மேஷம்:
நீண்ட நாளாக சோர்வுடன் இருந்த நீங்கள் இன்று மனஅமைதி மற்றும் ரிலாக்ஸ் உணர்வுடன் நாளை துவங்குவீர்கள். விரைவில் துவங்க உள்ள புதிய திட்டத்திற்கான பணிகளில் இன்று தீவிரமாக ஈடுபடுவீர்கள். நெருங்கிய ஆனால் மறந்த நண்பர்களுடன் இன்று நேரத்தை செலவிடுவது உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இலவங்கப்பட்டை
ரிஷபம்:
இன்று உங்களது மனதை நீங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு வாய்ப்பு முழுவதும் ஆக்கிரமித்து கொண்டிருக்கும். என்ன நடந்தாலும் வெளிப்படையாக உணர்ச்சிவசப்படுவதிலிருந்து சற்று விலகி இருங்கள். நீங்கள் நிர்ணயித்து வைத்திருந்த வரம்புகளை இன்று தளர்த்த கூடிய நிலை ஏற்படலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளாசிக் நாவல்
மிதுனம்:
உங்கள் மனதில் உதிக்கும் ஒரு புதிய யோசனை அடுத்த சில நாட்களுக்கு உங்களுக்கு தூண்டுகோலாக இருக்கலாம். புதிய திட்டத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சில நல்ல விஷயங்களில் ஈடுபட நீங்கள் சிறிது தனிமையை தேட முயற்சிப்பீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழங்கால ஃபர்னிச்சர்கள்
கடகம்:
முக்கியமான சில விஷயங்களுக்கான அறிகுறிகள் நுட்பமாக இருந்தாலும் அதை சரியாக கவனித்து செயல்படுவீர்கள். உங்களது நெருங்கிய நண்பர் சரியான நேரத்தில் உங்களுக்கு சரியான ஆலோசனைகளை இன்று வழங்கலாம். இன்று நீங்கள் செய்யும் உத்தியோகபூர்வ பயணம் உங்களின் இமேஜை உயர்த்தி கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ணமயமான கூழாங்கற்கள்
சிம்மம்:
இன்று உங்களுக்கு வழக்கமான ஒரு நாளாக இருந்தாலும் நீங்கள் படிப்படியான முன்னேற்றத்தை காண்பீர்கள். இன்று உங்கள் பேச்சில் கவனம் தேவை, இல்லை என்றால் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய ஆலமரம்
கன்னி:
இன்று உங்கள் மனதிற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கலாம். எனினும் சிறிய வெற்றிகள் கூட உங்களுக்கு மிகவும் முக்கியம். எனவே சிறந்த முடிவுகளை பெற நீங்கள் திட்டமிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இன்று நீண்ட பயணத்திற்கு திட்டமிடலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கப் கிரீன் டீ
துலாம்:
கடந்த காலத்தில் நீங்கள் கற்று கொண்ட அனுபவங்களை இன்று நீங்கள் அவற்றைச் செயல்படுத்தலாம். உங்கள் குடும்பத்தினருக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க சந்தேகங்களை இன்று தெளிவுபடுத்துவீர்கள். பணியிடத்தில் கொடுக்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தீவிர கவனம் செலுத்துங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு பேனா
விருச்சிகம்:
ஒரு சில புதிய விஷயங்களால் நீங்கள் சில நாட்களாக தூக்கத்தை தொலைத்திருக்கலாம். எனினும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நேரம் கொடுங்கள். நெருங்கிய நண்பரிடமிருந்து உங்களுக்கு வரும் அழைப்பு உங்களை உற்சாகப்படுத்தும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு பேனா
தனுசு:
மேம்பட்ட படிப்புகள் அல்லது கற்றல் பற்றிய தலைப்புகள் இன்று உங்கள் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒரு நபர் மீது உங்களுக்கு இன்று சில புதிய உணர்வுகள் உருவாகலாம். பணவரவு இயல்பாக இருக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வாலட்
மகரம்:
உங்கள் வசம் இருந்து தொலைந்து போன முக்கியமான ஆவணங்கள் அல்லது பொருட்கள் இன்று உங்களு மீண்டும் கிடைக்க கூடும். வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றாலும் போதுமான ஓய்வு எடுப்பது உங்கள் செயல்திறனை மேம்படுத்தும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காப்பர் ஆர்டிகிள்
கும்பம்:
சில புதிய விளையாட்டுகளில் உங்களுக்கு ஈர்ப்பு ஏற்படலாம். இன்று எந்த ஒரு மருத்துவ தேவைக்கும் தயாராக இருங்கள். இன்று உங்களுக்கு வரும் ஒரு போன் கால் உங்களது இன்றைய மொத்த பிளான்களையும் மாற்ற கூடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கோல்டன் வாட்ச்
மீனம்:
உங்களுக்கு இன்று சுய சந்தேகம் இருந்தால், உங்களது நலம் விரும்பி ஒருவரை அணுகவும். சர்ப்ரைஸ்களை பாராட்டும் மனநிலையில் நீங்கள் இல்லாமல் இருக்கலாம். இதனால் உங்களை சுற்றியுள்ளவர்கள் ஏமாற்றம் அடையலாம். உங்களது பழைய நட்பு இன்று ஒரு சிக்கலான நிலையை அடையலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிந்த வானம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News