ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 25, 2022) குடும்பத்தில் இருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 25, 2022) குடும்பத்தில் இருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களுக்கு யாரேனும் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்திக் கொண்டிருந்தால், அதனை எதிர்கொள்வதற்கான உத்திகளை நீங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். புதிய காரியங்களை மெதுவாக தொடங்கினாலும் அதை செய்து முடிப்பீர்கள். பயண திட்டங்களை ஒத்திவைக்க நேரிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விதை.

ரிஷபம்:

தற்காலிக பந்தங்கள் முடிவுக்கு வர இருக்கின்றன. கடந்த கால கசப்புகளை மறைந்துவிட்டு, அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் இது. உங்கள் சுமைகள் அனைத்தையும் இப்போதே இறக்கி வைத்துவிடுங்கள். இனியும் இவை உங்கள் வாழ்க்கையை பாதிக்கக் கூடாது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளைப்பூ.

மிதுனம்:

நிர்வாகத்தில் உள்ள சீனியருடன் நடக்கும் முக்கிய விவாதம் நிறைய விஷயங்களை புரிய வைக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையை பாதிக்கக் கூடிய சில விஷயங்கள் குறித்து அலட்சியமாக உள்ளீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானவில்.

கடகம்:

சவால் மிகுந்த தருணங்களில் நம்பிக்கையுடன் இருப்பது வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்ல உதவும். உங்களிடம் யாரோ காதலை வெளிப்படுத்த இருக்கிறார்கள். அது உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்து.

சிம்மம்:

போட்டித் தேர்வு அல்லது நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறீர்கள் என்றால் முடிவுகள் உங்களுக்கு சாதகமானதாக அமையும். உங்களிடம் இருக்கும் பதற்ற உணர்வு வெகு விரைவில் மறையும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஃபிளாஸ்க்.

கன்னி:

எதிர்வரும் வாரங்களில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பெரிய நிகழ்வு ஒன்று வெகுவிரைவில் நடக்க இருக்கிறது. உங்களுக்கான புதிய வாய்ப்பு ஒன்றை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டம்.

துலாம்:

உங்களுக்கு அளிக்கும் வாக்குறுதியின்படி சிலர் நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்களை நீங்கள் தவறாக எடை போட்டு விட்டீர்கள் என்று அர்த்தம் அல்ல. உங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை என்றால் மாறுபட்ட திட்டத்தை கடைப்பிடிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரகதக்கல்.

விருச்சிகம்:

புதிய தொழில்களை நீங்கள் தொடங்குகிறீர்கள் என்றால், உங்களுக்கு தேவையான நிதி கிடைக்கும். சர்வதேச வளர்ச்சி நிகழ இருக்கிறது. பழைய நண்பர் ஒருவர் மூலமாக உங்கள் மனதில் ஏக்கம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிப்பி.

தனுசு:

உங்கள் குடும்பத்தினர் அல்லது நெருங்கியவர்கள் மூலமாக வாழ்க்கையில் ஆச்சரியம் காத்திருக்கிறது. திருமண வரன்கள் வர இருக்கின்றன. கோடை காலத்தில் திருமணம் நடக்கலாம். உங்கள் முன்னுரிமைகள் அனைத்தும் நிறைவேறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிவி பழம்.

மகரம்:

வணிகத்தில் பார்ட்னர்ஷிப் சேர அல்லது புதிய தொழில் தொடங்க உங்கள் நண்பர்கள் உங்களை சம்மதிக்க வைப்பார்கள். சாலை பயணத்தில் இது நடக்கலாம். அரசு அதிகாரிகள் சவாலான சூழலை எதிர்கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவார்ட்ஸ்.

கும்பம்:

சில புகார்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிறர் குறித்த உங்களின் நினைப்பில் நல்ல மாற்றம் ஏற்பட இருக்கிறது. குடும்பத்தில் இருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும். செலவுகளை குறைத்துக் கொண்டு, சேமிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அல்லி மலர்.

மீனம்:

உங்களை தற்போது பாதித்துக் கொண்டிருக்கும் சூழலை திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் சீனியர் ஒருவர் சிறப்பான அறிவுரைகளை வழங்குவார். எல்லோரிடமும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலை.

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News