ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 28, 2022) அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 28, 2022) அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும். சமீபத்தில் நடந்த பல விஷயங்கள் உங்களுக்கு அதிகப்படியாக இருப்பதாக தோன்றும். உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் யாரேனும் திட்டங்களில் புதிதாக ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பட்டம்

ரிஷபம்:

புதிய நபர் ஒருவரின் அறிமுகத்தால் உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படலாம். எல்லா குழப்பமான சூழ்நிலைகளும் உங்களை நோக்கி வருவதாக உங்களுக்கு தெரியக்கூடும். கடினமான சூழலில் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்களால் செய்ய முடியாத விஷயத்தை கமிட் செய்து கொண்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – காற்றாலை

மிதுனம்:

அதிக வேலை அல்லது குறுகிய நேரத்தில் வேலை செய்து கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடியால் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். வாழ்க்கையில் நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நிதானமாக திட்டமிடுங்கள். அதிக வருமானம் ஈட்டுவதற்கு புதிய வாய்ப்புகளும் ஆதாரங்களும் கிடைக்கும். உங்களை அணுகுவதற்காக ஒருவர் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி வயர்

கடகம்:

இன்று நீங்கள் உங்களுக்காக ஷாப்பிங் செய்ய திட்டமிடுவீர்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்களை மகிழ்ச்சியாகும் ஆனால் வேலையில் நீங்கள் முடிக்க வேண்டிய அலுவலகத்தில் நீங்கள் முடிக்க வேண்டிய வேலைகளும் காத்திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளிப்பாத்திரம்

சிம்மம்:

இதற்கு முன்பு நீங்கள் மறுத்த ஒரு வாய்ப்பு மீண்டும் உங்களை தேடிவரும். தேவையில்லாமல் ஆய்வு செய்வது குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சரியான முடிவுகளையும் தராது. தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீங்கள் இன்று எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். எனவே கவனமாக செயல்படுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரக்குச்சி

கன்னி:

உங்களுக்கு சவாலான நேரங்களில் தேவையான ஆதரவு தேடி வரும். நீங்கள் கடந்த காலமாக அவசரமாக செயல்பட்டு வருகிறீர்கள். கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – களிமண் ஜாடி

துலாம்:

இன்று நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம். உங்களை அட்மையர் செய்யும் ஒருவருடன் நீங்கள் நேரம் செலவிடலாம். நீண்ட தூரம் நடை பயிற்சி செய்வது நீங்கள் எதிர்பார்க்கும் நிம்மதியைக் கொடுக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தங்க வலை

விருச்சிகம்:

இன்று நீங்கள் சக்திவாய்ந்த இடத்தில் இருக்கிறீர்கள். இன்று பணம் எளிதில் கிடைக்கும். நீங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்று தீவிரமாக விரும்பினால், அது கிடைத்துவிடும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஸ்டோரேஜ் பெட்டி

தனுசு:

உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை தள்ளிப்போகலாம், அல்லது அதை நீங்கள் செய்து முடிக்க நேரமில்லாமல் போகலாம். எனவே, முன்கூட்டியே தயாராக இருப்பது மிகவும் முக்கியம். உங்கள் அப்பா அல்லது அப்பா ஸ்தானத்தில் இருக்கும் நபர் உங்களுக்கு ஏதேனும் வேலை கொடுத்தால், உடனடியாக செய்ய வேண்டும். உங்கள் மன ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பபிள் ரேப்

மகரம்:

எந்த விதமான பயணம் செய்தாலும், உங்களுக்கு அது நிம்மதி தரும். பழைய நண்பர்கள் உங்களை சந்திக்க முயற்சி செய்கிறார்கள். சிதறியிருக்கும் சிந்தனைகளை நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பேப்பர் கப்

கும்பம்:

புதிய நபரிடம் இருந்து அலுவலகத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் உறவுகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது இப்போது சரியாகும். யாரேனும் ஒருவருடைய நஷ்டம் உங்களுக்கு லாபமாக தெரியும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பீச் நிற ரோஜாக்கள்

மீனம்:

மருத்துவப் பிரச்சனையால் உங்கள் கவனம் சிதறலாம். உங்களுடன் நெருக்கமாக இருக்கும் நபரின் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கலாம். வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் துணி

First published:

Tags: Oracle Speaks, Tamil News