ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 26, 2022) வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 26, 2022) வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களுக்கு இன்று தோன்றும் யோசனைகளை சரியாக செயல்படுத்த நடைமுறை மற்றும் செயல் சார்ந்த அணுகுமுறை தேவை என்பதை உணர்வீர்கள். வேலைப்பளு காரணமாக உங்களது வழக்கமான செயல்பாடுகளில் இடையூறு ஏற்படலாம். உங்களை பாராட்டும் நபரிடமிருந்து அனுகூலமான பலன்களை பெற கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இறகு

ரிஷபம்:

உங்கள் இலக்குகள் முன்பு இருந்ததை விட இன்று நன்கு வரையறுக்கப்பட்டதாக இருக்கும். உங்களது திறமைக்கு இன்று நல்ல தேவை இருக்க கூடும். சிறு வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை கூட தவறவிடாதீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பறவை

மிதுனம்:

உங்களது மனதில் உள்ள இலக்குகள் காரணமாக வேலை மாற வேண்டும் என்ற உந்துதல் இன்று அதிகரிக்கும். அதே நேரம் புதிய வாய்ப்புகளை ஏற்று கொள்வதா வேண்டாமா என்ற குழப்பம் பதற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் ரகசியங்களை வெளியாட்களிடம் ஷேர் செய்து கொள்ளாதீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலந்தி

கடகம்:

ஒரு நெருங்கிய நண்பர் உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் படிக்கும் அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்து இன்று நீங்கள் சந்தோஷமான செய்திகளை பெறும் வாய்ப்புகள் அதிகம். எனினும் உங்களது அடுத்தகட்ட நகர்வுகளில் ஏமாற்றத்தை உணர கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - 2 சிட்டுக்குருவிகள்

சிம்மம்:

வாழ்க்கையில் தற்செயல் நிகழ்வுகள் என்று எதுவும் இல்லை, எனவே உங்களை தேடி வந்திருக்கும் வாய்ப்புகள் உங்களுக்கானது மட்டுமே. உங்கள் அன்றாட வேலைகளை செய்வதில் இன்று சில தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம். மதியத்திற்கு பிறகு உங்களை மகிழ்விக்கும் செய்திகளை பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் குவளை

கன்னி:

நீங்கள் சொல்ல நினைப்பதை எதிர்தரப்பு சரியாக புரிந்து கொள்ளாமல் போகலாம். இதனால் ஏற்படும் குழப்பங்களால் உங்களது அன்றாட பணிகள் வெகுவாக பாதிக்கப்படலாம். உங்களது நெருங்கிய நபர் உங்களுக்காக சில தனிப்பட்ட செய்திகளை கொண்டிருக்க கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல நிற பானைகள்

துலாம்:

வாழ்வில் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுக்க இன்று தயாராக இருப்பீர்கள். எனினும் உங்களது செயல்திறனை இன்னும் மேம்படுத்த வேண்டியிருக்கலாம் என்பதை உணர்வீர்கள். இன்று நீங்கள் மேற்கொள்ளும் குறுகிய பயணம் உங்களது மனநிலையை தெளிவாக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கழுகு

விருச்சிகம்:

இன்று நீங்கள் உங்களது பழைய மற்றும் நம்பிக்கையான நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இந்த சந்திப்பு உங்களுக்குள் புதிய ஆற்றலை கொண்டுவரும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டால் இன்று வேண்டாம். பொழுதுபோக்குத் துறையில் இருப்பவர்கள் வெற்றியை காண்பார்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அணில்

தனுசு:

நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் சாதகமான முடிவுகளை பெற விரும்பினால் இன்று பொறுமை முக்கியம். வணிக விஷயங்களில் சீனியரின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள். உங்கள் தொழில்முறை மற்றும் அணுகுமுறை பற்றி பிறரிடம் நன்மதிப்பு ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தோட்டம்

மகரம்:

இன்று உங்கள் முடிவுகளில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதே போல் நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட பல விஷயங்கள் இன்று நடக்காமல் போகலாம். ஒரு புதிய நபர் உங்களது புகழ் வெளிச்சத்தில் பாதிப்புகளை எற்படுத்த கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளி

கும்பம்:

உங்கள் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டுமானால் உங்களுக்கு உதவி தேவை என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள். காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளை முடிப்பதற்கு இன்று முன்னுரிமை கொடுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கூடு

மீனம்:

இன்று எதிலும் உங்களது வேகம் கூடும். ஆனால் இன்று நீங்கள் உடனடி வெற்றி அல்லது முடிவுகளை எதிர்பார்த்தால் ஏமாற்றமடைவீர்கள். உங்கள் வாழ்க்கை துணை இன்று உங்களை மிகவும் மிஸ் செய்வதை போல உணரலாம். இதனால் அவர்களது வேலையில் கவனச்சிதறல் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆமை

First published:

Tags: Oracle Speaks, Tamil News