மேஷம்:
நீங்கள் ஏதேனும் பொறுப்பு ஒன்றை நிலுவையில் வைத்துள்ளீர்கள் என்றால், அதனை உடனடியாக நிறைவேற்றவும். ரகசியம் காப்பது சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும். இன்றைய தினம் சற்று சிக்கலானதாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரிஸ்டல் பாத்திரம்.
ரிஷபம்:
திட்டமிட்ட செயல்களில் இருந்து ஏதேனும் மாற்று யோசனைகளை கடைபிடித்தால் அந்த வேலையை மீண்டும் செய்ய வேண்டி இருக்கும். பயணங்களுக்கு திட்டமிடுபவர்கள் தாமதத்தை தவிர்க்க முன்கூட்டியே இறுதி செய்யவும். ஏதேனும் ஒன்று குறித்த ஆர்வ மிகுதியால் நீங்கள் கவலை அடைவீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரிஸ்டல்.
மிதுனம்:
ஆச்சரியமான செய்தி தேடி வர இருக்கிறது. இன்றைய தினம் சற்று பிசியாக இருப்பீர்கள். பணியிடத்தில் உங்களை யாரோ சிலர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். முக்கியமான விஷயத்தின் ரகசியம் வெளிவர இருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண் குவளை.
கடகம்:
ஏதேனும் சில விஷயங்கள் குறித்து கோபமாக உள்ளீர்கள் என்றால், அதனை புறக்கணிக்கவும். உணர்ச்சி மற்றும் கவலைகளால் உங்கள் உடல் நலன் கடுமையாக பாதிக்கக் கூடும். புதிய வாய்ப்புகள் எட்டும் தூரத்தில் இருக்கின்றன.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு.
சிம்மம்:
உண்மையான சிந்தனைக்கு மாற்று ஏதும் இருக்க முடியாது. ஆகவே, புதியதாக ஒன்றை ஏற்றுக் கொள்ளும் முன்பாக யோசிக்க மனதிற்கு நேரம் ஒதுக்கவும். உங்களுக்கு வயிறு சார்ந்த உடல்நல பிரச்சினைகள் வரலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரமிடு.
கன்னி:
உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஏதேனும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டீர்கள் என்றால், அதன் மீது உறுதியாக இருக்கவும். வாய்ப்புகள் உங்கள் மனதுக்கு நெருக்கமாக வருகின்றன. பேச்சுத் திறன்களை முடிந்த வரையில் மேம்படுத்தவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்டிக்கர்.
துலாம்:
பணிகளில் நீங்கள் காலக்கெடுவை தவறவிட கூடும். என்ன நடந்தது என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்வது நல்லது. முடிவறாத ஒன்றை நீங்கள் மீண்டும் தொடங்கி செய்ய வேண்டி இருக்கும். பழைய நண்பருடன் சந்திப்பு நடைபெற உள்ளது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய கார்.
விருச்சிகம்:
நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. கவன சிதறல் பிரச்சனையை நீங்கள் தற்போதைக்கு எதிர்கொண்டு வருவீர்கள். உங்கள் உடன் பிறந்தவரின் நண்பர்கள் உங்களுக்கு ஊக்கமளிப்பார்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவற்ற படம்.
தனுசு:
நீங்கள் யோசித்துக் கொண்டிருந்த விஷயம் உண்மையாகவே நடைபெற இருக்கிறது. குடும்ப வரலாறு குறித்து புதிய விஷயம் உங்களுக்கு தெரிய வரப் போகிறது. பணியை காட்டிலும் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பவுல்.
மகரம்:
உங்களால் மாற்றிக்கொள்ள இயலாத விஷயத்தை விட்டு விடுவது நல்லது. இன்றைய தினம் முடிவுகளை எடுப்பது சற்று கடினமானதாக இருக்கும். குறுகிய பயணம் ஒன்று உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதாக அமையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மர பிரேம்.
கும்பம்:
நீங்கள் திட்டமிட்ட பலன்கள் கிடைக்கவில்லை என்றால், அவற்றை விட்டு விடுவது நல்லது. பணியிடத்தில் உங்கள் தகவல்களை சிலர் பயன்படுத்தக் கூடும். ஆகவே கவனமாக இருங்கள். நல்ல செய்தி மற்றும் சாதகமான மாற்றம் வர இருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சர்க்கரை.
மீனம்:
நெருங்கிய நண்பர் ஒருவரை சந்திக்க உள்ளீர்கள். மனதோடு மனம் விட்டு பேசினால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எந்த ஒரு விஷயம் குறித்தும் ஒரு முடிவுக்கு வரும் முன்பாக அனைத்து உண்மைகளையும் பரிசீலனை செய்யவும்.
உங்கள் ராசிக்கான அதிசய அடையாளம் - லாவண்டர் பூ.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News