ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 24, 2022) புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 24, 2022) புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களது நோக்கங்களை மற்றவர்கள் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்வார்கள் என்பதால் இன்று நீங்கள் போட்டி போடும் மனப்பான்மையை புறக்கணிக்கலாம். வியாபாரிகளுக்கு இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் தேடி வரலாம். உங்களை வருத்தப்படுத்தும் அல்லது கோபமூட்டும் ஒன்றைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துவது சவாலாக இருக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏரி

ரிஷபம்:

வேலை தொடர்பான சவால்களுக்கு நீங்கள் இன்று தயாராக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறு குறைவு ஏற்பட்டால் கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அலட்சியம் காட்டினால் விளைவுகள் பெரிதாக இருக்கலாம். உங்கள் செயல்திறனில் சுணக்கம் ஏற்படுவதை உங்கள் சீனியர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே கவனம் தேவை.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேனீ

மிதுனம்:

நீங்கள் கடினமாக முயற்சி செய்திருந்தாலும் உண்மையில் உங்களுக்கு என்ன தேவை என்பதை நோக்கியதாக அது இருக்க வேண்டும். அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் ஒரு சக ஊழியர் உங்கள் இமேஜிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கலாம். இன்று உங்கள் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பேச்சுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெண்கல வாலட்

கடகம்:

நீங்கள் மிகவும் நம்பும் நபர்களை இன்று மதிப்பாய்வு செய்ய வேண்டும் அல்லது அவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். நீங்கள் சில சந்தர்ப்பங்களில் யதார்த்தத்தை ஏற்று கொண்டு இயல்புக்கு திரும்ப வேண்டும். இன்று உங்களைச் சந்திக்கும் நபர்களுக்கு நீங்கள் நேர்மறை அதிர்வுகளை கொண்டவராக தெரிவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டம்ளர்

சிம்மம்:

பொருளாதார நஷ்டம் ஏற்படாமல் இருக்க பணத்தில் கவனம் அவசியம். உங்கள் அணுகுமுறையால் வீட்டில் உள்ளவர்களால் நீங்கள் விமர்சிக்கப்படுவீர்கள். இணக்கமான மனப்பான்மை, குழு மனப்பான்மை மற்றும் ஆர்வமுடன் கற்கும் திறனை இன்று நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வாக்கிங் ஸ்டிக்

கன்னி:

இன்று உங்களது வாழ்வில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவரை நேரில் சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் ஒரு சிறிய பயணம் திட்டமிடலாம். அது சில நீடித்த நினைவுகளை உங்கள் மனதில் விட்டுச் செல்லும். சூழ்நிலைகள் ஏதுவானாலும் பிறருடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிளாக் கிரிஸ்டல்

துலாம்:

இன்று உங்களுக்கு கிடைக்கும் ஒரு புதிய திட்டம் அல்லது பணி உங்களை இன்னும் சில நாட்களுக்கு பிஸியாக வைத்திருக்கும். இதற்கிடையே உங்களுடன் நேரத்தை செலவிட உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு இன்று முக்கியத்துவம் கொடுங்கள். உறுதியாக தெரியாத் விஷயங்களில் ஈடுபடாமல் அவற்றை ஒத்திவைப்பது நல்லது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேக்கு மரச்சாமான்கள்

விருச்சிகம்:

பணியிடத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சில வேலையை முடிப்பதன் மூலம் இன்று உங்களுக்கு நல்ல உயர்வு காத்திருக்கிறது. இதனால் நீங்கள் இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கூடிய விரைவில் உங்களது நண்பர்களுடன் ஒன்றுகூடி மகிழ்வதற்கான திட்டத்தை இன்று முன்னெடுப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மூங்கில் செடி

தனுசு:

நீங்கள் சில விஷயங்களை தீர்க்க நினைத்தால் அதற்கு கோபம் சரியான வழி இல்லை. எனவே கோபத்தை மூட்டை கட்டி மூலையில் வைத்து விடுங்கள். சூதாட்டம் போன்ற ஆபத்தான விஷயங்களில் ஈடுபடுவதை இன்று தவிர்க்கவும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளியர் குவார்ட்ஸ்

மகரம்:

குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல்நிலை கவலைக்குரியதாக இருக்கலாம். யாரோ ஒருவரிடமிருந்து கிடைக்கும் ஒரு சிறிய உதவி அல்லது நிதி உங்களது எதிர்பாராத நெருக்கடியை சமாளிக்க உதவும். நிதி நெருக்கடிகளை சமாளிக்க உங்கள் மனைவியுடன் கலந்துரையாடுவது உதவியாக இருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளிம்பர்

கும்பம்:

நீங்கள் எதிர்பார்த்த சில விஷ்யங்கள் இன்று நடக்காமல் போகலாம். எனவே மன அழுத்தத்தை நிர்வகித்து இயல்பாக இருங்கள். இன்று நீங்கள் ஒரு குறுகிய பயணம் மேற்கொள்ள கூடும். இன்று வீடு மற்றும் அலுவலகத்தை தவிர பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று நேரத்தை சிறப்பாக செலவிடுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ப்ளூ சஃபையர்

மீனம்:

நீண்ட நாட்களாக நீங்கள் நிலுவையில் வைத்திருந்த சில செயல்களை இன்று வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எனவே இன்று உங்களக்கு மன அழுத்தம் குறைவாகவே இருக்கும். இன்று நீங்கள் புதிய முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் தயக்கம் தேவை இல்லை. உங்களுக்கு நெருக்கமானவர்களை மூலம் இன்று நீங்கள் நிறைய உதவிகளை பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயிலிறகு

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News