ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 03, 2022) சிறு தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 03, 2022) சிறு தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு பண வரவு ஏற்படும் நாளாக அமையும். வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். உங்களது நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கும் செயல்களில் நீங்கள் ஈடுபடக்கூடும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். வீட்டு மனை மற்றும் வீடு தொடர்பான கடன்களுக்கு உதவி கிடைக்கும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு படிகம்.

ரிஷபம்:

இன்றைக்கு நன்மை நிறைந்த நாள் உங்களுக்கு. இஷ்ட தெய்வ வழிபாடு எப்போதும் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நெருங்கிய உறவுகளுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து மேற்கொள்வீர்கள். வேலை நேரத்தை அதிகம் பயன்படுத்த முயற்சிக்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காப்பர் பாட்டில்

மிதுனம்:

சிறு தொழில் புரியவர்களுக்கு முன்னேற்றமும், புதிய வாய்ப்புகள் ஏற்படும் நாளாக அமையும். வியாபாரப் பணிகளில் ஏற்பட்ட சிறு, சிறு மாற்றங்களின் மூலம் நல்ல லாபம் அடைவீர்கள். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான ஆசைகள் நிறைவேறும். சில விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் புத்துணர்வை நீங்கள் பெற முடியும்..

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீரூற்று

கடகம்:

இன்றைக்கு குழப்பமான நாளாக அமையும். பரபரப்பான நேரங்களில் உங்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பது முன்னேற்றத்திக்கு வழிவகுக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்து வந்த பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். தலைமை மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்பு விரைவில் வரக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழங்கால கடிகாரம்

சிம்மம்:

வாழ்க்கையில் யாரையாவது இதுவரை புண்படுத்தியிருந்தால், நிச்சயம் அவர்கள் உங்களை இதுவரை மன்னிருத்திருக்க மாட்டார்கள். தந்தை வழி உறவுகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பானப் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உருவாகும். வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய கூடுதல் முயற்சி தேவை. நெருங்கிய நண்பர்களுடன் சிறிய பயணம் செல்ல திட்டமிடலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான வானம்

கன்னி:

நலம் நிறைந்த நாளாக இன்று உங்களுக்கு அமையும். கணவன், மனைவி உறவுகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல நாள் இன்று. நண்பர்களின் மத்தியில் நல்ல பெயர் உண்டாகும். உங்களின் வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நல்ல நெட்வொர்க்கில் இருப்பவர்களிடமிருந்து வாய்ப்பு வரக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வரிசையில் எண்கள்

துலாம்:

பணியிடத்தில் நிலவி வந்த அமைதியான சூழல் பாதிக்கப்படலாம். உங்களது வேலையில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீட்டில் கவனமாக இருக்கவும். ஆடம்பரமான பொருள்களின் மீது ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டு தாவணி

விருச்சிகம் :

நீண்ட நாள்களாக இருந்து வந்த கவலைகள் விட்டு நீங்கும். வேலையில் இப்போது உருவாகும் சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விவாதங்களில் உங்களது சாதுர்யமான பேச்சுகளின் மூலம் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அறம் சார்ந்த காரியங்களில் உங்களின் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு வலை.

தனுசு:

இன்றைக்கு அமைதி நிறைந்த நாளாக அமையும். வாழ்க்கையில் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளின் மூலம் தெளிவான மனநிலை ஏற்படும். நீங்கள் தொலைத்தூர உரையாடல்களில் ஈடுபடும் சூழல் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மலர் அலங்காரம்

மகரம்:

குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் நாள் இன்று. சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தைரியாக முடிவு எடுக்க வேண்டும். அனுபமிக்க பணியாளர்களின் ஒத்துழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். படிப்பில் கவனம் தேவை. மனதில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து உபாதைகள் குறையக்கூடும். எந்த பிரச்சனைகள் வந்தாலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கேன்வாஸ் ஷூ

கும்பம் :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும் நாள் இன்று. பணிகளில் சோர்வாக இருக்கக்கூடும். சிறிது நேரம் ஓய்வு உங்களுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். எந்தவொரு வேலையையும் மதிப்பிடுவதற்கு முன்னதாக, எது சரி? முடியுமா? என்பது குறித்து ஆராய வேண்டும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத பணவரவின் மூலம் உங்களது சேமிப்பு மேம்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீர்நிலை

மீனம் :

இன்றைக்கு உங்களின் நண்பர்களின் மூலம் உதவியைப் பெறக்கூடிய நாளாக அமையும். பெருந்தன்மையாக செயல்பட்டு பலரின் ஆதரவைப் பெறுவீர்கள். யாரையும் விமர்சிக்க வேண்டாம். நீங்கள் முன்பு சேமித்தப் பணம் உங்களுக்கு தற்போது உதவியாக இருக்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் முடிவெடுப்பதற்கு இன்னும் பல பயிற்சிகள் தேவைப்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் குவளை

First published:

Tags: Oracle Speaks, Tamil News