ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 09, 2022) புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டு.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 09, 2022) புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டு.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். தொழிலில் புதிய நட்பு உண்டாகும். நிகழ்காலம் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை கருத்தில் கொண்டு சுறுசுறுப்பாக கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஏரி

ரிஷபம்:

வேலை செய்யும் மனநிலையில் தொய்வு ஏற்படலாம், இதனால் அலுவலகத்தில் கெட்ட பெயர் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கவனமுடன் செயல்படுவது நல்லது. அலுவலகம் மற்றும் வேலை சம்பந்தமாக சில சவால்களை சந்திக்க வேண்டி வரலாம். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - தேனி

மிதுனம்:

உங்களை மற்றவருக்கு புரிய வைப்பதற்காக சில கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுக்கு பிடிக்காத சில சூழ்நிலைகள் உண்டாவதை தவிர்ப்பதற்கு முயற்சி செய்வீர்கள். உங்களுடன் வேலை பார்க்கும் ஒருவர் உங்களைப் பற்றிய தவறான பிம்பத்தை பொதுவெளியில் உண்டாக்க முயற்சி செய்யலாம். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - வெண்கல பணப்பை

கடகம்:

உங்களை சுற்றி எப்போதும் ஒரு நேர்மறையான அதிர்வுகளோடு நாள் முழுவதும் காணப்படுவீர்கள். மற்றவர்களை எடை போடுவதை தவிர்த்து விட்டு அவர்கள் அப்படித்தான் என்பதை ஏற்றுக் கொள்வது நல்லது. நீங்கள் அதிகம் நம்பும் நபர்களைப் பற்றி மீண்டும் ஒருமுறை சிந்திப்பது பல பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஒரு டம்ளர்

சிம்மம்:

உங்களை எப்போதும் ஒருவித உத்வேகத்துடன் வைத்துக்கொண்டு புது விஷயங்களை கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வீட்டில் உங்களுடைய நடத்தையினால் விமர்சிக்கப்படுவீர்கள். பணம் வரவு செலவில் அதிக கவனமுடன் செயல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஊன்றுகோல்

கன்னி:

உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் ஒருவரை இன்று சந்திக்க வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட நபரை சந்தித்தால் அவரை நிராகரிக்க வேண்டாம். சிறு பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கருப்பு படிகம்

துலாம்:

உறுதியாக முடிவெடுக்க முடியாத சில விஷயங்களை தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்துடன் சில மகிழ்ச்சியான நேரங்களை செலவிடுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தம் அல்லது புதிய வேலைகள் உங்களை தேடி வரலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - தேக்கு மரச்சாமான்

விருச்சிகம்:

அலுவலகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும் நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து உங்களை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். பல விஷயத்தில் செலவுகள் அதிகம் செய்வதை தவிர்த்து பணத்தை சேமிக்க அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மூங்கில்

தனுசு:

எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்த்து பிரச்சினைகளுக்கான தீர்வை தேட முயற்சி செய்ய வேண்டும். எப்போதும் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது சூதாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது. புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - குவார்ட்ஸ்

மகரம்:

குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு உடல் நலக் கோளாறுகள் உண்டாக்கலாம் எதிர்பாராத அவசர சூழ்நிலைகள் அல்லது ஆபத்துக்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் நம்பிக்கையான ஒருவரின் உதவியை தேடி பெறுவது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட சில சங்கடங்கள் உருவாகலாம் மனைவியிடம் கலந்தாலோசித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது நல்லது.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - மரம் ஏறுபவர்

கும்பம்:

சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் இருக்காது. வீட்டில் இருந்து மிக நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்கள் மன அழுத்தங்களை புறம் தள்ளிவிட்டு புதிய தீர்வுகளை கண்டறிவீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - நீல மணி

மீனம்:

இன்று நாள் மிகவும் நல்ல நாளாக அமையும். உங்களுக்கு பிடித்த சில செயல்களை செய்து கொண்டு மன அழுத்தம் இன்றி இருப்பீர்கள். தேவைப்பட்ட நேரங்களில் உதவிகள் தானாக வந்து சேரும் ஏதேனும் முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால் அதை இன்று செய்வது மிகவும் நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மயிலிறகு

First published:

Tags: Oracle Speaks, Tamil News