ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (நவம்பர் 19, 2022) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (நவம்பர் 19, 2022) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

கணிப்புகளில் ஏதேனும் சின்ன தவறு இருந்தாலும் கூட ஒட்டுமொத்த திட்டமும் தோல்வியடைய கூடும். ஆகவே, தகவல்களை அனுப்புகையில் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒருவர் மூலமாக அதிர்ச்சி தரக்கூடிய செய்தி வந்து சேரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வைர மோதிரம்.

ரிஷபம்:

கடந்த காலங்களில் நீங்கள் செய்த தவறுகளுக்கு இப்போது வருந்த வேண்டியிருக்கும். இது உங்களுக்கு துரதிஷ்டமான தருணம் என்று கூறலாம். தற்போது புதிய பந்தம் மற்றும் உறவுகளை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சோஃபா.

மிதுனம்:

உங்கள் மனதில் பூட்டி வைத்துக் கொள்ளக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கும். அப்படியொரு நிகழ்வு தற்போது நடைபெற இருக்கிறது. நீங்கள் புதிய வேலையில் சேரலாம் அல்லது பணியிட மாறுதல் கிடைக்கக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு தலைப்பாகை.

கடகம்:

நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் குடும்பம் ஒன்று கூடி சந்திப்பதை நீங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். பயணத்தின் போது தாமதம் அல்லது அசௌகரியம் ஏற்படலாம். சாதுர்யமாக செயல்பட வேண்டிய தருணம் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவை கூண்டு.

சிம்மம்:

சிலர் மீது நீங்கள் காட்டக்கூடிய இரக்கம் அவர்களுடைய மனதை புண்படுத்த கூடும். உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு நீங்கள் விசுவாசத்துடன் இருக்க வேண்டும். இலக்கை நோக்கிய உள்ளார்ந்த பார்வைகளை பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரானைட் கல்.

சிம்மம்:

நீங்கள் சிங்கிளாக உள்ளவர் என்றால், ஒத்த கருத்துடைய ஒருவரை வெகுவிரைவில் நீங்கள் சந்திக்க கூடும். முக்கியமான விஷயங்களை உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். நல்லதொரு துணை கிடைத்தால் வாழ்க்கையில் எல்லாம் மாறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரிஸ்டல் ஜார்.

துலாம்:

அனுபவம் நிறைந்த நபர் ஒருவர், பலம் நிறைந்தவராக காட்சியளித்தாலும், அவரிடமும் பலவீனங்கள் இருக்கக்கூடும். ஆவணங்களை கையெழுத்திடும் முன்பாக ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும். பாட்டு பாடும் துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் கிடைக்க இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய இரும்பு.

விருச்சிகம்:

உங்கள் மீது சிலர் நம்பிக்கை இழந்துவிட்டால், அதை வார்த்தைகளால் சரி செய்ய இயலாது. உங்கள் செயல் மூலமாகத்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அலுவலகத்தில் நிலவும் அரசியல் சூழலை நீங்கள் மிகவும் தீவிரத்தன்மை உடையதாக எடுத்துக் கொள்கிறீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி நகை.

தனுசு:

ஒரு நபர் அல்லது இலக்குகளை பின்தொடர்ந்து செல்கிறீர்கள் என்றால், அதற்கு இன்னும் கூடுதலான கவனம் தேவை. இதற்கு மேலும் உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் ஆழ் மனதுக்கு உண்மைகள் தெரியும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணி பிளான்ட்.

மகரம்:

இன்றைய நாள் மந்தமானதாக இருக்கும், எந்த ஒரு செயலையும் நீங்கள் நிறைவு செய்ய இயலாது. ஆனால், உண்மையான பணிகள் தொடங்குவதற்கு முன்பாக ஏற்படும் சின்ன இடைவெளி தான் இது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஏதோ ஒன்றை முழுமையாக படிக்க இருக்கிறீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலிக்கான்.

கும்பம்:

பணிகளில் லாபம் மற்றும் இழப்பு ஆகிய இரண்டுமே ஏற்படக்கூடும். இதில் எது நடந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை துணை ஏதோ ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். பிறரை அதிகம் சார்ந்து இருந்தால், மனக்கசப்பு ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேன்கூடு.

மீனம்:

திடமான முடிவு எடுத்துக் கொண்டவர்களை நீங்கள் சமரசம் செய்ய இயலாது. உங்களை சுற்றி உள்ள நபர்கள் உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் இலக்கு தெளிவானதாக இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரமிடு.

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News