எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செப்பு பாத்திரம்

First published:

Tags: Oracle Speaks, Tamil News