ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நிலுவையில் உள்ள வேலைகளை தொடரவும், நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் விஷயங்களை முடிக்கவும் இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். வாக்குவாதத்தின் போது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். சில வேலை தொடர்பான விஷயங்களில் உங்கள் மனதில் தோன்றுவதை பின்பற்றுங்கள்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஒரு டீ எஸ்டட்

ரிஷபம்:

இன்றைய நாளில் உங்களுக்கு கிடைக்கும் ஆற்றல்கள் சாதகமாக இருக்கும். இன்று சில புதிய வேலைகளைத் தொடங்கவும், புதிய வாய்ப்புகளைப் பெறவும் ஏற்ற நாள். நீங்கள் இன்று பிஸியாக இருப்பதன் காரணமாக யாராவது உதவி கேட்டால், நீங்கள் பணிவுடன் மறுக்கலாம். இன்று சிறிய பயணத்தை திட்டமிடுவீர்கள்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – 2 படகுகள்

மிதுனம்:

இன்று உங்களது பலவீனம் அல்லது பாதிக்கப்பட்ட உங்கள் வாழ்வின் மறுபக்கம் பிறருக்கு தெரிய வரலாம். பணியிடத்தில் உங்களது சக ஊழியர் உதவி கேட்கலாம். முடிந்தால் செய்து கொடுக்கவும். சில முன்னேற்றங்களை அடைய உங்களது பேச்சில் சில தந்திரங்கள் தேவைப்படலாம்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – கூழாங்கற்கள்

கடகம்:

வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சில புதிய வாய்ப்புகளை இன்று நீங்கள் பெற கூடும். ஏற்கனவே அறிமுகமான ஒருநபருடன் இன்று நீங்கள் வைக்கும் பார்ட்னர்ஷிப் சாதகமான பலன்களை தரும். உங்களது அவுட்டிங் பிளானை கிளைமேட் காரணமாக ஒத்தி வைக்கலாம்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஒரு கேமரா

சிம்மம்:

நிலுவையில் உள்ள சில பணிகளை இன்று விரைவாக முடிக்க முயற்சிப்பீர்கள். இன்று உங்கள் நாளை இனிமையாக்கும் வகையில் உபசரிப்புகள், பிடித்த உணவுகளை என்ஜாய் செய்வீர்கள். உங்கள் சக ஊழியர்கள் ஒரு தீர்க்க வேண்டிய சிக்கலைக் கொண்டு வரக்கூடும்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – முத்துக்கள்

கன்னி:

பணியிடத்தில் உங்களுக்கான சாதகமான சூழ்நிலை இன்று ஏற்படும். நீண்ட நாள் கழித்து உங்களது நெருங்கிய நண்பர் ஒருவரை சந்திக்கலாம். வீட்டிற்கு வந்த பிறகும் உங்களது அலுவலக வேலைகளை தொடர கூடிய நிலை ஏற்படலாம்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஒரு டோர்ஸ்டெப்

துலாம்:

அக்கறையுடன் இருப்பது உங்களை பலவீனமாக்காது என்பதை உணருங்கள். உங்களது வாதங்களை வலுவாக முன்வைக்க வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள இன்று சிறந்த நாள். உங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஒரு சிவப்பு ஸ்கார்ஃப்

விருச்சிகம்:

கனவுகள் அல்லது கெட்ட கனவுகள் என்பது ஆழ் மனதின் பயம் மட்டுமே, சில நேரங்களில் அவை உங்களுக்கு சில திசைகளை காட்ட கூடும். எதிர் பாலினத்தை சேர்ந்த ஒருவர் உங்கள் கவனத்தை இன்று ஈர்க்க கூடும். பழைய நண்பருடன் இன்று நீங்கள் மீண்டும் இணைவதன் மூலம் நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஒரு செங்கல் சுவர்

தனுசு:

உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். உங்களக்கு நெருக்கமான ஒருவர் இன்று உங்களை மிஸ் செய்வதை போல உணர்வார். வார இறுதியில் ஒரு வெளியூர் பயணம் செல்ல இன்று திட்டமிடுவீர்கள்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஒரு நியான் சைன்

மகரம்:

இன்று பழைய நினைவுகள் உங்கள் நாளை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும், ஏனென்றால் அவர்கள் உங்களிடம் முக்கியமான ஒன்றை பகிர விரும்பலாம். நீடிக்கும் பழைய சிக்கலை சமாளிக்க இன்று நீக்கல் புதிய திட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கலாம்

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஒரு கண்ணாடி பாட்டில்

கும்பம்:

நீண்ட நாளாக உங்களுக்குள் இருக்கும் பயம் இன்று தேவையற்றதாக மாறலாம். சமீபத்திய மாதங்களில் நீங்கள் பெற்ற சில நல்ல விஷ்யங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள். பணியிடத்தில் இன்று நீங்கள் கூடுதல் பொறுப்பு பெற வாய்ப்பு உள்ளது.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஒரு வேப்ப மரம்

மீனம்:

உங்களது உத்தியோகம் அல்லது வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட கூடும். கல்வி வல்லுநர்களுக்கு இன்று வழக்கத்தை விட அதிக வேலை நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் மீது மிகவும் அக்கறையாக இன்று இருப்பீர்கள்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – புலம்பெயர்ந்த பறவைகள்

First published:

Tags: Oracle Speaks, Tamil News