ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 21, 2022) வேலையில் புதிய பொறுப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 21, 2022) வேலையில் புதிய பொறுப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

ஓய்வு எடுத்துக் கொள்வதை நீங்கள் ஒத்திவைத்து வருகிறீர்கள் என்றால், அதற்கான நேரம் இன்று கிடைக்கும். தேவை இன்றி உங்களை ஒருவர் குறை கூறி வருகிறார் என்றால் அதை புறம்தள்ளவும். அலுவலக பணிகளை கனகச்சிதமாக செய்யவும். ஏனென்றால் அது குறித்து ஆய்வு நடைபெறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செலநைட்.

ரிஷபம்:

சமூகத்துடன் கலந்து பழகுவதற்கான வாய்ப்பு நெருங்கி வரும் நிலையில், உங்கள் திட்டங்களை செயல்படுத்துவதற்கான தருணம் இது. உங்களை சுற்றியுள்ள மக்களில் உங்களுக்கான நண்பர்களை தேர்வு செய்து கொள்ளலாம். நிதி சார்ந்த வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பவளம்.

மிதுனம்:

இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கான ஆற்றல் உயர்வாக இருப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடிக்கவும். உங்கள் பாஸ் மூலமாக பெரிய வாய்ப்பு ஒன்று கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயம் மாலையில் நடக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணல் கல்.

கடகம்:

உங்களுக்காக சில பொருட்களை வாங்குவதற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால் அதற்காக தீவிர தன்மையுடன் செயல்படுவீர்கள். பணியில் கடைப்பிடிக்க வேண்டிய காலக்கெடுகள் இருக்கும். வீட்டு பணியாளர் மூலமாக அன்றாட பணிகளில் தடைகள் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரம்.

சிம்மம்:

இன்று குழுவோடு இணைந்து பணி செய்வீர்கள். மற்றவர்களுடன் இணைந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் மாபெரும் வாக்குவாதம் ஏற்படலாம். அதனை கடந்து செல்லுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்டீல் பாக்ஸ்.

கன்னி:

உங்கள் வேலை தடைபடுகிறது மற்றும் நீங்கள் மற்றொருவரின் பொறாமையை கடந்து செல்ல வேண்டுமென்றால், அதை இப்போதே செய்யவும். நீண்ட கால திட்டங்கள் பலன் உள்ளதாக அமையும். வீட்டிற்கு இரவில் விருந்தினர்கள் வருவர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரூபி.

துலாம்:

உங்கள் உடன் பிறந்தவர்களுடன் நேரம் செலவழிப்பதற்கான நாள் இது. பணிச்சுமை அதிகரிக்கும் மற்றும் உங்கள் பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டியிருக்கலாம். தேவையற்ற ஸ்ட்ரெஸ் காரணமாக எரிச்சல் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீலமணிக்கல்.

விருச்சிகம்:

உங்கள் இயல்பு தன்மையை நீங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை என்பதால், உங்களை நினைத்து நீங்கள் பெருமை கொள்ளலாம். ஆனால், அதனை தற்போது மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் ஏற்பட்டிருக்கிறது. இன்றைய நாள் ஆற்றல் மிகுந்ததாக உள்ளது. நீங்கள் தொடங்கும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள்.

தனுசு:

தொலைதூரத்தில் இருந்து வரும் அழைப்பு உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். இன்று சிறப்பு மிகுந்த நாளாக உணர்வீர்கள். குறுகிய கால செயல் திட்டங்களை செயல்படுத்தலாம். தற்போது உங்களுடைய பந்தங்களின் உடனடி கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு பவளம்.

மகரம்:

தினசரி பணி ஒன்றை தொடங்குவதற்கான தருணம் இது. ஒரு புத்தகம் அல்லது கட்டுரை உங்களுக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக இருக்கும். நீங்கள் தொலைத்து விட்டதாக கருதிய சிறப்பு வாய்ந்த பொருள் ஒன்றை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் தேவைகளை முன்னுரிமைப்படுத்துங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில பறவைகள்.

கும்பம்:

நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் மந்தமாக நடைபெறுவதை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு நடக்கவும். எதிர்மறையான உணர்வுகளை கைவிடவும். இன்றைய நாள் நிலையானதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செவ்வந்திக்கல்.

மீனம்:

நல்லதொரு பரிந்துரை மூலமாக நேர விரையம் தவிர்க்கப்படும். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் நீங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கவும். உங்களை இலகுவானவராக மாற்றிக் கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கார்னெட் கல்.

First published:

Tags: Oracle Speaks, Tamil News